Published:Updated:

எல்லாப் புகழும் வாசகருக்கே! - நன்றி நன்றி நன்றி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
எல்லாப் புகழும் வாசகருக்கே! - நன்றி நன்றி நன்றி!
எல்லாப் புகழும் வாசகருக்கே! - நன்றி நன்றி நன்றி!

எல்லாப் புகழும் வாசகருக்கே! - நன்றி நன்றி நன்றி!

பிரீமியம் ஸ்டோரி

ண்மையை உரக்கச் சொல்வதும், செய்திகளை நேர்மையோடும், நடுநிலைமையோடும் தருவதுதான் ஆனந்த விகடனின் பணி. அதனாலேயே ஆனந்த விகடனுக்கு வாசகர்களின் ஆதரவு எப்போதும் உண்டு. அதை நிரூபிக்கும் வகையில் அமைந்திருக்கிறது ‘Indian Readership Survey - 2017’ன் முடிவுகள்.

இந்தியன் ரீடர்ஷிப் சர்வேயின்படி தமிழ்ப் பத்திரிகைகளில் நம்பர்-1 என்கிற இடத்தையும், இந்திய அளவில் மாநில மொழிப் பத்திரிகைகளில் இரண்டாவது இடத்தையும் பிடித்திருக்கிறது உங்களின் ஆனந்த விகடன்.

இந்தச் சாதனை சாத்தியப்பட்டது வாசகர்களாகிய உங்களால்தான். ‘உண்மையை உரக்கச் சொல்வதும், செய்திகளை நேர்மையோடும், நடுநிலைமையோடும் தருவதுதான் ஆனந்த விகடனின்  தனிச்சிறப்பு’ என்ற வாசகர்களின் பாராட்டுகளோடு, இப்போது  ‘இந்தியன் ரீடர்ஷிப் சர்வே - 2017’ன் முடிவுகள் தந்திருக்கும் அங்கீகாரமும் இணைந்திருக்கிறது.

எல்லாப் புகழும் வாசகருக்கே! - நன்றி நன்றி நன்றி!

கடந்த பல ஆண்டுகளாக இந்திய அளவில் தமது சர்வேக்களை நடத்திவரும் ரீடர்ஷிப் கவுன்சில் ஆஃப் இந்தியா, மீடியா ரிசர்ச் யூஸர்ஸ் கவுன்சிலுடன் இணைந்து இந்தக் கணக்கெடுப்பை நடத்தியிருக்கிறது. இந்தியா முழுவதும் உள்ள 70-க்கும் மேற்பட்ட மாநகரங்கள், 1100-க்கும் மேற்பட்ட நகரங்கள்,  2800-க்கும் மேற்பட்ட கிராமங்கள் என்று இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 2014-ல் வெளியான சர்வே முடிவுகள் குறித்துப் பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. அதனாலேயே மூன்று வருடங்களாக இந்தக் கணக்கெடுப்புகள் நடத்தப்படாமல், ஆய்வுமுறைகளில் பெரிய மாற்றங்களோடும், இன்னும் அதிக பயனாளர்களின் மாதிரியோடும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி ஒரு வாசகர் ஓர் இதழைப் படிக்கும் காலம், வாசகரின் இருப்பிடம் என்று பலவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டனர். இதுவரை இல்லாத அளவில் 3.2 லட்சம் வாசகர்களின் மாதிரிகள்   இந்த   ஆய்வில் மேற்கொள்ளப்பட்டன. 

“ஐஆர்எஸ்,  இரண்டு தசாப்தங்களாக இந்திய இதழியலில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை அறிவோம். அதனாலேயே 2017-ம் ஆண்டின் ஆய்வுகள் நேர்மையோடும், நம்பகத்தன்மையோடும் மேற்கொள்ளப்பட எல்லா முயற்சிகளையும் எடுத்தோம்” என்று சொல்லியிருக்கிறார் மீடியா ரிசர்ச் யூஸர்ஸ் கவுன்சிலின் தலைவர் ஆஷிஷ் பாசின். இத்தகைய கறாரான, அறிவியல்பூர்வமான ஆய்வின் முடிவுகள் ஆனந்த விகடனுக்கு நம்பர் ஒன் இடத்தைத் தந்திருப்பது நம் எல்லோருக்கும் பெருமகிழ்ச்சி அளிக்கும் செய்தி.

வாசகர்கள் எதை விரும்புகிறார்களோ அதை அளிப்பதும், வாசகர்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கே சென்று அவர்களை மகிழ்விப்பதுமே எங்களின் முதன்மையான பணி என்று கருதுகிறோம். அதனால்தான் இணையம், வீடியோக்கள், சமூக வலைதளங்கள் என்று பல வடிவங்களில் வாசகர்களை மகிழ்விக்கும் எங்கள் பணியைத் தொடர்ந்துகொண்டிருக்கிறோம். எல்லா முயற்சிகளுக்கும் தாயாக இருப்பது வாசகர்களாகிய நீங்கள்தான்.

நம்பர் 1 என்கிற இனிய செய்தியோடு மற்றுமொரு நல்ல செய்தியையும் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். ஆனந்த விகடன் புதுப்பொலிவுக்குத் தயாராகிவிட்டது. புதுமையான பல தொடர்கள், பகுதிகள், கட்டுரைகள், எதிர்பாராத இன்ப அதிர்ச்சிகள் என அமர்க்களமான, அட்டகாசமான மாற்றத்துக்குத் தயாராகிறது ஆனந்த விகடன். வாசகர்களாகிய நீங்கள் எதிர்பார்க்கும் அத்தனை விஷயங்களையும் சேர்த்து உங்களை பிரமிக்கவைக்க ஆசிரியர் குழு பல புதிய திட்டங்களோடு களமிறங்கவிருக்கிறது. விரைவில் புதிய ஆனந்த விகடன் உங்கள் கைகளில் தவழும்.

புதுப் பொலிவு, புதிய மாற்றம் என எல்லாமே ஒரே இதழில் முடிந்துவிடுகிற விஷயமல்ல... உங்கள் ஒவ்வொரு கருத்தும் விமர்சனமும் கவனிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் உற்சாகப்படுத்தும் மாற்றங்கள் இதழுக்கு இதழ் தொடரும். உங்களின் மேலான கருத்துகளே எங்களுக்கான படிப்பினைகள், எங்கள் பயணத்தின் படிக்கட்டுகள்.

என்றும் உங்களுடன்,

பா.சீனிவாசன்,
நிர்வாக இயக்குநர்,
விகடன் குழுமம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு