வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (27/09/2018)

கடைசி தொடர்பு:17:20 (27/09/2018)

டாடாவுக்கு மாருதியின் பதிலடி... கிராஷ் டெஸ்ட்டில் அசத்திய பிரெஸ்ஸா!

நெக்ஸானைத் தொடர்ந்து விட்டாரா ப்ரெஸ்ஸாவும் கிராஷ் டெஸ்ட்டில் 4 ஸ்டார் வாங்கியுள்ளது.

இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் எஸ்யூவி மாருதி சுஸூகியின் விட்டாரா பிரெஸ்ஸா. எவ்வளவு சிறப்பான காரை கொண்டுவந்தாலும் மாருதி சுஸூகி பாதுகாப்பில் அது ஒன்றுமே இல்லை என்பவர்களை இப்போது வாயடைக்க வைத்துவிட்டது இந்நிறுவனம். காரணம், மாருதியின் விட்டாரா பிரெஸ்ஸா Global NCAP கிராஷ் டெஸ்ட்டில் 4 ஸ்டார் வாங்கியுள்ளது. 

விட்டாரா பிரெஸ்ஸா

இரண்டு காற்றுப்பைகள், ஏபிஎஸ் மற்றும் குழந்தைகள் சீட்டுக்கான ஐஸோஃபிக்ஸ் மவுன்ட்களுடன் வரும் இந்தக் கார் பெரியவர்களின் பாதுகாப்பில் 4 ஸ்டார் வாங்கியுள்ளது. ஆனால், குழந்தைகள் பாதுகாப்பில் வெறும் 2 ஸ்டார் மட்டுமே பெற்றுள்ளது. விபத்தின்போது காரில் பாடி ஸ்டேபிளாக இருப்பதாகவும் அதிக லோடை தாங்கும்படி இருப்பதாகவும் காரின் பாடி ஸ்டேபிளாக இருப்பதால் தலை மற்றும் கழுத்து பகுதிகளில் காயம் ஏற்படாது என்று கிராஷ் டெஸ்ட் முடிவுகள் கூறுகின்றன.

கடந்த மாதம் பிரெஸ்ஸாவின் போட்டியான டாடா நெக்ஸான் Global NCAP கிராஷ் டெஸ்ட்டில் 4 ஸ்டார் வாங்கியிருந்தது. தற்போது மாருதியும் 4 ஸ்டார் வாங்கியிருப்பது இந்திய கார் உற்பத்தியாளர்கள் பாதுகாப்பிலும் அக்கறை காட்ட ஆரம்பித்துவிட்டார்கள் என்பதைக் காட்டுகிறது.