Published:Updated:

இது நட்புக்காக!

இது நட்புக்காக!
பிரீமியம் ஸ்டோரி
இது நட்புக்காக!

மா.பாண்டியராஜன்

இது நட்புக்காக!

மா.பாண்டியராஜன்

Published:Updated:
இது நட்புக்காக!
பிரீமியம் ஸ்டோரி
இது நட்புக்காக!

ருடாவருடம் வைரல் கான்செப்ட்டோடு வருகிறார் செலிபிரிட்டி புகைப்படக்கலைஞர் கார்த்திக் ஸ்ரீனிவாசன். இவரின் 2018 வித்தியாச போட்டோ ஷூட் காலெண்டர் செம ஸ்டைலிஷாக இருக்கிறது.

``Once upon a time என்ற கான்செப்ட்டை பல வருஷமா பண்ணணும்னு முயற்சி பண்ணி இப்போதான் நிறைவேறியிருக்கு. இந்த கான்செப்ட்டின் நோக்கமே ஹாலிவுட்டின் சில ஐகானிக் ஷாட்ஸை ரீக்ரியேட் பண்றதுதான். ஹாலிவுட்டில் பிரபலமான சினிமா ஹீரோயின்ஸ், சில பிரபலமான சினிமா கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து அவங்களை நினைவுபடுத்துற மாதிரி என்னுடைய கற்பனையையும் கலந்து இந்த போட்டோ ஷூட்டை செஞ்சிருக்கேன்.

இது நட்புக்காக!

இந்த ஷூட்டுக்காக நான் தேர்ந்தெடுத்த சில கதாபாத்திரங்களின் உடைகள் ரெடிமேடாவே கிடைச்சது. சில உடைகளைப் பழைய படங்களைப் பார்த்து நாங்களே காஸ்ட்யூம் டிசைனர்களை வெச்சுத் தயாரிச்சோம்.
 ஸ்ருதிஹாசன், காஜல் அகர்வால், ஓவியா, பிந்து மாதவி, ஐஸ்வர்யா ராஜேஷ், நிக்கி கல்ராணி, ரெஜினா, டாப்ஸி எனப் பெரிய ஸ்டார் பட்டாளமே இந்த போட்டோஷூட்டுக்கு போஸ் கொடுத்திருக்காங்க. இவங்ககிட்ட நான் இந்த கான்செப்ட்டைச் சொன்னதுமே ரொம்ப ஆர்வமாகிட்டாங்க. அதனாலயே ஒரு நாள் முழுக்க எனக்காக நேரம் ஒதுக்கி இந்த ஷூட்டை முடிச்சுக்கொடுத்தாங்க.

 ஃபிரிடா காலோ (Frida kahlo) என்ற மெக்சிக்கோ நாட்டு ஓவியரோட தோற்றத்தை ஸ்ருதி ஹாசன் பண்ணியிருக்காங்க. ஸ்ருதியை நான் அவங்க ஸ்கூல் படிச்ச சமயத்திலிருந்து போட்டோ ஷூட் பண்ணிட்டிருக்கேன். இந்த கான்செப்ட்டைப் பத்தி ஸ்ருதியிடம் சொன்னதும், `அதிகமா மேக்கப் இல்லாமல் இயல்பாக இருக்கிற கேரக்டரை வெச்சு ஷூட் பண்ணலாம்’னு சொன்னாங்க. அதனால் நான் ஸ்ருதிக்கு ஃபிரிடா காலோ கேரக்டரைக் கொடுத்தேன்.

இது நட்புக்காக!

அந்த கேரக்டருக்கான காஸ்ட்யூம், மேக்கப் எல்லாம் போட்டதும் ஸ்ருதி ரொம்ப ஹேப்பி. நல்ல அவுட்புட் வரணும்னு அவங்களே முழு ஈடுபாட்டோட பண்ணாங்க. போட்டோஸ் பார்த்துட்டு ரொம்பவே ஆச்சர்யப்பட்டாங்க. இன்னும் ஃபுல் வொர்க் முடிஞ்ச போட்டோவை ஸ்ருதி பார்க்கலை. ஆனந்த விகடன் மூலமாத்தான் பார்க்கப்போறாங்க.

எல்லோருடைய போர்ஷனையும் முடிச்ச பிறகுதான் காஜல் அகர்வாலுடைய ஷூட்டை ஆரம்பிச்சோம். `எல்லா விதமாவும் பண்ணியாச்சு. வின்டேஜ் லுக் வெச்சு உங்களுக்குப் பண்ணலாம்’ என்றதும் காஜல் உடனே ஓகே சொல்லிட்டாங்க. காஜலுக்கு ஹாலிவுட் நடிகை பியான்கா ஜாகர் (Bianca Jagger) கேரக்டர். பியான்கா ஜாகர் யூஸ் பண்ற மாதிரியே டிரெஸ், நெட் வெச்ச கேப்னு எல்லாமே புதுசா ரெடி பண்ணி ஷூட் பண்ணோம். முதல்ல காஜல் அகர்வால் போர்ஷனை பிளாக் அண்டு வொயிட்டா பண்ணலாம்னு ஐடியா இருந்துச்சு. பிறகு, வின்டேஜ் லுக்கை கலரில் கொடுத்தா இன்னும் சூப்பரா இருக்கும்னு கலரிலேயே ரெடி பண்ணிட்டோம்.

பிக் பாஸுக்கு முன்னாடியிருந்தே ஓவியா எனக்கு நல்ல பழக்கம். பிக் பாஸ் முடிஞ்சு அவங்க செம பிஸியா இருந்த சமயத்தில் அவங்ககிட்ட இந்த கான்செப்ட்டைச் சொன்னதும், ‘இரண்டு வாரம் மட்டும் டைம் கொடுங்க. நான் வரேன்’னு சொன்னாங்க. அவங்களுக்கு பியூட்டி அண்டு தி பீஸ்ட் (Beauty and the Beast) படத்தோட கான்செப்ட். அந்தப் படத்தில் ரோஸ்தான் முக்கிய கான்செப்ட். அதை வெச்சே ஓவியாவோட போர்ஷனை எடுத்தோம். ஓவியாக்கு ஏன் இந்த கான்செப்ட்டைக் கொடுத்தேன்னா,

இது நட்புக்காக!

‘பிக் பாஸுக்குப் பிறகு இளைஞர்கள் மத்தியில் ஓவியா ரொம்பவே பிரபலமாகிட்டாங்க. அவங்க நார்மலா பேசறதே கொஞ்சுற மாதிரி இருக்குனு சொல்றாங்க. அதனாலதான் ஓவியாவுக்கு இந்த கான்செப்ட். ஓவியாவோட ஷூட் பண்ணும்போது வேலை பாக்குறோம்ங்கிற ஃபீலே வரல. ஸ்டுடியோவுக்குள்ளயே பாட்டு போட்டுட்டு பார்ட்டி மூடுலயே போஸ் கொடுத்தாங்க. அவங்ககூட வொர்க் பண்றதே அவ்வளவு ஜாலியா இருந்துச்சு.

நான் இந்த காலெண்டர் ஷூட்டை எந்த லாபத்துக்காகவும் பண்ணலை. 500 காலெண்டர் ப்ரின்ட் செஞ்சு இலவசமா கொடுக்கப்போறேன். இந்த ஷூட்டுக்காக யாரும் பணம் வாங்கவே இல்லை. எல்லோரும் நட்புக்காக ஒரு நாள் ஒதுக்கி இந்த ஷூட்டை முடிச்சுக்கொடுத்தாங்க. ரொம்ப நாளா எனக்குள் இருந்த ஆசை இந்த போட்டோ ஷூட்டால் நிறைவேறிடுச்சு’’ என்று போட்டோ ஷூட்டின் சுவாரஸ்யங்களைப் பகிர்ந்துகொண்டார் கார்த்திக் ஸ்ரீனிவாசன்.