`பரியேறும் பெருமாள்' கருப்பியின் ராப் கவர் பாடல் வெளியீடு! | Rap cover Of Pariyerum Perumal 'Karuppi Song' released.

வெளியிடப்பட்ட நேரம்: 17:59 (01/10/2018)

கடைசி தொடர்பு:18:16 (01/10/2018)

`பரியேறும் பெருமாள்' கருப்பியின் ராப் கவர் பாடல் வெளியீடு!

கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் படம் 'பரியேறும் பெருமாள்.' இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற 'கருப்பி , என் கருப்பி...' என்ற பாடல் படம் வெளியாவதற்கு முன்பாகவே ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. பலரும் தங்கள் செல்ல நாயைக் கருப்பியாக்கி, கருப்பியுடன் புகைப்படமெடுத்து சமூக வலைதளமெங்கும் பதிவிட்டனர். தற்போது, படம் வெளியாகியுள்ள நிலையில் 'கருப்பி என்ன சொன்னா' என்ற பெயரில் ரேப் கவர் சாங் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். 
 

 

 

காஸ்ட்லெஸ் கலெக்டிவ்வின் அறிவு இந்தப் பாடலின் ராப் இசையைப் பாடியுள்ளார். படத்தில் ரயிலில் அடிப்பட்டு இறந்துபோன கருப்பியைப் பார்த்து, கதாநாயகன் சில கேள்வியை முன் வைப்பதாகப் பாடல் இடம்பெற்றிருக்கும்.

கறுப்பி

அந்தக் கேள்விக்கெல்லாம் பதில் சொல்வதாக இப்பாடல் அமைக்கப்பட்டுள்ளது. 'கருப்பி என் கருப்பி ... என் கருப்பிய நான் பாத்தனே... எல்லாரும் ஒன்னில்லைனு சொல்ல சொன்னா, பொல்லாத சாதிய விட்டுத் தள்ள சொன்னா. மனுசன் மனித மாண்பை இழக்கிறான், மனசில் இருக்க அழுக்க கழுவி, எல்லாரையும் நல்லா படிக்கச் சொன்னா... எனப் பாடலின் வரிகள் இடம்பெற்றுள்ளது. 1 நிமிடம் மட்டுமே வரும் இந்தப் பாடல் ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகிறது.


[X] Close

[X] Close