`மனிதனின் இடத்தை ரோபோவால் நிரப்ப முடியாது’ - விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா! | Rakesh sharma says No robot can replace the human experience

வெளியிடப்பட்ட நேரம்: 21:33 (29/09/2018)

கடைசி தொடர்பு:21:33 (29/09/2018)

`மனிதனின் இடத்தை ரோபோவால் நிரப்ப முடியாது’ - விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா!

ஐ.ஐ.டி மெட்ராஸின் வைரவிழாவை முன்னிட்டு இன்று முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் 'சங்கம் கான்க்ளேவ்' என்னும் சிறப்பு விழா நடைபெற்றது. இதைப் புதுவை கவர்னர் கிரண்பேடி தொடங்கிவைத்தார். பல்வேறு முக்கிய பிரமுகர்கள் இதில் கலந்துகொண்டு முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்களிடையே பேசினர்.

அதில் ஒருவராகப் பேசிய இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் ஷர்மா, "என்னதான் ரோபோக்களை விண்ணுக்கு அனுப்பினாலும் மனிதர்களை அனுப்புவதுக்கு அது ஈடாகாது. மனிதர்களை அனுப்பும்போதுதான் புதிய விஷயங்கள் பலவற்றை நம்மால் கண்டறிய முடியும்" என்று கூறினார். மேலும் ஜீரோ க்ராவிட்டியில் மேற்கொள்ள முடியும் பல்வேறு வித்தியாசமான ஆராய்ச்சிகளைப் பற்றி அவர் பேசினார்.

ராகேஷ் ஷர்மா

விழாவைத் தொடங்கி வாய்த்த கிரண்பேடி ஐ.ஐ.டி முன்னாள் மாணவர்கள் கைம்மாறாகத் தங்களது கல்லூரியின் வளர்ச்சிக்காக அவ்வப்போது உதவ வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், தானும் ஒரு ஐ.ஐ.டி (டெல்லி) முன்னாள் மாணவிதான் என நினைவுகளைப் பகிர்ந்தார். மேலும், கூகுளின் பொறியியல் இயக்குநர், அப்போலா மருத்துவமனைகளின் துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி எனப் பல்வேறு முக்கிய புள்ளிகள் ஐ.ஐ.டி மாணவர்கள் எப்படி எல்லாம் செயல்படலாம் என்பதைப் பற்றி பேசினர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க