வெளியிடப்பட்ட நேரம்: 16:06 (26/09/2018)

கடைசி தொடர்பு:19:29 (26/09/2018)

குழந்தைகளை தானாகச் சாப்பிட வைக்க இதை ஃபாலோ செய்யுங்கள்!

அள்ளி இரைத்தாலும் பரவாயில்லை. குழந்தைகளை இரண்டு வயதுக்குள்ளாக அவர்களாக உணவை எடுத்துச் சாப்பிடப் பழக்குங்கள். நீங்கள் எல்லோரும் அமர்ந்து உணவு உண்ணும்போது அவர்களுக்கும் குட்டியூண்டு பிளேட் கொடுத்துச் சாப்பிட வையுங்கள்.

குழந்தைகளை தானாகச் சாப்பிட வைக்க இதை ஃபாலோ செய்யுங்கள்!

லகிலேயே மிகவும் சவாலான விஷயம் எனப் பெற்றவர்கள் நினைப்பது குழந்தைகளுக்குச் சாப்பாடு ஊட்டுவதை, குழந்தைகள் தானாக சாப்பிடுவதை... ப்ப்ப்ப்பா முடியலடா சாமி' என்று மீம்ஸ்களில் ஆரம்பித்து `கடைசி வாய் சாப்பாட்டில்தான் அதிகம் சத்திருக்கிறதாம் என்று அம்மா சொல்லும் பொய்' என போட்டோ கார்டுகள் வரை ஒவ்வொரு கதையைச் சொல்கிறது. என்ன மாதிரியான விஷயங்களை ஃபாலோ செய்யலாம் என்று தன்னம்பிக்கை பேச்சாளர் சியாமளா ரமேஷ் பாபுவிடம் பேசினோம்.

* அள்ளி இரைத்தாலும் பரவாயில்லை, குழந்தைகளை இரண்டு வயதுக்குள்ளாக அவர்களாக உணவை எடுத்துச் சாப்பிடப் பழக்குங்கள். நீங்கள் எல்லோரும் அமர்ந்து உணவு உண்ணும்போது அவர்களுக்கும் குட்டியூண்டு பிளேட் கொடுத்துச் சாப்பிட வையுங்கள்.

* அவர்கள் சாப்பாட்டை சிந்தி, வீணாக்குவதற்குக் கோபப்படாதீர்கள். கோபம் சாப்பாட்டின் மீதான வெறுப்பாக மாறும். `செல்லம்ல சீக்கிரம் சாப்பிடுப்பா' என்று அவ்வப்போது கொஞ்சி சீக்கிரம் சாப்பிடப் பழக்குங்கள். இதெல்லாம் ஒரு நாள், ஒரு மாதத்தில் நடந்துவிடாது. தேவைப் பொறுமையும், கனிவும்.

* ஒவ்வோர் அம்மாவுக்கும் பக்கத்து வீட்டுச் சமர்த்து குழந்தை போல் தன் குழந்தை இருக்கலாம் என்கிற நினைப்பு எழாமல் இருக்காது. அது தவறு. அவர்கள் சத்தாகச் சாப்பிடுகிறார்களா என்பதை மட்டும் பாருங்கள்... எதைச் சாப்பிடுகிறார்கள், எவ்வளவு சாப்பிடுகிறார்கள் என்பதில் இல்லை சத்தும் ஆரோக்கியமும்... 

 * பொது இடங்களுக்குச் செல்லும்போது கவனம் சிதறும், விளையாடத் தோன்றும், சாப்பாட்டில் கவனம் இருக்காது. அப்படிப்பட்ட இடங்களில் அவர்களை பலர் முன்னிலையில் அடிக்கவோ, திட்டவோ செய்யாதீர்கள். உனக்குப் பிடிச்ச சாம்பார் சாதம், உருளைக்கிழங்கு எல்லாம் இருக்கு. சாப்டுட்டு விளையாடு... அம்மா ஒண்ணுமே சொல்ல மாட்டேன்' என்று அவர்கள் வழிக்குச் சென்று புரிய வையுங்கள்.

ஃபாலோ செய்யுங்கள்

* லேட்டாகிவிட்டது, வெளியே போக வேண்டும், உடல் சுகவீனம் என்கிற காரணங்களை காட்டி டி.வியில் ஒளிபரப்பப்படுகிற சத்தில்லாத உணவுகளை அவர்களுக்குச் செய்து கொடுக்காதீர்கள். கஞ்சி முதல் கடலை உருண்டை வரை அவர்களுக்காகச் சற்று மெனக்கிட்டு வீட்டிலேயே தயாரித்துக் கொடுக்க வேண்டும். 

* ஒரே வேளையில் வயிறு முட்டச் சாப்பிட குழந்தைகளைப் பழக்காதீர்கள். உணவை ஐந்து வேளையாகப் பிரித்துக் கொடுங்கள். அறு சுவையையும் உணர்ந்து சாப்பிட குழந்தைகளை வீட்டில் பழக்க வேண்டும். 

* வெளியில் அழைத்துச் செல்லும்போது அவர்கள் கை நீட்டும் உணவை எல்லாம் வாங்கி ஸ்நாக்ஸ் டப்பாவில் போட்டுக் கொடுத்துவிட்டு, அவன் சத்தாகவே சாப்பிட மாட்டிக்கிறான் என்று அங்கலாய்க்காதீர்கள். எது குழந்தைகளின் உணவாக இருக்க வேண்டும் என்பதை நீங்கள் மட்டும்தான் முடிவு செய்ய வேண்டும். 

* சீக்கிரம் சாப்பிட்டால் இது தருகிறேன், அது தருகிறேன் என்று குழந்தைகளை பரிசுகளுக்குப் பழக்கப்படுத்தாதீர்கள். இது போன்ற சூழலில் அவர்கள் அடுத்தடுத்த தினங்களில் பரிசு தந்தால் மட்டுமே சாப்பிடுவேன் என்று அடம் பிடிப்பார்கள். 

* எல்லா நேரமும் அவர்களாக உணவை உண்ண வேண்டும் என்று கட்டாயப்படுத்தாமல், அவர்கள் விரும்பாத உணவை நீங்களாகக் கதை சொல்லியே சாப்பிட பழக்குங்கள். அதன் சுவை அறிந்துவிட்டால் பிறகு குழந்தைகள் உங்களை எதிர்பார்க்க மாட்டார்கள்.

* குழந்தை வளர்ப்பின் மிக முக்கியப் பகுதி உணவு ஊட்டுவது, சாப்பிடப் பழக்குவது என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்படுங்கள் பெற்றோர்களே!


டிரெண்டிங் @ விகடன்