மருத்துவமனையில் ரித்தீஷ்குமாரைப் பார்க்கச் சென்றபோது கையில் ஒட்டப்பட்டிருந்த பிளாஸ்திரியைத் தடவிக்கொண்டிருந்தான். பேசத் தொடங்கியபோது கூச்சம் கொண்டு ஒதுங்கிப் போனவனைத் தொட்டுப் பிடித்தேன். மெல்லிதாக சிரித்தபடி தன்னை அறிமுகப்படுத்திக் கைகுலுக்கினான்.

ரித்தீஷுக்குப் பன்னிரண்டு வயதாகிறது. தாலசீமியாக்குறைபாடு (Thalassemia) உள்ள அவனுக்கு ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உற்பத்தி ஆகாது. பிறந்த ஆறுமாதத்திலிருந்து தற்போது வரை மாதம் ஒருமுறை இருமுறை என இரத்தம் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தால் மட்டுமே அவனால் நடமாட முடியும்.

``மாசமாசம் சரியான டைம்ல நாங்க ட்ரீட்மென்ட்க்கு வரலைனா, அவனோட நடவடிக்கையில வித்தியாசம் தெரிய ஆரம்பிச்சுடும். நடந்துட்டே இருந்து அப்டியே சோர்ந்து கீழ விழ ஆரம்பிச்சுடுவான். சரியா சாப்பிட முடியாது. கைக்குழந்தையான ஆறுமாசத்துல இருந்து இப்போ வரை எம் புள்ளைக்கு இதான் சார் நிலைமை” எனச் சொல்லும் ரித்தீஷின் அம்மா சுஜாதாவுக்கு ரித்தீஷ் ஒரே பிள்ளை. மயிலாப்பூரில் வீட்டுவேலை செய்து தன் மகனைக் காப்பாற்றி வருகிறார். ரித்தீஷின் அப்பா லாரி ஓட்டுநர்.

“இதுக்கு அப்புறம் அவனுக்கு இரத்தம் ஏத்திட்டே இருக்க முடியாதாம் சார். உடம்புல இரும்புச் சத்து அதிகமாகி, கல்லீரலும் இதயமும் பாதிக்கப்பட்டுடும்னு சொல்றாங்க. எம்புள்ள பன்னிரண்டு வருஷமா ரொம்பக் கஷ்டப்படுறான்” என்று அழுகிற அம்மாவை எப்படி ஆற்றுப்படுத்துவது எனத் தெரியாமல் அவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ரித்தீஷ்.

இந்தக் குறைபாடு தீர்க்க முடியாத நோயும் அல்ல. ‘ஸ்டெம்செல்’ தானம் கிடைத்தால் Bone marrow transplant மூலமாக இந்தக் குறையிலிருந்து ரித்தீஷைக் காப்பாற்றலாம். ஒரே மரபைச் சார்ந்த ரத்தக் குருத்தணுக்கள் (Stem cell) தானமாகக் கிடைத்தால் மட்டுமே அவற்றை உடம்புக்குள் செலுத்தி இதை குணப்படுத்த முடியும். ஒரு லட்சம் பேரில் ஒருவரின் மரபணு மட்டும்தான் மற்றவருக்குப் பொருந்தும்.

சகோதர-சகோதரியின் மரபணுக்கள் பொருந்தலாம். ஆனால், ரித்தீஷுக்கு சகோதரனும் இல்லை, சகோதரியும் இல்லை; மரபணு பொருந்திப்போகின்றவர்கள் இருந்தாலும் அவர்கள் தானமாக வழங்க முன்வருவார்களா என்பதும் சந்தேகத்துக்குரிய கேள்வி. ஆகவே, Stem Cell கொடையாளர்களைத் தேடித் தருவதற்குத் தொண்டு நிறுவனங்களே பெரிய அளவில் வேலை செய்கின்றன.

ரித்தீஷுக்கு மிகப்பெரிய ஆறுதலான விஷயம் என்னவென்றால் நீண்டகாலக் காத்திருப்புக்குப் பிறகு அவனுக்கான கொடையாளர் கிடைத்துவிட்டார்கள். வருகிற பிப்ரவரி 19-ம் தேதி அவனுக்கான அறுவை சிகிச்சை நடக்கவிருக்கிறது. ஆனால், அதற்கான செலவு ஏறத்தாழ முப்பது லட்சம் ஆகும் என்கிறார்கள் மருத்துவர்கள். என்ன செய்வதென்று தெரியாத கையறு நிலையில் அவன் பெற்றோர்கள் மருத்துவ வளாகத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

ரித்தீஷிடம் என்ன பேசுவதென்று தெரியாமல் அவனிடம் சம்பிரதாயமான சில கேள்விகளைக் கேட்டேன்.

``தி.நகரிலுள்ள ஷ்ரைன் வேளாங்கண்ணி ஸ்கூல்ல செவன்த் படிக்கிறேண்ணா” என்று சொன்னவனுக்கு, வருங்காலத்தில் ஒரு சயின்ட்டிஸ்ட் ஆக வேண்டும் என்பது கனவாம். உதவும் உள்ளங்களின் துணையோடு நோயை வென்று நிச்சயம் விஞ்ஞானி ஆவான் ரித்தீஷ்!