``நாகேஷுக்கு மிளகு ரசம்னா உயிர்'' - சச்சு! #HBDNagesh | Nagesh loves pepper rasam says actress Sachu

வெளியிடப்பட்ட நேரம்: 16:17 (27/09/2018)

கடைசி தொடர்பு:16:36 (27/09/2018)

``நாகேஷுக்கு மிளகு ரசம்னா உயிர்'' - சச்சு! #HBDNagesh

வெடித்துச் சிரிக்க வைப்பார், கசிந்துருக வைப்பார், கண்கள் வலிக்க அழ வைப்பார், எழுந்து நடனம் ஆட வைப்பார்.... அவர்தான் நாகேஷ். தமிழ் சினிமாவில் மறக்க முடியாத, யாராலும் தொட முடியாத நடிப்புக்குச் சொந்தக்காரர். அவருடைய பிறந்ததினம் இன்று. அவருடன் நடித்த மிகப்பெரும் பாக்கியத்தைப் பெற்ற சச்சு பேசினார்

``நாகேஷ் சார், அவரைப் பற்றிய நல்ல நல்ல நினைவுகளை என்கிட்ட கொடுத்துட்டு போயிருக்கார். அவருடைய டைமிங் வாய்ப்பே இல்ல. ஒரு நடிகரா டைரக்டர் பேப்பர்ல காண்பிக்கிற டயலாக்கை மட்டும் பேசாமல், அந்த டயலாக்குக்கு உயிர் கொடுக்குறதுதான் நாகேஷ் சாருடைய பலமே. அவருடைய வேகம் யாருக்கும் வராது. பாடிலேங்குவேஜ், டயலாக் டெலிவரி மூலமா மக்களை ஈர்த்தது நாகேஷ் மட்டும்தான். 'காதலிக்க நேரமில்லை' படத்தில் அவர் அளவுக்கு இல்லைனாலும் ஓரளவுக்கு ஈடு கொடுத்து காமெடியா டயலாக் பேசிட்டு இருந்தேன். நான் பேச ஆரம்பிச்சதும், என் டயலாக்குக்கு கவுன்டர் கொடுத்துக் கிண்டல் பண்ணுவார். அப்போ நான் நடிக்கிறேங்கிறதை மறந்து சட்டுனு சிரிச்சிருக்கேன். இப்ப அதையெல்லாம் நினைச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கு. 

நாகேஷ் - சச்சு

அந்தப் படத்துக்குப் பிறகு, நாங்க ரெண்டு பேரும் நண்பர்களாகிட்டோம். அவர் ரொம்ப கெட்டிக்காரர். டைரக்டர் சொல்றதை மட்டும் செய்யாமல், அவருக்குத் தோணுற விஷயங்களையும் நடிக்கும்போது சேர்த்திடுவார். அதுவும் ஸ்பாட்ல தானே ஒரு கவுன்டர் கொடுக்கிறதோ, டயலாக் சொல்றதோ எல்லாம் அத்தனை சுலபமில்லை. தனக்குக் கொடுத்திருக்கிற கேரக்டருக்காக நிறைய  ஹோம் ஒர்க் பண்ணுவார். அதனால்தான் இறந்த பிறகும் நம்ம மனசுல தனித்துவமா நிற்கிறார்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் கலகலன்னு இருப்பார். எங்க ஃபேமிலியோட ரொம்ப நல்லாப் பழகுவார். அவருக்கு நான் வெஜ் பிடித்தம் கிடையாது. வெஜ்னா உயிர். அதுவும் எங்க அம்மா பண்ற 'மிளகு ரசம்'னா உயிரையே கொடுப்பார். அவருக்காக அடிக்கடி எங்கம்மா மிளகு ரசம் செய்து ஸ்பாட்டுக்குக் கொடுத்து அனுப்புவாங்க.

பார்க்கிறதுக்கு காமெடியனா தெரிவார். ஆனா இயல்புல ரொம்ப சீரியஸான மனிதர். இலக்கியத்து மேல அதிக ஈடுபாடு உண்டு. நிறைய புத்தகங்கள் வாசிப்பார். எழுத்தாளர் ஜெயகாந்தன் மீது அளவு கடந்த காதல் உண்டு'' என்று நாகேஷின் நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் சச்சு.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close