Published:Updated:

“ராக்கெட் தொழில்நுட்பத்தால் பாமர மக்களும் பயன்பெறுவார்கள்!”

“ராக்கெட் தொழில்நுட்பத்தால் பாமர மக்களும் பயன்பெறுவார்கள்!”
பிரீமியம் ஸ்டோரி
“ராக்கெட் தொழில்நுட்பத்தால் பாமர மக்களும் பயன்பெறுவார்கள்!”

ஞா.சக்திவேல் முருகன், படம்: கே.ராஜசேகரன்

“ராக்கெட் தொழில்நுட்பத்தால் பாமர மக்களும் பயன்பெறுவார்கள்!”

ஞா.சக்திவேல் முருகன், படம்: கே.ராஜசேகரன்

Published:Updated:
“ராக்கெட் தொழில்நுட்பத்தால் பாமர மக்களும் பயன்பெறுவார்கள்!”
பிரீமியம் ஸ்டோரி
“ராக்கெட் தொழில்நுட்பத்தால் பாமர மக்களும் பயன்பெறுவார்கள்!”

லகமே வியந்துபார்க்கும் இந்தியாவின் அறிவு உச்சமான இஸ்ரோவின் தலைவராகியிருக்கிறார்  ஒரு தமிழர். நாகர்கோவில் அருகே சரக்கல்விளை என்னும் கிராமத்தில் விவசாயிக்கு மகனாகப் பிறந்த கே.சிவன்தான் இப்போது இஸ்ரோ தலைவர்.

“கடந்த ஆண்டு இதே ஜனவரி மாதத்தில் ஆனந்த விகடனின் நம்பிக்கை மனிதர் விருது கிடைத்தது. இப்போது இஸ்ரோ தலைவர் பதவி.  மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன்” - பொக்கே குவியல்களுக்கு மத்தியில் பூப்போன்ற பூரிப்பூடனேயே பேசுகிறார் சிவன்.

 ``வாழ்த்துகள் சார். இஸ்ரோவின் தலைவராகி யிருக்கிறீர்கள். எப்படி உணர்கிறீர்கள்?’’

``நிறைவாக உணர்கிறேன். எங்கோ குக்கிராமத்தில் பிறந்தவனுக்கு வானத்தைப் பார்த்து உதித்த கனவு இது. இன்று நிறைவேறியிருப்பதில் அளவற்ற மகிழ்ச்சி. என் அப்பா மாந்தோட்ட விவசாயி. தோட்டத்தில் விளையும் மாங்காய்களை விற்பனை செய்து என்னுடைய கல்விக் கட்டணத்தைச் செலுத்திப் படிக்க வைத்தவர் அவர். ஒருகட்டத்தில் குடும்பச்சூழல் காரணமாக, அண்ணனுடைய படிப்பைப் பாதியில் நிறுத்தி என்னைத் தொடர்ந்து படிக்க வைத்தார். என் சித்தப்பாக்கள் இரண்டு பேரும் மேற்படிப்பு படிக்க உதவி செய்தனர். இவர்களால்தான் நான் படித்தேன்.

“ராக்கெட் தொழில்நுட்பத்தால் பாமர மக்களும் பயன்பெறுவார்கள்!”

சிவன்

நாகர்கோவில் இந்து கல்லூரியில் பி.எஸ்ஸி முடித்த பிறகு, சென்னை எம்.ஐ.டிக்கு வந்துவிட்டேன். பகல் முழுவதும் நண்பர்களுடன் ஜாலியாகச் சுற்றினாலும் இரவு நேரத்தில் படிப்பு மட்டும்தான். `நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுத்துறானே, எப்படி க்ளாஸ் ஃபர்ஸ்ட் வர்ரான்’ என்று ஆச்சர்யப்படுவார்கள்.  எம்.ஐ.டி-யில் படிக்கும்போது பேராசிரியர் நரசிம்மன், வெங்கட்ராமன், நாகராசன் போன்றோர் எனக்கு மிகச்சிறந்த வழிகாட்டிகளாக இருந்தனர். `தங்கள் மாணவன், ஒருநாள் உயர்ந்த நிலைக்கு வருவான்’ என்ற நம்பிக்கை அவர்களுக்கு அப்போதே இருந்தது. அதேபோல்  இந்து கல்லூரிப் பேராசிரியர்களும் என் வாழ்வில் மிக முக்கியமானவர்கள். இவர்கள்தாம் எனக்கான பாதையை அமைத்தவர்கள்.”

``உங்களுடைய இஸ்ரோ அனுபவங்களைச் சொல்லுங்கள்?’’

``இஸ்ரோவில் சேர்ந்தபோது, செயற்கைக் கோள்களைச் செலுத்துவதற்கு உதவும் வகையில் `சித்தாரா’ என்ற மென்பொருளை வடிவமைத்தேன். அது எனக்குப் பெரிய அளவில் பெயர் வாங்கிக்கொடுத்தது. ராக்கெட்டின் பாதையைக் கட்டுப்படுத்தும் மென்பொருளான ‘சித்தாரா’ ராக்கெட் தொழில்நுட்பத்தில் மிகவும் பிரபலம். ஜி.எஸ்.எல்.வி திட்ட இயக்குநராக இருந்தபோது, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜின் தயாரிக்கப்பட்டு, அது வெற்றிகரமாகச் சோதனையும் செய்யப்பட்டது. அதிக எடைகொண்ட மார்க் 3 ராக்கெட்டைத் தயாரித்து, அதில்  அதிக செயற்கைக்கோள்களைச் செலுத்தியது என, கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக ராக்கெட் வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில்  முழு உழைப்பையும் செலுத்தியிருக்கிறேன்.’’

``இஸ்ரோவின் அடுத்த மூன்று ஆண்டுத் திட்டம் தயாராகிவிட்டதா?’’

``ஏற்கெனவே திட்டமிட்டபடி சந்திரனை ஆய்வு செய்வதற்காக `சந்திராயன்-2’, சூரியனை ஆய்வு செய்ய `ஆதித்யா’ என அடுத்தடுத்த சேட்டிலைட் மிஷன்கள் தயாராக இருக்கின்றன. செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பும்போது, செயற்கைக்கோளுக்கு ஆகும் செலவைவிட ராக்கெட்டுக்கான செலவுதான் அதிகமாகிறது. இந்தச் செலவைக் குறைக்கும் வகையில் மறுசுழற்சி அடிப்படையில் ராக்கெட்டைத் திரும்பப் பயன்படுத்தும் Reuse Launch Vehicle தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. இஸ்ரோ இன்னும் பல சாதனைகள் படைக்கக்  கடுமையாக உழைக்கத் தயாராக இருக்கிறது. ராக்கெட் தொழில்நுட்பத்தால் பாமர மக்களும் பயன்பெறுவார்கள். அதற்கேற்ற வகையில் மத்திய அரசுடன் இணைந்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தவும் ஆவலோடு காத்திருக்கிறேன்.”