Published:Updated:

கலாய் இலக்கியம்!

கலாய் இலக்கியம்!
பிரீமியம் ஸ்டோரி
கலாய் இலக்கியம்!

ப.சூரியராஜ், ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

கலாய் இலக்கியம்!

ப.சூரியராஜ், ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

Published:Updated:
கலாய் இலக்கியம்!
பிரீமியம் ஸ்டோரி
கலாய் இலக்கியம்!

ருகிறது `அம்மா’ டிவி. எடப்பாடி - பன்னீரின் கூட்டு மூளையிலிருந்து உதிக்கவிருக்கும் இந்த டிவியில் என்னென்ன நிகழ்ச்சிகளையெல்லாம் ஒளிபரப்பாகும்?!

கலாய் இலக்கியம்!

* சின்னம்மா - கொடுமைக்காரச் சித்தியைப் பற்றிய மெகா தொடர்.

காபி வித் மோடி - பிரதமர் மோடியுடன் கொஞ்சம் காபியும் நிறைய கலந்துரையாடலும்.

கலைக்கப்போவது யாரு - ஸ்லீப்பர் செல்களுக்கான பிரமாண்டத் தேடல்.

தகதக தங்கவேட்டை - கிடைக்கிற கேப்பில் எல்லாம் ஆப்பு வைக்கும் வருமான வரித் துறையினரோடு ஒரு மாறுபட்ட பயணம்.

இருக்கு ஆனா இல்லை - கட்சியில் யாரெல்லாம் நீக்கப்பட்டிருக்கிறார்கள், சேர்க்கப்பட்டி ருக்கிறார்கள் என்ற தகவல்களைத் தன்மானத்தோடு பகிர்ந்துகொள்ளும் நிகழ்ச்சி.

கூவத்தூர் டேஸ் - கூவத்தூரிலிருந்த அனுபவங்களை அமைச்சர்கள் பகிர்ந்துகொள்ளும் அற்புதமான நிகழ்ச்சி.

தெர்மாராஜுவின் அறிவோம் அறிவியல் - அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கும் அறிவியல் உண்மைகள்.

அம்மா அவார்ட்ஸ் - அவர்களுக்கு அவர்களே விருது கொடுத்துக் கொள்ளும் விசித்திரமான நிகழ்ச்சி.

தர்மயுத்தம் 2.0 - அடுத்த புதுச் சேனல் எப்போது ஆரம்பிக்கலாம் போன்ற நிகழ்ச்சிகளை  விவாதிக்கும் காரசார விவாத நிகழ்ச்சி.

சண்டை சமையல் - குக்கரே இல்லாமல் சமைப்பது எப்படி? கருத்தான சமையல் நிகழ்ச்சி.

கலாய் இலக்கியம்!
கலாய் இலக்கியம்!

சிறியவர் பெரியவர் அனைவரும் விரும்புவது நிஜாம் பாக்கு மட்டுமன்று, ‘டாம் அண்டு ஜெரி’யும்தான். ஏழு பூனை வயதான எர்வின் போயர் என்பவர், தனது அன்றாட வாழ்வில் செய்யும் செயல்களைப் புகைப்படமாக்கி , அதில் டாம் அண்டு ஜெரி கதாபாத்திரங்களையும் புகுத்தியிருக்கிறார். பார்க்கவே ரகளையாய் இருக்கிறது.

கலாய் இலக்கியம்!
கலாய் இலக்கியம்!
கலாய் இலக்கியம்!

தை முதல்நாள், சூரியன் வடக்கு முகமாகச் சுற்றத் தொடங்கும். ஆமா, சூரியன்தான் சுற்றத் தொடங்கும். நம்பாதவன் ஆன்டி இந்தியன். இப்போ, அண்டா மேலே பிரியாணியைக் கொட்டி ‘கிறுகிறு’னு சுத்துனா பிரியாணி எல்லாம் சிதறும்ல. அப்போ, பூமி சுத்துனா நாமளும் சிதறிடுவோம்தானே! சூரியன் கிழக்குல உதிச்சு, மேற்குல மறையுது. சூரியன்தான் சுத்துதுங்கிறேன்.

இப்படிக்கு,


ஹெச்.ராஜா
மொட்டை மாடியில் படுத்து வானத்தைப் பார்த்துக்கொண்டு...

கலாய் இலக்கியம்!

‘அன்பு’ படத்தில் வரும் காட்சி இது.  வடிவேலு இல்லாதபோது அவருக்கு போன் செய்திருப்பார் விஜயகுமார். அங்கிருக்கும் மற்றவர்கள் ஒவ்வொருவராக போனை எடுத்து ‘யாருங்க வேணும்’ எனக் கேட்க, ஒவ்வொரு முறையும் ‘சுப்பையாவ கூப்பிடு’ எனச் சொல்லிச்சொல்லி ஓய்ந்திருப்பார் விஜயகுமார். கடைசியாக, வடிவேலுவே வந்து போனை எடுத்து ‘யாருங்க வேணும்’ எனக் கேட்க, கடுப்பில் கழுவி ஊற்றுவார் விஜயகுமார். அரண்டுபோகும் வடிவேலு ‘யாரு எனக்கு வந்த போனை எடுத்தது’ என்றதும், எல்லோருமே ‘நானு, நானு’ எனக் கையைத் தூக்க, உக்கிரமாகி உருட்டுக் கட்டையை எடுத்து எல்லோரையும் போட்டுப் பொளப்பார். தீபாவளி சமயத்தில் ‘யார் வீட்ல எல்லாம் குலோப் ஜாமூன் செஞ்சீங்க’ எனக் கேட்பதற்கு, ‘நானு, நானு’ எனப் பக்கத்து வீட்டுக்காரம்மா, எதிர்த்த வீட்டுக்காரம்மா, மாடிவீட்டுக்காரம்மா எல்லோருமே சொல்வதாய் மீம் போட்டு, இந்த டெம்ப்ளேட்டை வைரலாக்கினார்கள். மீம் க்ரியேட்டர்களைப் பார்த்து ‘யாரெல்லாம் இந்த டெம்ப்ளேட்ல மீம் போட்டிருக்கீங்க’ எனக் கேட்டால், நிச்சயம் ‘நானு, நானு’ என நிறைய பேர் கையைத் தூக்குவார்கள்.

கலாய் இலக்கியம்!
கலாய் இலக்கியம்!

ன் அப்பத்தாவை ஐஸ் தண்ணீருக்குள் முக்கியெடுத்துப் போட்டுத்தள்ளிய ரோலக்ஸ் பாண்டியனை, கற்கால ஆயுதங்களின் உதவியோடு போட்டுத்தள்ளினார் மருது. அதன்பின், ஆப்போனன்டாக ஆளே இல்லாமல் சோலோ ஆகிட்ட மருது, ஆடாத ஆட்டமெல்லாம் ஆட ஆரம்பித்தார். மனைவி பாக்யலெட்சுமி எவ்வளவோ சொல்லியும் ‘காவாளிப்பய ஊர்ல காவாளித்தனமாத்தாண்டி வேட்டி கட்டணும். வேட்டிக்கட்டு வெயிட்டா இருந்தாதான் பயலுக மிரளுவாய்ங்க’ என அரை டவுசர் முழுதும் தெரிய வேட்டி கட்டிக்கொண்டு அட்ராசிட்டி செய்துவந்தார் மருது. அந்த ஊர் காவல்துறை இதைக் கவனத்தில் கொண்டு, மருதைக் காவல் நிலையத்தின் ‘பின்புறம்’ வைத்து அடித்துத் துவைத்தது. தற்போது கந்துவட்டிக்குக் காசு வாங்கி, கவிப்பேரரசு ஸ்டைலில் நான்கு ஜிப்பாக்களை வாங்கியணிந்து சமத்துப் பையனாக வலம் வருகிறார்.