வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (25/09/2018)

கடைசி தொடர்பு:13:46 (25/09/2018)

மணப்பெண்ணா நீங்க ஜொலிக்க வாணி போஜன் தரும் டிப்ஸ்! !# SignatureTips

இந்த முறை, மணப்பெண் அலங்காரம் எப்படிச் செய்வது என்று, தன் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்  உதவியுடன்  சொல்லித்தந்திருக்கிறார், வாணி போஜன்.  

''பிரைமர், மாய்ஸ்ச்சரைசர், கன்சீலர்... இந்த மூன்றையும் அப்ளை பண்ணிய பிறகுதான் பிரைடல் மேக்கப் போடவே ஆரம்பிக்கணும். ஏற்கெனவே நான் சொன்ன மாதிரி, முகத்துக்கு ஏத்த ஃபவுண்டேஷனை எப்பவும் தேர்ந்தெடுங்க. பவுண்டேஷன் நல்லா ஈவனா முகத்துல பிளென்ட் ஆகணும். 

வாணி

அடுத்ததா, கண்கள் மேலே இருக்கிற கருவளையங்களை கலர் கரெக்‌ஷன் செய்யணும். பிறகு, கோல்டன் கலர் ஐ ஷேடோ,  ஐ லைனர்,  ஐ லேஷஸ் ஒட்டினால், ஐ மேக்கப் ஓகே. புருவங்கள் அடர்த்தியாகத் தெரிய, டார்க் பிரவுன் ஐ ப்ரோ ஃபில்லிங் பென்சிலால டார்க் பண்ணுங்க.  இப்ப, ஸ்கின் டோன் நிறத்தைவிட கூடுதலா கான்டரிங் செய்து கண், மூக்கு, கன்னத்தை ஷார்ப்பா காண்பிக்கணும். கடைசியா, கன்னத்தில் பிங்க் கலர் பிளஷ் யூஸ் பண்ணி, காஸ்ட்யூமுக்கு ஏத்த மாதிரி லிப்ஸ்டிக் போட்டால், மணமேடையில் உட்கார நீங்க ரெடி.