Published:Updated:

புக்மார்க்

புக்மார்க்
பிரீமியம் ஸ்டோரி
புக்மார்க்

புக்மார்க்

புக்மார்க்

புக்மார்க்

Published:Updated:
புக்மார்க்
பிரீமியம் ஸ்டோரி
புக்மார்க்
புக்மார்க்

சாரு நிவேதிதாவின் கனவு நனவாகிறது. `தேர்ந்த மொழிபெயர்ப்பில் தன் புத்தகங்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவர வேண்டும்’ என்பது சாருவின் 25 வருடக் கனவு. அவரின் நண்பர்கள் ராம்ஜி, காயத்ரி ஆரம்பித்திருக்கும் `ஸீரோ டிகிரி பப்ளிஷிங்’ மூலம் சாருவின் நான்கு நூல்கள் இந்த வருடம் வெளிவருகின்றன. ``ஃப்ராங்பர்ட் புத்தகக் காட்சியும், புக்கர் பரிசுமே இந்த வருடத்தின் லட்சியம்’’ என்கிறார் சாரு. இதுமட்டுமன்றி, பல எழுத்தாளர்களின் புத்தகங்களும் மொழி பெயர்க்கப்படவிருக்கின்றன. `நிலவு தேயாத தேசம்’ (துருக்கிப் பயணக்கட்டுரைகள்), `ஸ்ரீவில்லிபுத்தூர்’ (நாவல்) ஆகியவை இந்த வருடம் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் வெளிவரவிருக்கின்றன. `ஸ்ரீவில்லிபுத்தூர்’ நாவல், 200 வருடங்களில் வைஷ்ணவர்களின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்பதைப் பதிவுசெய்யும் நாவல். #வருது... வருது! விருது... விருது!

புக்மார்க்

ஓவியம்: சண்முகவேல்

புக்மார்க்
புக்மார்க்

`When Breath Becomes Air’ என்ற புத்தகம் கடந்த இரண்டு வருடங்களாக உலக அளவில் பெஸ்ட் செல்லர் லிஸ்ட்டில் இடம் பெற்றுவருகிறது. The bright hour புத்தகமும் இதேபோல செம ஹிட். இரண்டுக்கும் நிறைய ஒற்றுமைகள். இரண்டுமே கேன்சரால்  மரித்துக்கொண்டிருந்தவர்களின் ஆட்டோ பயோகிராஃபி. இரண்டு புத்தகங்களுமே அவற்றை எழுதியவர்கள் இறந்த பிறகே வெளியிடப்பட்டன. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், தற்போது இந்தப் புத்தகங்களை எழுதியவர்களின் இணையர்கள் இணைந்திருக்கிறார்கள். When Breath Becomes Air எழுதிய பால் கலாநிதியின் மனைவி லூசியும், The bright hour எழுதிய நினா ரிக்ஸின் கணவர் ஜான் ட்யூபர்ஸ்டீனும் இணைந்து வாழ முடிவு செய்திருக்கிறார்கள். `When Breath Becomes the bright hour’ என்று தங்கள் இணையர்களைப் பற்றி இவர்கள் இருவரும் இணைந்து புத்தகமும் எழுதவிருக்கிறார்கள். #இன்ஸ்பிரேஷன்ஸ்!

புக்மார்க்

ஓவியம்: பிரேம் டாவின்ஸி

ந்தோஷ் நாராயணன், தமிழ்ப் புத்தகங்களின் அட்டை வடிவமைப்பில்  சிலபல செஞ்சுரிகள் அடித்திருக்கிறார். பிரபல எழுத்தாளர்கள் முதல் இளம் எழுத்தாளர்கள் வரை அட்டைப்படங்களுக்கு முதல் சாய்ஸ் சந்தோஷ்தான்.  ``புதுமைப்பித்தனிலிருந்து  கிட்டத்தட்ட தமிழின் பெரும்பாலான எழுத்தாளர்களின் புத்தகங்களுக்கும் அட்டை வடிவமைத்திருக்கிறேன்’’ எனப் பெருமிதம் பொங்கச் சொல்கிறார் இந்த அட்டைப்பட நாயகன். #அட்டைகாசம்!

புக்மார்க்

ஹாம் ரேடியோக்கள், உலகம் முழுக்கப் பிரபலம். சென்னை வெள்ளத்தின்போது, ஹாம் ரேடியோக்களைப் பயன்படுத்தும் நண்பர்கள் நிறைய உதவிகள் செய்தனர். ஹாம் ரேடியோக்கள் மூலம், நாமே செய்தியை ஒலிபரப்பலாம்; இன்னொரு ஹாம் ரேடியோவுடன் தொடர்புகொள்ளலாம்; நிறைய நண்பர்களைப் பெறலாம்; பேரிடர்க் காலங்களிலும் தடையின்றிப் பேசலாம். மிகக் குறைந்த மின்சாரம் மூலம் உலகின் எந்த மூலைக்கும் செய்திகள் அனுப்பலாம். இவைதான் ஹாம் ரேடியோவின் சிறப்பம்சம். கமல்ஹாசன் நீண்ட வருடங்களாக இந்த ஹாம் ரேடியோவைப் பயன்படுத்திவருகிறார். இன்றைய இளைய சமுதாயத்துக்கு ஹாம் ரேடியோவை அறிமுகம் செய்யும் நூலாக வெளிவந்திருக்கிறது `ஹாம் ரேடியோ ஒரு அறிமுகம்.’ ஹாம் ரேடியோ எவ்வாறு செயல்படுகிறது, அதில் நமக்கான குழுவை எப்படிக் கண்டுபிடிப்பது, ஹாம் ரேடியோவில் என்னென்ன வகைகள்  உள்ளன, ஹாம் ரேடியோவுக்கான லைசென்ஸ் பெறும் முறைகள் என்ன எனப் பல விளக்கங்களை எளிமையான மொழியில் எழுதியிருக்கிறார் தங்க.ஜெய்சக்திவேல்.

வெளியீடு: டெல்சா பதிப்பகம், 43, கேசவப்பெருமாள் கோயில் வீதி, மயிலாப்பூர், சென்னை - 4. 97913 49884

சென்னை புத்தகக் காட்சியில் அதிக கவனம் ஈர்த்த புத்தகங்கள்!

புக்மார்க்