வெளியிடப்பட்ட நேரம்: 09:13 (02/10/2018)

கடைசி தொடர்பு:09:22 (02/10/2018)

கமலின் குர்தா... ரித்விகாவின் லெஹெங்கா... மும்தாஜ் ஹேர் ஸ்டைல்... எது உங்கள் ஃபேவரிட்!

அமைதியாய் இருந்து, ஆர்ப்பாட்டங்கள் ஏதுமின்றி பிக் பாஸ் கோப்பை மட்டுமில்லாமல் பலகோடி மக்கள் மனதையும் வென்றிருக்கிறார் ரித்விகா. இந்த ஆண்டின் பிக் பாஸ் ஷோவின் நூறு நாள்கள் 105-ஆக உயர்ந்தது. முதல் சீசனில் ஏற்பட்ட எதிர்பார்ப்பு இந்த சீசனில் குறைவுதான். அதனால்தான் என்னவோ, 'யார் வெற்றியாளர்?' என்ற கேள்விக்கு பதில் அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், 'அட! நம்ப முடியாதுப்பா! பலமுறை காப்பாற்றப்பட்ட ஐஸ்வர்யா, திடீருனு வின்னர்னு சொன்னாலும் சொல்லுவாங்க', என்ற பார்வையாளர்களின் ஒரு பக்க சந்தேகத்தை கடைசி நிமிடம் வரை மெயின்டெய்ன் பண்ணியிருக்கிறார் கில்லாடி பிக் பாஸ்.

ஐஸ்வர்யா, ரித்விகா இருவரையும் பிக் பாஸ் மேடையில் நிறுத்து வைக்கப்பட்டு, வெற்றியாளர் அறிவிப்புக்கு முன் நான்கு விளம்பரங்களை ஓடவிட்டு, டென்ஷன் ஏற்றி குளிர்காய்ந்துகொண்டிருந்தார் பிக் பாஸ். ஒருவழியாக ரித்விகாதான் வின்னர் என்று கமல்ஹாசன் கூறியதும், ஆனந்த கண்ணீரில் மூழ்கிப்போனார் ரித்விகா. இதெல்லாம் தெரிந்த விஷயம்தான். ஆனால், என்னைப்போன்ற பலருக்கும் வெற்றியாளர் அறிவிப்பைவிட மற்றொரு விஷயத்தின்மேல் அதிக கவனம் போனது. அதுதான் கமல் முதல் வரை அனைவரும் உடுத்தியிருந்த உடை. 

 

கலர்ஃபுல் மேடை அலங்காரம், அதில் நட்சத்திரங்களைப்போல் ஜொலித்த ஒவ்வொருவருடைய உடையும் 'ஆஸம்!'. பிக் பாஸ் டே ஒன் முதல் இறுதிநாள் வரை உங்கள் மனதை கவர்ந்த ஃபேவரிட் யார்?!

loading...