சென்னையில் செப்டம்பர் 30-ம் தேதி மியூச்சுவல் ஃபண்ட் கருத்தரங்கு! | mutual fund meeting at chennai!

வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (25/09/2018)

கடைசி தொடர்பு:15:15 (25/09/2018)

சென்னையில் செப்டம்பர் 30-ம் தேதி மியூச்சுவல் ஃபண்ட் கருத்தரங்கு!

நாம் சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பதற்கும், முதலீடு செய்வதற்கும் பல வழிகள் இருந்தாலும் முதலீட்டைப் பெருக்கவும், அதிலிருந்து நிரந்தர வருமானம் கிடைக்கவும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களே நம்பிக்கையான முதலீடாக இருக்கின்றன. முதலீடு செய்யும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறுவிதமான இலக்குகள் உள்ளன. அந்தந்த இலக்குகளுக்கேற்ப நம் முதலீட்டு முறை இருக்க வேண்டும். அத்தகைய வாய்ப்பை மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் நாம் எதிர்பார்க்கலாம். 

குழந்தைகளின் உயர்கல்விக்குத் தேவைப்படும் பணத்துக்கான முதலீடு, திருமணச் செலவுக்கான முதலீடு, மாதாந்திர வருமானத்துக்கான முதலீடு, ஓய்வுக்காலத்துக்கான முதலீடு என ஒவ்வொன்றையும் திட்டமிட்டு முதலீடு செய்வது மியூச்சுவல் ஃபண்டின் சிறப்பம்சமாகும். ஒவ்வொன்றுக்கும் தகுந்தாற்போல் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இருக்கின்றன. இத்திட்டங்கள் குறித்து தெளிவான பார்வை கிடைப்பதற்காக, நாணயம் விகடன் சார்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு விழிப்பு உணர்வுக் கருத்தரங்குகள் நடத்தப்பட்டுவருகின்றன. 

மியூச்சுவல் ஃபண்ட்

அதன் தொடர்ச்சியாக, வருகின்ற செப்டம்பர் 30, 2018, ஞாயிற்றுக்கிழமை, சென்னையில், நாணயம் விகடனும், ஐ.சி.ஐ.சி.ஐ. புரூடன்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் இணைந்து `வளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு!' என்ற விழிப்பு உணர்வுக் கருத்தரங்கத்தை நடத்துகிறார்கள். அன்றைய தினம், காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, சென்னை, சேலையூரில், வேளச்சேரி மெயின் ரோட்டில் அமைந்துள்ள வாசுதேவ திருமண மாளிகையில் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

அந்த நிகழ்ச்சியில் மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் சொக்கலிங்கம் பழனியப்பன் மற்றும் ஐசிஐசிஐ புரூடன்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தென்மண்டல சில்லறை விற்பனை & விநியோகப்பிரிவின் தலைவர் எஸ்.ஹரீஸ் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள எஸ்.எம்.எஸ். மூலம் பதிவு செய்ய VIKATAN <space> பெயர் <space> ஊர் <space NVMFCN> என டைப் செய்து 56161 என்ற எண்ணுக்கு அனுப்பவும். அல்லது 9790990404 என்ற எண்ணுக்கு கால் செய்து புக் செய்யவும். முந்துபவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி இலவசம்.


[X] Close

[X] Close