Published:Updated:

சட்டத்தை மதிப்பதுதானே சட்டமன்றம்?

சட்டத்தை மதிப்பதுதானே சட்டமன்றம்?
பிரீமியம் ஸ்டோரி
News
சட்டத்தை மதிப்பதுதானே சட்டமன்றம்?

சட்டத்தை மதிப்பதுதானே சட்டமன்றம்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் திறந்து

சட்டத்தை மதிப்பதுதானே சட்டமன்றம்?

வைக்கப்பட்டிருப்பது பல விவாதங்களைக் கிளப்பியுள்ளது. ‘இது சரியா’ என்ற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழக அரசியல் தலைவர்களில் தனக்கான ஆளுமைக்குணமும் வெகுமக்கள் ஆதரவும் கொண்ட தலைவர் ஜெயலலிதா என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. அவரைக் கடுமையாக விமர்சிக்கும் எதிர்க்கட்சியினர்கூட அவரது துணிச்சலையும் கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்ததையும் குறிப்பிட்டுப் பாராட்டியிருக்கின்றனர். மக்களால் நான்குமுறை முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜெயலலிதா. அதேநேரத்தில் இந்திய அரசியல் வரலாற்றில் முதன்முறையாக, பதவியில் இருந்தபோதே ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்குப்போன முதல் முதலமைச்சர், இறந்தபிறகும்கூட உச்சநீதிமன்றத்தால் ‘ஊழல் குற்றவாளி’ என்று உறுதிப்படுத்தப்பட்டவர் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. அவர் இறந்துவிட்ட காரணத்தால் தண்டிக்கப்படவில்லையே தவிர, அவர் தண்டனைக்குரிய குற்றவாளிதான் என்பது சட்ட நடைமுறைகளின்மூலம் நிரூபிக்கப்பட்ட ஒன்று.

சொத்துக்குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவரின் உருவப்படத்தை மகாத்மா காந்தியடிகள், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா ஆகியோருக்கு இணையாகத் தமிழகச் சட்டமன்றத்தில் வைப்பது பொதுவாழ்வில் தூய்மையைக் கடைப்பிடித்த அந்தத் தியாகத் தலைவர்களுக்குச் செய்யும் அவமரியாதை இல்லையா? தமிழ்நாடு சட்டமன்றத்துக்கும் இது பெருமைதரும் செயலா?

பல்வேறு நீதிமன்றங்களில் இருபது ஆண்டுக்காலம் மாறி மாறி நடந்த சொத்துக் குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்தைச் சட்டம் இயற்றப்படும் மன்றத்திலேயே வைப்பது மோசமான முரண் இல்லையா, தவறான முன்னுதாரணம் இல்லையா?

ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் அரசின் செலவில் சமாதி அமைக்கத் திட்டமிட்டிருப்பது, ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் வேலைகளில் இறங்கியிருப்பது, ஜெயலலிதாவின் புகைப்படங்களை அரசு அலுவலகங்களில் வைப்பது இவை அனைத்துக்கும் எதிராக நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன. இந்த வழக்குகளில் எல்லாம் தீர்ப்பு வருவதற்குமுன்பு அவசர அவசரமாக ஜெயலலிதாவின் உருவப்படத்தைச் சட்டமன்றத்தில் திறந்தது ஏன்? ‘காவிரிப் பிரச்னையில் நடுவர்மன்றத்தின் தீர்ப்பையோ நீதிமன்றத்தின் ஆணையையோ கர்நாடக அரசு மதிப்பதில்லை’ என்று குற்றம்சாட்டும் நாம், ‘ஜெயலலிதா ஊழல் குற்றவாளி’ என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தை மதிக்காமல், அவர் உருவப்படத்தைச் சட்டசபையில் வைப்பது நியாயம்தானா?

‘நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவரின் உருவப்படத்தைச் சட்டமன்றத்தில் வைக்கக் கூடாது என்று நாட்டில் எந்தச் சட்டமும் இல்லை’ என்று சொல்லி இந்தச் செயலுக்கு ஆளும்கட்சி வக்காலத்து வாங்கலாம். சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தித் தப்பித்துக்கொள்வதைவிட, மரபுகளுக்கும் மனசாட்சிக்கும் முக்கியத்துவம் தருவதுதான் ஜனநாயகத்துக்கு அவசியமான அடிப்படை.

சட்டத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவரின் புகைப்படத்தைச் சட்டமன்ற வளாகத்திற்குள் பெரிய சட்டம்போட்டு இந்த அரசு மாட்டியிருக்கிறதே, இதைவிட என்ன விதிமீறல் நாட்டில் நடக்க முடியும்?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz