"வாவ்" சொல்லவைக்கும் ஹோண்டாவின் WR-V - Sponsored Content | Honda WR-V amazing features - Sponsored Content

வெளியிடப்பட்ட நேரம்: 11:43 (25/09/2018)

கடைசி தொடர்பு:12:45 (25/09/2018)

"வாவ்" சொல்லவைக்கும் ஹோண்டாவின் WR-V - Sponsored Content

ஒரு கார் வாங்க வேண்டும். பார்க்க பெரிதாக இருக்க வேண்டும் ஆனால் பெரிய கார் வேண்டாம்... என நினைப்பவர் என்றால் காம்பேக்ட் எஸ்யூவி-தான்உங்களுக்கான கார்! எஸ்.யூ.வி. போன்ற தோற்றம் ஆனால் சிக்கனமான காரின் அம்சங்கள் என கலந்துகட்டி சந்தையை கலக்கிவரும் இந்த காம்பேக்ட்எஸ்.யூ.வி.க்கள் குடும்பத்துக்கு ஏற்ற கார்களாக வலம்வருகின்றன. இந்த செக்மென்டில் இந்தியர்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதன் காரணமாக பலநிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு தத்தம் காம்பேக்ட் எஸ்.யூ.வி.-க்களை அறிமுகம் செய்தும் வருகின்றன. புகழ்பெற்ற ஹோண்டா நிறுவனம் தனதுபங்கிற்கு அதன் புதிய தயாரிப்பான ‘ Honda WR-V’-ஐ களமிறக்கியுள்ளது. W-RV எப்படி? பார்ப்போம்...

பார்க்க... ரசிக்க...

DRL உடன் இருக்கும் ஹெட்லைட்ஸ் புதுசு. ‘L’ வடிவ டெய்ல் லைட்டுகள் WR-Vக்கு அழகு சேர்க்கின்றன. நம்பர் பிளேட் கீழிறங்கியிருக்கிறது. ஜாஸில்  195/16 இன்ச்அலாய் வீல்கள். நீள/அகலத்திலும் WR-V, ஹோண்டாவின் ஜாஸ் காரை விடப் பெரியது. 44 மிமீ நீளம், 40 மிமீ அகலம், 57 மிமீ உயரம், 25 மிமீ வீல்பேஸ் என்றுஎல்லாமே ஜாஸைவிட அதிகம்ம்ம்!

கிரவுண்ட் கிளியரன்ஸும் சூப்பர், ஜாஸைவிட 23 மிமீ அதிகமாக, அதாவது 188 மிமீ உயர்ந்திருக்கிறது. ஹோண்டாவின் கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகமான கார்என்ற பெருமையைத் தட்டிச் செல்கிறது WR-V.

வசதிகள் எப்படி?

ஹோண்டா கார்களின் கேபின்கள், பெரும்பாலும் பிராக்டிக்கலாகவே இருக்கும். WR-V-யின் கேபினும் அப்படித்தான். சிம்பிளான கறுப்பு நிறம் கண்ணைஉறுத்தவில்லை. சீட்கள் வேரியன்ட்களுக்குத் தகுந்தாற்போல் கறுப்பு - நீலம், கறுப்பு - சில்வர் என்று கிடைக்கிறது, ஆர்ம் ரெஸ்ட்டும் இருப்பதால் லாங் டிரைவில்ஹாயாக இருக்கலாம்! வழக்கமான USB போர்ட்டும், 12V சாக்கெட்டும் உண்டு. 7.0 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்; அதில் பெரிய ஐகான்கள்,வாய்ஸ் கமாண்ட் சிஸ்டம், வீடியோ ப்ளேபேக் ஆப்ஷன், சாட்டிலைட் நேவிகேஷன் - எல்லாம் இருக்கு எங்ககிட்ட என சவால் விடுகிறது WR-V. 

பெரிய கார் என்பதால், ரிவர்ஸ் கேமரா கொடுத்திருக்கிறார்கள். இந்த செக்மென்ட்டில் முதன்முறையாக எலெக்ட்ரிக்கல் சன் ரூஃப் கொண்ட WR-V-க்கு ஒருபெரிய லைக் பட்டன். டீசல் மாடலின் டாப் வேரியன்ட்டில் மட்டும் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், க்ரூஸ் கன்ட்ரோல் உண்டு. சின்னச் சின்னப் பொருள்கள்வைத்துக்கொள்ள இடங்கள், பாட்டில் ஹோல்டர்கள் சூப்பர். இப்படி ஹோண்டாவைப் பாராட்டிக்கொண்டே போகலாம். 

5 சீட்டர்தான். ஆனால், இடவசதி தாராளம். ஹெட் ரூம், ஷோல்டர் ரூம் தேவைக்கேற்ப உள்ளன. பூட் ஸ்பேஸ் - 363 லிட்டர்கள். பொருள்களை எடுத்து வைப்பதுசுலபமாகவே உள்ளது...

வரும்போதே பெட்ரோல், டீசல் என இரண்டு மாடல்களிலும் வருவது ஹோண்டா கார்களின் ஸ்டைல். WR-V-யும் அப்படித்தான். 1.2 லி பெட்ரோல், 1.5 லி டீசல் எனஇரண்டு மாடல்களிலும் வந்துவிட்டது. பெட்ரோல் வேரியன்ட் 90bhp பவரும், 11.0kgm டார்க்கும் அளிக்கிறது.  பெட்ரோல் இன்ஜினின் இனிஷியல்ஆக்ஸிலரேஷனுக்காக கியர்பாக்ஸில் வேலை செய்துள்ள ஹோண்டவுக்கு நன்றிகள்... 1.5 லி டீசல் இன்ஜினுக்கு 100bhp பவர். பொதுவாகவே ஹோண்டாவின் டீசல்இன்ஜின், ஸ்மூத்தான பவர் டெலிவரியில் எப்போதும் குறை வைக்காது. சரிதான். ஓட்டுவதற்கு ஈஸியாக இருப்பதாகவே டேஸ்ட் டிரைவ் செய்த பலரும்கூறுகின்றனர்!

பாடிரோல் நன்றாகவே கட்டுக்குள் வந்திருக்கிறது. 16 இன்ச் 195/60 செக்ஷன் டயர்கள் மேடு பள்ளங்களை எளிதாகச் சமாளிக்கின்றன, WR-V நகரத்துக்கு தகுந்ததேர்வு என்று தெரிகிறது. ஸ்டீயரிங், குறைந்த - அதிக வேகங்களிலும் நல்ல கன்ட்ரோல் தருகிறது. WR-V-யின் டீசல் வேரியன்ட்டின் உச்சபட்ச மைலேஜ் 25.5 கி.மீ,பெட்ரோல் வேரியன்ட் - 17.5 கி.மீ தருகிறது.

தி கிரேட் ஹோண்டா ஃபெஸ்ட்:

ஹோண்டா WR-V கார் வாங்குவோருக்கு லண்டன் மற்றும் பாரீஸ் நகரங்களுக்குச் செல்லும் வாய்ப்பை வழங்குகிறது ஹோண்டா. நவம்பர் 7, 2018க்குள்ஹோண்டா கார் வாங்கி நீங்களும் சுற்றுலாப் பரிசை வெல்லலாம்!

இப்போதே ஹோண்டா W-RVயை ஓட்டிப் பார்க்க வேண்டும் என நினைப்பவர்கள், மேலும் கார் பற்றிய விவரங்கள் தெரிந்துகொள்ள நினைப்பவர்களும்கீழ்க்கண்ட  படிவத்தை பூர்த்தி செய்க... 

விவரங்களைப் பெற

Dealer contact number : +91_9788552065

நீங்க எப்படி பீல் பண்றீங்க