“திருநங்கைகளுக்காக நடத்தப்படுற ஒரு அமைப்புல நான் வேலை செஞ்சிட்டிருந்தேன். எனக்கு திருநங்கைகளைப் பார்த்தா ஒரு பயம் இருக்கும். கண்டுங்காணாத மாதிரி இருப்பேன். அந்த மனநிலையில இருந்த நான், ஒரு திருநங்கையையே திருமணம் செஞ்சிருக்கேன்னா அப்படியொரு தூய்மையான அன்பை என்னால புறக்கணிக்க முடியல சார்” - ஸ்வேதாவின் தோள்களை அணைத்தபடி பேசுகிறார் பிரபாகரன்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பல எதிர்ப்புகளையும் மீறி ஒரு திருநங்கையைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர் பிரபாகரன். காதல் என்றாலே ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நடக்கக்கூடிய உணர்வு ரீதியான பந்தம் மட்டுமே என்கிற எண்ணங்களையெல்லாம் உடைத்த ஜோடிகளுள் ஒன்றான இவர்களை மெரீனா கடற்கரையில் சந்தித்தேன்.

“பிரபு ஃபீல்டு ஆபீஸரா வேலை செஞ்சிட்டிருந்த அமைப்புலதான் முதல்முறையா பார்த்தேன். அங்க வேலை சார்ந்து இவரோட பேச வேண்டியது அதிகமாச்சு. எங்களுக்கு வந்தது லவ்வா, ஃப்ரெண்ட்ஷிப்பான்னு தெரியாமலேயே பேசிப் பழகிட்டிருந்தோம். பேசுற நேரம் நாளுக்குநாள் அதிகமானதே தவிர குறையவே இல்ல. எது ஒண்ணுன்னாலும் மறக்காம ஷேர் பண்ணிக்குவோம். அது அப்படியே லவ்வா மாறுதுன்னு ரெண்டு பேருக்கும் தெரிஞ்சிடுச்சு. ஆனா இவர் என்ன நினைச்சுப்பாரோன்னு நான் ப்ரபோஸ் பண்ணல” எனக் கைகளால் வாயைப் பொத்தி நாணத்துடன் கண்களைச் சிமிட்டிச் சிரிக்கிறார் ஸ்வேதா.

“நான்தான் சார் ஸ்வேதாவுக்கு ப்ரபோஸ் பண்ணுனேன். அதைக் கேட்டுட்டு, கொஞ்ச நேரம் அழுதுட்டேயிருந்தாங்க. ஆனா அந்த அழுகை சந்தோஷத்தாலதான்னு மட்டும் எனக்குத் தெரியும்” எனச் சொல்லிச் சிரித்த பிரபாகரனிடம் “உங்க வீட்ல எதிர்ப்பு இருந்திருக்குமே?” என்றேன்.

``ரெண்டு பேருக்கும் பழக்கம் இருக்குன்னு வீட்டுக்குத் தெரிஞ்ச உடனே அவங்க எங்களைப் பிரிக்க என்னென்னவோ ப்ளான் போட்டாங்க. நான் அன்னிக்கு ராத்திரி வீட்டை விட்டு வெளியேறிட்டேன். போலீஸ்ல கம்ப்ளெய்ன்ட் கொடுக்கப் போயிட்டாங்க. ஸ்வேதாவும் என்னை லவ் பண்றது தெரிஞ்சதும் அவங்க கம்யூனிட்டில இருந்த திருநங்கைகளே அதை ஒத்துக்காதது எனக்குப் பெரிய அதிர்ச்சியா இருந்துச்சு” என்றவரை “இரு நானே சொல்றேன்” என ஸ்வேதா தொடர்ந்தார்.

“ `திருநங்கைனா, நீ பெண்ணா மாறிக்கலாமே தவிர, எந்த ஆணையும் திருமணம் செய்ய உனக்கு உரிமை இல்ல. ஒழுங்கா எங்க கூடவே இரு’ன்னு மிரட்டினாங்க. எங்க சொந்தங்களை விட்டு வெளியேறிய அப்புறம் ரெண்டு பேரும் இன்னும் கடுமையான எதிர்ப்புகளைச் சந்திச்சோம். வாழுறதுக்கு வீடுகூடக் கிடைக்காம ரொம்ப அவதிப்பட்டோம். சாதாரண ஜோடிகளுக்கே நம்ம ஊர்ல வீடு கிடைக்கிறது எவ்ளோ கஷ்டம். அப்போ எங்க நிலைமையை யோசிச்சுப் பாருங்க. நாங்க எங்கெங்கெல்லாம் தங்குனோம் தெரியுமா” என்ற ஸ்வேதா, அதைச் சொல்லலாமா எனத் தயக்கத்துடன் பிரபாகரனைப் பார்க்கிறார். பிறகு அதைத் தவிர்த்து, ``அதையெல்லாம் நினைச்சாலே இப்பவும் கஷ்டமா இருக்கு அண்ணா” எனக் கண் கலங்குகிறார் ஸ்வேதா.

``சரி எப்போதான் திருமணம் செஞ்சுகிட்டீங்க” என்று கேட்டால், இருவரும் ஒரே சமயத்தில் பேசத் தொடங்க, அது புன்னகையாக மாற, ``இரு நானே சொல்றேன்” என்கிறார் ஸ்வேதா.

``எது எப்படி இருந்தாலும் நாம ரெண்டுபேரும் லவ்வர்ஸ் டே அன்னிக்குதான் கல்யாணம் பண்ணிக்கணும்னு நான் பிரபுகிட்ட சொல்லியிருந்தேன். அதனால ப்ளான் பண்ண மாதிரியே 2014-ம் வருஷம் பிப்ரவரி 14-ம் தேதி மருதமலை முருகன் கோயில்ல திருமணம் செஞ்சி அங்கயே பதிவு பண்ணிக்கிட்டோம்” என்றார்.

ஆரம்பத்தில் எதிர்த்த பிரபாகரனின் குடும்பம் இவர்களுக்குள் இருக்கும் அன்பைப் புரிந்துகொண்டு பச்சைக்கொடி காட்ட, காதல் பயணம் தொடர்கிறது.

தான் ஓர் அழகுக்கலை நிபுணராக வேண்டுமென்கிற சிறுவயதுக் கனவை பலிக்கச் செய்வதற்காக, முறையாக அந்தக் கல்வியைக் கற்று, தற்போது சென்னையிலுள்ள பிரபலமான பார்லரில் அழகுக்கலை நிபுணராக இருக்கிறார் ஸ்வேதா. கணவர் பிரபாகரனும் ஸ்வேதாவை எங்கு முதன்முதலாகச் சந்தித்தாரோ அதே அமைப்பில் மீண்டும் வேலைக்குச் சேர்ந்து கணக்காளராகப் பணிபுரிகிறார். காதலுக்கு சாதி மத பேதங்கள் இல்லை என்பதைப் போன்று பாலின பேதங்களும் இல்லை என்பதை மிக வலுவாகச் சொல்கிறது இவர்களின் காதல் கதை!