வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (27/09/2018)

கடைசி தொடர்பு:17:00 (27/09/2018)

கேல் ரத்னா விருது விழாவில் அனுஷ்கா அணிந்து வந்த புடவை ஏன் ஸ்பெஷல்?

``வெளி நிகழ்ச்சிகளில் அவர் அருகில் நான் இருக்கும்போதெல்லாம் என்னோட சாய்ஸ் புடவை மட்டுமே.''

ணவருடைய வெற்றிகளை தன்னுடைய வெற்றிகளாகக் கொண்டாடுவதுதான் மனைவியின் இயல்பு. இதற்குப் புகழ்பெற்ற நடிகைகளும் விதிவிலக்கில்லை என்பதை, திருமதி விராட்கோலியின் மிக சமீபத்திய உற்சாகப் புன்னகையும் நிரூபித்திருக்கிறது. 

விராட் கோலி விருது பெறும்போது

விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது, தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது. விருது வழங்கும் விழாவில் விராட் கோலியின் தாய் மற்றும் சகோதரருடன் கலந்துகொண்ட நடிகை அனுஷ்கா சர்மா, கணவர் விருது பெறுவதற்காக இருக்கையிலிருந்து எழுந்துகொள்ளும்போதே உற்சாக மிகுதியில் கைகளைத் தட்ட ஆரம்பித்துவிட்டார். விராட், குடியரசுத் தலைவர் கைகளிலிருந்து விருதைப் பெறும்போதோ மகிழ்ச்சியின் உச்சத்தில் முகம் முழுக்க மலர, விராட்டையே பெருமை பொங்க பார்த்துக்கொண்டிருந்தார் அனுஷ்கா. அழகான சேலையில் அமர்ந்திருந்த அனுஷ்காவுக்கு, அதை டிசைன் செய்தது சபயாச்சி.

அனுஷ்கா

இந்த விழாவில் அனுஷ்கா உடுத்தியிருந்தது டஸ்ஸர் ஜார்ஜெட் புடவை. வுட்டன் கலர் புடவையின் ஓரத்தில் டில்லா பார்டரும் மேட்சாகக் கறுப்பு நிற ஹசார் பல்ட்டி பிளவுஸூம் அணிந்திருந்தார். அனுஷ்கா காதில் அணிந்திருந்த போல்கி தோடுகளின் பளபளப்பு அவருடைய மகிழ்ச்சியை இன்னமும் அதிகப்படுத்திக் காட்டியது என்றுதான் சொல்ல வேண்டும். ``விராட்டுக்கு நான் புடவைக் கட்டினால் மிகவும் பிடிக்கும். வெளி நிகழ்ச்சிகளில் அவர் அருகில் நான் இருக்கும்போதெல்லாம் என்னோட சாய்ஸ் புடவை மட்டுமே'' என்று அனுஷ்கா முன்பு ஒரு முறை தன்னுடைய பேட்டியில் சொல்லியிருக்கிறார். அதை இந்த விழாவிலும் ஃபாலோ செய்திருக்கிறார் விருஷ்கா!