அனார்கலி, மஸ்தானி, சராரா, வெஸ்டர்ன் ஆடைகள்... அணியும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்! | follow these things before you wear western dresses

வெளியிடப்பட்ட நேரம்: 16:43 (29/09/2018)

கடைசி தொடர்பு:16:43 (29/09/2018)

அனார்கலி, மஸ்தானி, சராரா, வெஸ்டர்ன் ஆடைகள்... அணியும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

தீபாவளி உடைகளை அமேசானில் ஆரம்பித்து அண்ணாச்சி கடை வரை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு என்ன டிரெண்ட் என்பதைச் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் சஞ்னா.

அனார்கலி, மஸ்தானி, சராரா, வெஸ்டர்ன் ஆடைகள்... அணியும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

"டிரெண்ட் என்பது மாறிக்கொண்டே இருக்கும். டிரெண்டாகும் அத்தனை உடைகளும் நமக்கு செட் ஆகாது. அதில் சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்தால் நிச்சயம் நமக்கு சூட் ஆகும். ஏற்கெனவே வந்து டிரெண்டான சராரா, மஸ்தானி, அனார்கலி ஆடைகள்தாம் மீண்டும் சின்னச் சின்ன மாற்றங்களுடன் களம் இறங்கியிருக்கின்றன"  என்று ஆரம்பிக்கிறார் சஞ்னா.

அனார்கலி

சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான அனார்கலி, மிகவும் கிராண்டாக இருந்தது. ஃபார்ட்டி, திருமண விழாவுக்கு மட்டும் போட்டுட்டு போகிற மாதிரிதான் அப்போ வந்த டிசைன் இருந்தது. இப்ப சின்னச் சின்ன மாற்றங்களோட அது மாறி காட்டன்லகூட அனார்கலி அணியலாம்ங்கிற நிலை வந்திருக்கு. காட்டனில் பட்டு பார்டர் வைத்து தைக்கப்பட்ட அனார்கலியும், வீட்டில் இருக்கும் உபயோகப்படுத்தப்படாத பட்டுச் சேலைகளில் அனார்கலியும், பியூர் காட்டனில் அனார்கலியும்தான் தற்போதைய டிரெண்ட். காட்டன் என்றால் சுங்குடி கலந்தது, ஹைத்தறி என்று குறைந்த விலையில் நம்மை தனித்துவமாகக் காட்டும் அனார்கலிகள் வரிசை கட்டியிருக்கின்றன.  

ஆடைகள்

உடல் பருமனான பெண்களுக்கு காட்டன் வகை அனார்கலி நன்றாகப் பொருந்திப் போகும். கூடவே யூ நெக், ஹாஃப் ஸ்லீவ் எனச் சின்னச் சின்ன மாற்றம் செய்தால் நீட் லுக் கிடைக்கும். ஒல்லியான உடல்வாகு கொண்ட பெண்கள் அனார்கலியை அணியும்போது குளோஸ்டு நெக் வைத்து ஃபுல் ஸ்லீவ் வைத்துத் தைத்தால் சூப்பர் லுக் கிடைக்கும். மீடியம் உடல்வாகு கொண்டவர்கள் போட் நெக் மற்றும் எல்போ ஸ்லீவ்லெஸுடன் அணியலாம்.  

சராரா (Sarara)

ஆடைகள்

லாங் டாப் - ஃப்ரீ ஃபிட் பேன்ட் என  வடிவமைக்கப்படும் சராராவை ஒல்லியான உடல்வாகு கொண்ட பெண்கள் தேர்வு செய்யலாம். கிராண்ட் லுக் வேண்டும் என நினைக்கும் பெண்கள், ஜர்தோஸி வேலைப்பாடுகள் செய்யப்பட்ட டாப்ஸுடன் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட பேன்ட்டை அணியலாம். சிம்பிள் லுக் வேண்டும்மெனில் காட்டன் டாப், பேன்ட்டை தேர்வு செய்யலாம். விருப்பப்பட்டால் நெட் நெட்டட் ஷாலை தேர்வு செய்யலாம். உடல் பருமனான பெண்கள் கூடுமானவரை இவ்வகையான ஆடைகளைத்  தவிர்ப்பது நல்லது. அவசியம் அணிய வேண்டும் என விருப்பப்படுகிறீர்கள் எனில் சிந்தடிக் வகையான டாப்பினை ஹாஃப் ஸ்லீவுடன் அணியலாம். 

டஸ்ஸர் சில்க் (Tusser Silk)

புடவை காதலிகள் டஸ்ஸர் சில்கைத் தேர்ந்தெடுக்கலாம். பிளைன் பள்ளு, பெரிய பார்டர், அட்டகாசமான நிறங்களில் வந்திருக்கிறது. இந்த வகை புடவைகளை அணியும்போது ஹை காலர் பிளவுஸ், பேக் ஓப்பன், கோல்டு ஷோல்டர் ப்ளவுஸ் என வடிவமைத்துக் கொண்டால் மாடர்ன் லுக்கில் தெரியலாம். டஸ்ஸர் சில்க் புடவைகளைத் தேர்ந்தெடுக்கும்போது அதிகப்படியான எம்பிராய்டர் பிளவுஸ்களை தவிர்க்கவும். 

வெஸ்டர்ன் ஆடைகள்

வெஸ்டர்ன் ஆடைகள்

வெஸ்டர்ன் ஆடைகள் விரும்பும் பெண்களுக்கு அன்-ஈவன் அசிமெட்ரிகல் டாப் (asymmetrical-top), ரஃபல் டாப் (ruffel top)தான் ஹாட் டிரெண்ட். இந்த வகை டாப்களுடன் ஜீன், லெகின், ஸ்கர்ட் போன்றவற்றை அணியலாம். சிம்பிளான ஃபேன்ஸி நகைகள் கூடுதல் அழகு சேர்க்கும்.  

மஸ்தானி

லாங் டாப் - ஸ்கர்ட் என வடிவமைக்கப்படும் மஸ்தானி உயரமான பெண்களுக்கு மிகப் பொருத்தமாகத் தேர்வாக இருக்கும். மஸ்தானியில் சென்டர் ஸ்லிட்தான் லேட்டஸ்ட் டிரெண்ட். ஹாஃப் நெட்டட் டாப் கடந்த வருடங்களில் டிரெண்டாக இருந்தாலும், பட்டில் வடிவமைக்கப்படும் லாங் டாப்தான் இந்த வருட மஸ்தானி ஸ்பெஷல். இதில், ஜர்தோஸி, ஆரி வேலைப்பாடுகளை உங்கள் விருப்பத்துக்கேற்ப அமைத்துக்கொள்ளலாம்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close