வெளியிடப்பட்ட நேரம்: 16:44 (01/10/2018)

கடைசி தொடர்பு:16:44 (01/10/2018)

ஹீரோவாக முதல் படமல்ல... இரண்டாவது படம்! - கலக்கும் `சூப்பர் சிங்கர்' செந்தில்

தமிழ் சினிமாவில் இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், பின்னணிப் பாடகர்கள் எனப் பலரும் காலப்போக்கில் கதாநாயகர்களாக அரிதாரம் பூசுவார்கள். அந்த வரிசையில் இணைந்துள்ளார், 'சூப்பர் சிங்கர்' செந்தில்.

செந்தில்

 மண்மணம் மாறாத கிராமியப் பாடல்களால் விஜய் சூப்பர் சிங்கரில் அசத்திய செந்தில் - ராஜலட்சுமி ஜோடி  பட்டிதொட்டியெங்கும் ஃபேமஸ். செந்தில், சூப்பர் சிங்கர் டைட்டிலையும் வென்றார். இந்த ஜோடியின் பிரபுதேவா நடித்துள்ள 'சார்லி சாப்ளின் -2' படத்தில் 'ஏ சொல்லு மச்சான்... ' என்ற பாடல் மிகப் பிரபலமானது. தற்போது செந்தில் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் போஸ்டர், சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 'கரிமுகன்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பாடல்கள், கதை, வசனம் ஆகியவற்றை எழுதி , இயக்கமும் செய்துள்ளார் செல்வ.தங்கையா.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்வென்றால், இதே குழுவுடன் இணைந்து இதற்கு முன்பே ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் செந்தில். இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் , இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகின்றன.