Published:Updated:

தரத்தையும் உயர்த்துங்கள்!

தரத்தையும் உயர்த்துங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
தரத்தையும் உயர்த்துங்கள்!

தரத்தையும் உயர்த்துங்கள்!

தரத்தையும் உயர்த்துங்கள்!

தரத்தையும் உயர்த்துங்கள்!

Published:Updated:
தரத்தையும் உயர்த்துங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
தரத்தையும் உயர்த்துங்கள்!

ஷ்டத்தில் மூழ்கிவரும் பொதுத்துறை நிறுவனங்களைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம்... தி.மு.க

தரத்தையும் உயர்த்துங்கள்!

ஆட்சிகாலத்தில் பாக்கிவைத்த நிலுவைத் தொகையைப் போக்குவரத்து ஊழியர்களுக்குக் கொடுக்க வேண்டிய நிர்பந்தம், கடந்த ஆறு ஆண்டுகளாக பஸ் கட்டணம் உயர்த்தப்படாதது, இந்த இடைப்பட்ட காலத்தில் டீசலின் விலை 22 ரூபாய் உயர்ந்திருப்பது... எனப் பல்வேறு காரணங்களைச் சொல்லி மிக அதிக அளவில் பேருந்துக்கட்டணங்களை உயர்த்தியிருக்கிறது தமிழக அரசு. 

பேருந்துக் கட்டண உயர்வு என்பது தவிர்க்க முடியாததாக இருக்கலாம். ஆனால் அதையொட்டி எழும் கேள்விகளையும் நாம் பரிசீலிக்க வேண்டும். ஆறு ஆண்டுகள் பேருந்துக்கட்டணத்தை உயர்த்தாமலேயே இருந்துவிட்டு, இப்போது திடீரெனப் பலமடங்கு கட்டணத்தை உயர்த்தும்போது, அது பொதுமக்களுக்குப் பெரும் சுமையாகிவிடுகிறது. வாக்கு அரசியலுக்காகவோ எதிர்க்கட்சிகளுக்கு பயந்தோ அரசு செயல்படாமல், நியாயமான விளக்கங்களை அளித்து, தன் செயல்பாடுகளை அதன் அடிப்படையில் அமைத்துக்கொள்ள வேண்டும்.

ஏழை, எளிய மற்றும் நடுத்தர வகுப்பு மக்கள் வேலைக்குச் சென்று வரவும், மருத்துவமனைகளுக்குச் செல்லவும் அவர்களின் குழந்தைகள் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லவும் பெரும்பாலும் அரசுப்பேருந்துகளையே நம்பியிருக்கின்றனர். பிற மாநிலங்களைவிடவும் தமிழ்நாடு கல்வியிலும், தொழில்துறையிலும், சுகாதார அளவீடுகளிலும் பல படிகள் முன்னே இருப்பதற்கு அரசுப் பேருந்துகள் அளிக்கும் சேவை ஒரு முக்கியமான காரணம்.

இந்தப் பேருந்துக்கட்டண உயர்வினால் பொதுமக்கள் நேரடியாக பாதிக்கப்படுவது ஒருபுறமிருக்க, இந்தப் பேருந்துக்கட்டண உயர்வு என்பது மறைமுகமாக விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும். காய்கறி முதல் பல அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்துக்கும் பேருந்துக்கட்டண உயர்வுக்கும் நேரடித் தொடர்பு உண்டு. அடிமட்டத் தொழிலாளர்கள் வாங்கும் கூலியில் பெருமளவு பேருந்துக்கட்டணத்துக்குப் போய்விட்டதென்றால், அவர்களது கூலியை உயர்த்த வேண்டும்.

பேருந்து விலையேற்றத்தை ஏற்றுக்கொள்ளவும், தாங்கள் தேர்ந்தெடுத்த அரசுக்காகத் தியாகங்கள் செய்யவும் மக்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால், இந்தக் கட்டண உயர்வுக்கு ஏற்றபடி அரசுப்பேருந்துகளின் தரம் இருக்கிறதா என்பது முக்கியமான கேள்வி.  ‘`மழை பெய்தால் ஒழுகும், நடுவழியில் பிரேக் டவுன் ஆகும், கட்டுப்பாடு இல்லாமல் சாலையோரக் கடைகளில் பாய்ந்து உயிர் குடிக்கும் பேருந்துகளில் பயணம் செய்யத்தான் அதிகக் கட்டணத்தை நாங்கள் கொடுக்க வேண்டுமா?’’ என்பது பொதுமக்கள் வைக்கும் முக்கியமான, நியாயமான கேள்வி.

‘தரமான சேவைக்கு நியாயமான கட்டணம்’ என்பதுதான் எந்த ஒரு வணிகத்துக்கும் அடிப்படை. அப்படித்தான் அரசுப்பேருந்துகள் இருக்கின்றனவா என்பதைத் தமிழக ஆட்சியாளர்கள் மனசாட்சியுடன் பரிசீலிக்க வேண்டும். பிற மாநிலங்களில் அரசுப்பேருந்துகள் எந்த நிலையில் உள்ளன, அந்த மாநிலங்களில் அரசுப்போக்குவரத்துத் துறை எப்படி நிர்வகிக்கப்படுகிறது என்பதை ஆராய்ந்து அதற்கேற்ப தமிழக அரசும் நம் போக்குவரத்துத்துறையைச் சீர்படுத்த வேண்டும்.

போக்குவரத்துத்துறையில் நிலவும் ஊழல், முறைகேடு, நிர்வாகச் சீர்கேடு ஆகியவற்றை ஒழிப்பது, பேருந்துகளின் தரம் உயர்த்தித் தொழில்நுட்ப வசதிகளைப் பயணிகளுக்கு ஏற்படுத்திக்கொடுப்பது ஆகியவற்றில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கவனம் செலுத்த வேண்டும்.

கட்டணத்தை உயர்த்தினால் மட்டும் போதாது, அதற்கேற்ப போக்குவரத்துத்துறையின் தரத்தையும் உயர்த்துங்கள்!