வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (24/09/2018)

கடைசி தொடர்பு:15:40 (24/09/2018)

டாப் 10 ஸ்கூட்டர்! - தொடர்ந்து 3 வது முறையாக க்ரேஸியாவைத் தோற்கடித்த என்டார்க்!

ந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டாப் 10 ஸ்கூட்டரில், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹோண்டா Grazia-வைவிட டிவிஎஸ் என்டார்க் அதிகம் விற்பனையாகி முன்னிலையில் உள்ளது.என்டார்க்

ஜூன் மாதம் அதிகம் விற்பனையான டாப் 10 கூட்டரில் 9 வது இடத்தில் டிவிஎஸ் என்டார்க்கும் 6 வது இடத்தில் ஹோண்டா Grazia-வும் இருந்தன. ஆனால், ஜூலை மாதமே ஹோண்டா Grazia-வை பின்னுக்குத் தள்ளி 9 வது இடத்தில் விற்பனையாகிக்கொண்டிருந்த என்டார்க் 7 வது இடத்துக்குச் சென்றது. அதேபோல், தொடர்ந்து ஆகஸ்ட் மாதமும் மூன்றாவது முறையாக ஹோண்டா Grazia-வை பின்னுக்குத்தள்ளி என்டார்க் முன்னிலைக்கு வந்துள்ளது. மேலும் டாப் 10 பட்டியலில் ஹோண்டா Grazia 10 வது இடத்துக்குத் தள்ளப்பட்டது. 

தொடர்ந்து சில மாதங்களாகவே ஹோண்டா ஆக்டிவா மற்றும் டிவிஎஸ் ஜூபிட்டர் முதல் இரண்டு இடத்திலேயே உள்ளன. மேலும், சுஸுகி ஆக்ஸஸ் ஜூலை மாதத்தைவிட ஆகஸ்ட் மாதத்தில் 11,840 வாகனங்கள் அதிகம் விற்பனையாகி, தொடந்து 3 வது இடத்திலேயே உள்ளது. அதேபோல், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தைக் காட்டிலும், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுஸுகி ஆக்ஸஸ், டிவிஎஸ் என்டார்க், ஹீரோ டூயட், ஹீரோ ப்ளெஷர் ஆகிய வாகனங்கள் அதிகளவில் விற்பனையாகியுள்ளன. 

ஆகஸ்ட் மாதம் விற்பனையான டாப் 10 ஸ்கூட்டர்கள்!

மாடல்     யூனிட்
ஹோண்டா ஆக்டிவா 3,10,851
டிவிஎஸ் ஜூபிட்டர் 79,223
சுஸுகி ஆக்ஸஸ் 48,436
ஹோண்டா டியோ 39,068
ஹீரோ மேஸ்ட்ரோ 31,691
ஹீரோ டூயட் 22,036
யமஹா ஃபேஸீனோ 20,576
டிவிஎஸ் என்டார்க் 18,024
ஹீரோ ப்ளெஷர் 17,912
ஹோண்டா Grazia 15,375

ஹோண்டா Grazia-வைவிட டிவிஎஸ் என்டார்க் அதிகம் விற்பனையாகித் தொடர்ந்து மூன்றாவது முறையாக முன்னிலையில் இருந்தாலும், ஜூலை மாதத்தைக் காட்டிலும் ஆகஸ்ட் மாதத்தில் டிவிஎஸ் என்டார்க் மாடல் குறைவாக விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க