Published:Updated:

தொல்லியல் தொண்டர்!

தொல்லியல் தொண்டர்!
பிரீமியம் ஸ்டோரி
News
தொல்லியல் தொண்டர்!

சக்தி தமிழ்ச்செல்வன், படம்: ப.சரவணகுமார்

ராளமான ஆய்வு நூல்கள், லென்ஸ், சுற்றிலும் பண்டைய கால ஓவியங்கள் என நாகசாமியின் வீடே ஒரு மியூசியம் போல்தான் இருக்கிறது. தொல்லியல் துறையில் குறிப்பிடத்தகுந்த பணிகளைச் செய்ததற்காக 2017-ம் ஆண்டுக்கான பத்மபூஷண் விருது நாகசாமிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 87 வயதாகும் நாகசாமி, தமிழ்நாடு தொல்லியல் துறையின் முதல் இயக்குநர் என்ற பெருமை பெற்றவர். பெசன்ட் நகர் அப்பார்ட்மென்ட் ஒன்றில் வசிப்பவரை வாழ்த்துகளோடு சந்தித்தேன்.

தமிழ்க் கல்வெட்டுகள், மதுரை திருமலை நாயக்கர் மஹால், பாரதியார் வாழ்ந்த வீடு ஆகியவை குறித்த ஆச்சர்யமூட்டும் ஏராளமான தகவல்கள் அவரிடமிருந்தன.

கொடுமுடியின் அருகிலுள்ள ஊஞ்சலூர் தான் நாகசாமியின் சொந்த ஊர். தன் சொந்த ஊரில் எட்டாம் வகுப்பு வரை  படித்தவர். அதன் பிறகு கொடுமுடியில் பத்தாம் வகுப்பு வரை சம்ஸ்கிருதத்தை ஒரு மொழியாக எடுத்துப் படித்திருக்கிறார். மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரியில் சம்ஸ்கிருத இலக்கியத்தில் பி.ஏ ஹானர்ஸ் முடித்த கையோடு சென்னை அருங்காட்சியகத்தில் கலைப்பிரிவுத் தலைவராக 1959-ல் பணியில் சேர்ந்தார் நாகசாமி.

``எனக்குச் சின்ன வயசுலயிருந்தே இலக்கியம்லாம் படிக்கிற பழக்கம் இருந்ததால, எனக்கு அந்த வேலை ரொம்பப் பிடிச்சிருந்தது. அருங்காட்சியகத்துல சேர்ந்ததுக்கு அப்புறமா அங்க இருந்த பாரதியார் கைப்பட எழுதின கவிதைகளை முதன் முதலாக  பொதுமக்களோட பார்வைக்குக் காட்சியாக வச்சேன், நல்ல வரவேற்பு கிடைச்சது” என்பவரின் கண்களில் அவ்வளவு பரவசம்.

தொல்லியல் தொண்டர்!

பாரதியார் பிறந்த ஊரான எட்டயபுரத்துக்கு அவர் சென்றிருந்தபோது பாரதியார் பிறந்த வீடு, தீக்குச்சிகளுக்கு நெருப்பு உருவாக்கப் பயன்படும் ‘கந்தகம்’ தயாரிக்கும் கூடமாக இருந்துள்ளது. அதை மீட்டு  சீர்படுத்தி பொதுமக்கள் பார்வைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் நாகசாமி.

சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பொருள்களைப் பற்றிய தகவல் அடங்கிய கையேடு ஆங்கிலத்தில் இருந்திருக்கிறது. அதையெல்லாம் மாற்றி  ‘கலைச் செல்வங்கள்’ என்ற பெயரில்  முதன் முறையாகத்  தமிழில் கையேடு கொடுத்தது, தான் கலைப்பிரிவுத் தலைவராக இருந்தபோதுதான் என்பதில் நாகசாமிக்கு ரொம்பவே பெருமிதம்!

“மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் மஹால் அரசு அலுவலகமாகத்தான் முதலில் செயல்பட்டு வந்தது. அந்த மஹாலைத் தடுப்பு வைத்துப் பிரித்துப் பல அலுவலகங்கள் இயங்கி வந்தன. அதன் பிறகு நாங்கள் அதை மீட்டெடுத்து சில பணிகளை மேற்கொண்டு பொதுமக்கள் பார்வைக்குக் கொண்டுவர ஏற்பாடு செய்தோம்”  என்னும் நாகசாமி தமிழ் மொழியின் தொன்மை குறித்தும் பேசினார்.

 ``தமிழை உயர்த்த வேண்டும் என்பதற்காகப் பிற மொழிகளை நாம் எதிர்க்கத் தேவையில்லை. பிற மொழி வருகையால் அழிந்துவிடக்கூடியதல்ல நம் மொழி” என்கிறார் அக்கறையோடு.

தொடரட்டும் உங்கள் சேவை!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz