Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

பாகுபலி ஜோடி சீக்கிரமே திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் என்பதுதான் தெலுங்கின் காரசார கிசுகிசு. ஆனால், இதை அவசர அவசரமாக பிரபாஸும், அனுஷ்காவும் மறுக்கிறார்கள். ‘`நானும் பிரபாஸும் நல்ல நண்பர்கள். நிச்சயமாகத் திருமணம் செய்துகொள்ள மாட்டோம்’’ என்கிறார் அனுஷ்கா. ஆனால், விராட் கோலி - அனுஷ்கா போல திடீரெனத் திருமணம் செய்துகொள்வார்கள் எனக் கிசுகிசுக்கிறது ஆந்திர மீடியா. அங்கேயும் இங்கேயும் அனுஷ்கா!

இன்பாக்ஸ்

மிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் தயாராகும் ‘ஸ்ட்ரீட் லைட்ஸ்’ படத்தைத் தானே தயாரித்து நடித்துக்கொண்டிருக்கிறார் மம்முட்டி. `மௌனம் சம்மதம்’ பட பாணியில் இந்தப்படம் இருக்கும் என்கிறது மம்முட்டி டீம். படத்தை இயக்கவிருப்பவர் விஸ்வரூபம்-2, உத்தமவில்லன் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஷாம்தத். சேட்டன்ஸ் ஆன் ஃபயர்

விஜய் - மோகன் ராஜா கூட்டணி மீண்டும் இணையலாம். `வேலைக்காரன்’ படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் மோகன் ராஜாவுக்குப் பார்ட்டி கொடுத்திருக்கிறார் விஜய். அப்போது அடுத்த படத்துக்கான வேலைகள் தொடங்க ராஜாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறாராம் விஜய். அடுத்து `தளபதி’க்கான கதை தயாரிக்கும் வேலைகளில் இறங்குகிறார் ராஜா. வேலாயுதம் சீஸன் 2

ஐ.பி.எல் ஏலத்துக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது கிரிக்கெட் உலகம். இரண்டு வருட தடைக்குப் பிறகு களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் டீம் எப்படியிருக்கும் என்பதில்தான் எல்லோரின் கவனமும். தோனி, சென்னை அணிக்கே வந்துவிட்ட நிலையில் கையில் 47 கோடி ரூபாய் மட்டுமே வைத்துக்கொண்டு பழைய அணியை மீட்க ஏலத்தில் போராடவிருக்கிறது சென்னை. அஷ்வின், ரெய்னா, டுவெய்ன் ப்ராவோ, டு ப்ளெஸ்ஸி, பிரென்டன் மெக்கல்லம் ஆகியோர்தான் சென்னையின் முதல் டார்கெட். விசில் போடணும் பாய்ஸ்!

னடா அதிபர்  ஜஸ்டின் ட்ரூடுதான் உலகத்தமிழர்களின் வைரல் நாயகன். `இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்’ என கனேடிய ஆக்ஸண்ட்டில் ட்ரூடு பொங்கல் உரை நிகழ்த்தியதோடு, பட்டு வேட்டி, பட்டுச் சட்டை, மஞ்சள் துண்டு எனத் தமிழர் உடையில் விழாவில் கலந்துகொள்ள, தமிழர்களிடையே பிரபலமானார் ட்ரூடு. அனேகமாக அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டிலும் ட்ரூடு கலந்துகொள்ளுவார் என எதிர்பார்க்கலாம். யாதும் ஊரே யாவரும் கேளிர்!

ன் திருமணத்துக்கு வந்த பரிசுப்பொருள்களை ஏலத்தில் விட இருக்கிறார் சமந்தா. சமீபத்தில் நடைபெற்ற சமந்தா-நாகசைத்தன்யா திருமணத்தில் ஏகப்பட்ட பரிசுகள் குவிந்தன. அது அத்தனையையும் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் சமந்தா இவற்றை ஏலத்தில் விட்டு அதில் வரும் பணத்தைத் தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏழைக்குழந்தைகளின் கல்வி, மருத்துவச் செலவுக்குப் பயன்படுத்தவிருக்கிறாராம். சூப்பர் சமந்தா!

இன்பாக்ஸ்

யுவன் ஷங்கர் ராஜாவுக்கு இது கம்பேக் ஆண்டு. 2018-ல் மட்டும் 16 படங்கள் யுவனின் இசையில் வெளிவரவிருக்கின்றன. இதில் விஷால், அர்ஜுன், சமந்தா நடிப்பில் வெளிவரவிருக்கும் `இரும்புத்திரை’ படம் யுவன் இசையமைக்கும் 125-வது திரைப்படம். மீண்டும் தனுஷுடன் மாரி-2, செல்வராகவனுடன் சூர்யா படம் என, பிரிந்தவர்கள் மீண்டும் இணைகிறார்கள். மாரி-2 படத்துக்காக நீண்ட நாள்களுக்குப் பிறகு அப்பா இளையராஜாவையும் பாடவைத்திருக்கிறார் யுவன்! வா ராஜா... வா வா!

இன்பாக்ஸ்

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சிக் குள்ளேயே கொடிபிடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்ய சபா கோட்டாவான 3 எம்.பி-கள் தேர்ந்தெடுப்பில் கெஜ்ரிவால் தன்னிச்சையாகச் செயல்பட்டுவிட்டார் என்பதுதான் கோபத்துக்குக் காரணம். மூன்றில் ஒரு எம்.பி பதவியை ஆம் ஆத்மி கட்சிக்காரருக்குக் கொடுத்த கெஜ்ரிவால் இரண்டு எம்.பி பதவிகளைக் கட்சிக்கு சம்பந்தம் இல்லாத தன் சொந்த ஊர்க்காரருக்கும், தொழிலதிபர் ஒருவருக்கும் கொடுத்துவிட `கெஜ்ரிவாலும் ஒரு சாதாரண அரசியல்வாதிதான்’ எனப் புலம்புகிறார்கள் ஆம் ஆத்மியன்ஸ். கெஜ்ரிவால் கணக்கு

ஏ.ஆர்.ரஹ்மான் தன் படத்துக்கு இசையமைக்க வேண்டும் என்பது சிவகார்த்திகேயனின் நீண்ட நாள் கனவு. `இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குநர் ஆர். ரவிக்குமார், சிவகார்த்திகேயனிடம் சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதை சொல்ல, ``இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் சார் இசையமைத்தால் நன்றாக இருக்கும், அவரிடம் கேட்டுப்பாருங்கள்’’ என்று சொல்லியிருக்கிறார் சிவா. உற்சாகமான ரவிக்குமார், ஏ.ஆர்.ரஹ்மானைப் பார்க்க, ரஹ்மான் ``நான் உங்களுடைய முதல் படத்தைப் பார்க்கவேண்டும்’ என டிவிடி கேட்க, படம் பார்த்தவர் உடனே, சிவகார்த்திகேயன் - ரவிக்குமார் கூட்டணிக்கு ஓகே சொல்லியிருக்கிறார். எல்லாப் புகழும் இறைவனுக்கே!