Published:Updated:

கலாய் இலக்கியம்!

கலாய் இலக்கியம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கலாய் இலக்கியம்!

ப.சூரியராஜ், ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

ள் இறக்குவது, கரன்ட் எடுப்பது, பக்கோடா விற்பது என, வேதனையில் பாவம் தினுசு தினுசாய் யோசித்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் மக்கள். ஆனால், ஒன்றும் நடந்தபாடில்லை. ஆகையால், வேறு எப்படியெல்லாம் போராடலாம் என முந்திரிப் பக்கோடா சாப்பிட்டுக்கொண்டே மூளைக்கு வேலை கொடுத்ததில்..!

கலாய் இலக்கியம்!

* பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்து சைக்கிளில் சென்று போராட்டம் நடத்துவதெல்லாம் சிவாஜி காலத்து டெக்னிக். மாறாக,  பேருந்தினுள்ளே ‘பேருந்தில் செல்ல விரும்புபவர்களுக்கு லோன் தரப்படும்’ என ஸ்டிக்கர் அடித்து, ‘திருடர்கள் ஜாக்கிரதை’ ஸ்டிக்கர் அருகே ஒட்டிவைக்கலாம்.

* தொகுதிப்பக்கம் எம்.எல்.ஏ, எம்.பி-க்கள் வருவதில்லை என்றால், நேராக அவர்களது வீட்டுக்கே தாம்பூலத்தட்டோடு சென்று வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கலாம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கலாய் இலக்கியம்!

* சாலைகள் குண்டும் குழியுமாக இருந்தால், குழிகளில் பணியாரம் ஊற்றிச் சுடும் போராட்டம் நடத்தலாம்.

* ஊருக்குள் தண்ணீர் வசதி முறையாக இல்லை என்றால், ‘மிடில்கிளாஸ் மாதவன்’ படத்தில் வரும் வடிவேலுவைப்போல் வேட்டியைப் பின்னால் தூக்கிப் பிடித்துக்கொண்டு ஊருக்குள் வலம்வந்து வித்தியாசமாகப் போராட்டம் நடத்தலாம்.

* இதேபோல், பழுதான பஸ்களை மாற்றக்கோரிப் போராட்டம் செய்ய நினைத்தால், பேருந்தைக் காயலாங்கடைக்குப் போட்டுவிட்டதாக, அவல் சர்க்கரை வாங்கி அமைச்சருக்குக் கூரியர் செய்யலாம்.

கலாய் இலக்கியம்!
கலாய் இலக்கியம்!

ந்த மனுசப்பயலுக நல்ல ரைமிங்கோட, தக்க டைமிங்கோட டி-ஷர்ட்டிலேயே கதை சொல்லியிருக்காய்ங்க பார்த்துக்கங்கப்பு. ஆனா, இதெல்லாமே எதேச்சையாதான் நடந்ததுனு நான் சொன்னால் யார் நம்புவான்னு  தெரியலையேப்பு!

கலாய் இலக்கியம்!

1. ஆமா ஆமா ஆமோய்...

2. டி-ஷர்ட்டைத் தயாரித்தவர் தீர்க்கதரிசி.

3. தங்கச் சிரிப்புக்குத்தான் தமிழ்நாட்டை எழுதித் தரட்டுமா?

கலாய் இலக்கியம்!

ண்ணாத்தாள் படத்தில் வரும் ரகளையான டெம்ப்ளேட் இது. தன் காதலி சாந்திக்கு அன்று வேறொருவனுடன் திருமணம் எனும் சோகத்தில் பிராந்தியில் விஷம் கலந்து குடிக்கப்போவார் பாரதி கண்ணன். டைமிங்கில் அந்த இடத்திற்கு என்ட்ரியாகும் வடிவேலு  ``பிராந்தி குடிக்குற மூஞ்சியாடா உனக்கு, ஏன்டா எல்லோரும் சூனா பானா ஆகிட முடியுமாடா’’ என டம்ளரைப் பிடுங்கி, குடிக்கப்போவார். பாரதி கண்ணன் ``அதுல விஷம் கலந்துருக்குண்ணே’’ என எவ்வளவோ  சொல்லியும், காதில் வாங்கிக்கொள்ளாமல் வாயில் ஊற்றிவிடுவார் வடிவேலு. கொஞ்ச நேரத்திலேயே ``தொண்டை ரொம்பக் கவ்வுதுடா’’ என வடிவேலு அலற, ``விஷம்னா அப்படித்தானே இருக்கும்’’ என பாட்டிலைத் தூக்கிக் காட்ட, மரண பயத்தில் கதற ஆரம்பித்துவிடுவார். `தைரியமான ஆள் ஆச்சே சொல்லு’, `ஊறுகாய் இருக்கு, கஞ்சி இல்ல’ டெம்ப்ளேட்களின் வரிசையில், பார்த்தவுடன் குபீர் சிரிப்பு தொண்டையைக் கவ்வும் இந்த டெம்ப்ளேட்டும் மிகப்பிரபலம்.

கலாய் இலக்கியம்!
கலாய் இலக்கியம்!

ந்த விஜய் சூப்பர் டிவியில் முடிந்துபோன பிக்பாஸ் நிகழ்ச்சியை மறுஒளிபரப்பு செய்து மனுஷனை மனஉளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள். மாற்றம், முன்னேற்றம் என வாழவேண்டும், இப்படி போட்டதையே மீண்டும் மீண்டும் போட்டு காண்டு ஏற்றுகிறார்கள். ஹூம்ம்... அந்த ஒருகோடி ஓட்டு மட்டும் எனக்கு கிடைச்சிருந்தால்... ஆஹா! ஏன் இந்த மக்கள் ஆக்டர் பின்னாலேயே போகிறார்கள், டாக்டர் பின்னால் வருவதில்லை? கட்சியில் சேர என்ன கன்சல்டிங் ஃபீஸா கேட்கிறேன். எனக்கும் சினிமா பிடிக்கும்தான். சொல்லப்போனால், ‘பாகுபலியாகிய நான்...’ வசனமே  ‘அன்புமணியாகிய நான்...’ வசனத்தின் காப்பிதான். தி.மு.க. தான் காப்பி அடிக்கிறார்கள் என பார்த்தால், இவர்களும் இதே வேலையைத்தான் செய்கிறார்கள். ‘முதல் நாள் முதல் கையெழுத்து’ வசனத்தை கூட ‘முதல்வன்’ படத்தில் காப்பி அடித்திருந்தார்கள். என்னத்த சொல்ல...

இப்படிக்கு,
அன்புமணி
S/o ராமதாஸ்
இடம் : தைலாபுரம் மாமரத்தின் அடியில்