வரலாறு எழுதிய அந்த ஒரு பாயின்ட்...சாம்பியன்ஷிப் வென்ற முதல் பெண் ஆனா கராஸ்கோ! | Ana Carrasco world's first women to win bike race championship

வெளியிடப்பட்ட நேரம்: 10:51 (03/10/2018)

கடைசி தொடர்பு:10:51 (03/10/2018)

வரலாறு எழுதிய அந்த ஒரு பாயின்ட்...சாம்பியன்ஷிப் வென்ற முதல் பெண் ஆனா கராஸ்கோ!

வரலாறு எழுதிய அந்த ஒரு பாயின்ட்...சாம்பியன்ஷிப் வென்ற முதல் பெண் ஆனா கராஸ்கோ!

பெண்கள் புல்லட் ஓட்டுகிறார்கள் என்பது ஆச்சர்யமான விஷயமாகப் பார்க்கப்படும் இதே காலகட்டத்தில், ஆனா கராஸ்கோ world super bike போட்டியை வென்று வரலாறு படைத்திருக்கிறார்.

ஆனா கராஸ்கோ

ஒரு பெண் பைக்ரேஸர் சாம்பியன் பட்டம் வாங்குவது உலகில் இதுவே முதல்முறை. நேற்று பிரான்ஸ் நாட்டின் மாக்னி-கோர்ஸ் சர்க்யூட்டில் நடைபெற்ற World supersport 300 ரேஸில் ஜெயித்து, ஒரு புள்ளி வித்தியாசத்தில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றிருக்கிறார் ஆனா கராஸ்கோ. ஸ்பானிஷ் பைக் ரேஸரான இவர் CEV MOTO2 போட்டியிலிருந்து கடந்த ஆண்டுதான் WSSP300 பைக் ரேஸுக்குள் நுழைந்தார். இந்த ஆண்டு போர்ச்சுகலில் நடைபெற்ற போட்டியில் முதலிடத்தில் வென்று, ஆண்களுக்கு நிகராக போடியத்தில் முதலிடத்தில் நின்ற உலகில் முதல் ரேஸர் என்ற வரலாற்றையும் படைத்துள்ளார்.

போர்ச்சுகலை தொடர்ந்து இத்தாலியின் ஐமோலா, இங்கிலாந்தின் டோனிங்டன் ரேஸ் டிராக்கில் தொடர் வெற்றி பெற்றார். பிறகு ப்ருனோ, மிஸானோ, போர்டிமா போன்ற டிராக்கில் சிறிய சறுக்கல்களைச் சந்தித்து நேற்று நடைபெற்ற கடைசிப் போட்டியான பிரான்ஸின் மாக்னி-கோர்ஸ் சர்க்யூட் போட்டிக்கு வந்தார்.

Ride like a Girl

சாம்பியன்ஷிப் போட்டியில் சக போட்டியாளர் ஸ்காட் டிரோவை விட 10 பாயின்ட்டுகள் முன்னிலையிலும், மிகா பெரஸ் விட 22 பாயின்டுகள் முன்னிலையிலும் இருந்தார் கராஸ்கோ. இதனால், கடைசிப் போட்டியில் முன்னிலையில் இருப்பவர்தான் சாம்பியன் ஆவார் என்ற நிலை இருந்தது. கராஸ்கோமீது யாருக்குமே நம்பிக்கை இல்லை. காரணம், சாம்பியன்ஷிப்பின் கடைசிப் போட்டியை 25-வது இடத்திலிருந்து ஆரம்பித்தார் இவர். டிரோவும், பெரஸும் ரேஸை முன் வரிசையில் ரேஸை ஆரம்பித்துச் சென்றுகொண்டிருக்க, தனது வேகத்தால் பின் வரிசை ரேஸர்களை பின்னுக்குத் தள்ளிக் கொண்டே இருந்தார்.

Ana Carrasco world's first women champion

டிரோவின் பைக்கில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் அவர் 6-வது லேப்பிலேயே ரேஸை விட்டு விலகிவிட்டார். இதனால், கராஸ்கோவின் தலைவலி கொஞ்சம் குறைந்திருக்கும். ஆனால், இன்னும் பெரஸ் முன்னிலையில் இருந்தது ரேஸை பரபரப்பாக்கியது. ரேஸ் முடிவதற்கு 3 லேப்களே இருந்த நிலையில், கராஸ்கோ 15-வது இடத்துக்கு முன்னேறினார், பெரஸ் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். கடைசி லேப்பில் கராஸ்கோ 13-வது இடத்தில் இருக்க பெரஸ் 4-வது இடத்தில் இருக்க பரபரப்பின் உச்சத்தில் இருந்த ரேஸின் கடைசி லேப் கடைசி கார்னரில் 3-ம் இடத்துக்கு முன்னேறி ரேஸ் லைன் அருகே வரும்போது வேகமாக முன்னேறி ரேஸை 2 ம்  இடத்தில் முடித்தார் பெரஸ். ரேஸின் முடிவில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் ஆனா கராஸ்கோ வரலாறு படைத்தார்.

``நான் ஜெயிச்சிடேனானு எனக்குத் தெரியலை. ரேஸ் முடிஞ்சி ஸ்லோ-டவுன் லேப் 5-வது கார்னர். அங்க இருந்த ஆடியன்ஸ் கிட்ட கேட்டப்போதான் தெரியும் நான் இந்த சாம்பியன்ஷிப்பை ஜெயிச்சது. இந்த சாம்பியன்ஷிப்பை இறந்துபோன ரேஸர் லூயில் சலோமுக்கு டெடிகேட் பண்றேன். ரேஸ் ஜெயிக்கணும், அது மட்டும்தான் என்னுடைய குறிக்கோளா இருந்தது. அதை மட்டும்தான் நான் யோசிச்சேன். சாம்பியன்ஷிப் ஜெயிச்சா முதல் பெண் ரேஸராக நான் இருப்பேன்னு உணரவில்லை." என்று ரேஸ் முடிந்து பேசினார் ஆனா கராஸ்கோ

ஆனா கராஸ்கோ பைக்ரேஸ் உலகின் முதல் பெண் சாம்பியன்.

மோட்டோ ஜிபி ரேஸ் என்றால் அதற்குப் பிரத்தியேகமான பைக்கைத் தயாரிப்பார்கள். ஆனால், சூப்பர் பைக் போட்டியில் சந்தையில் விற்பனையில் இருக்கும் பைக்கை கொண்டுவந்து ஓட்டவேண்டும். இதனால், இதை ரோடு ரேஸ் சாம்பியன்ஷிப் என்றும் சொல்வார்கள். சூப்பர் பைக் போட்டியில் கவாஸகி, கேடிஎம், யமஹா, ஹோண்டா மற்றும் பிஎம்டபிள்யூ பைக்குகள் அதிகம் புழங்கும். கடந்த ஆண்டுதான் மோட்டோ 3 போல 300 சிசி பைக்குகளுக்குக்கான World supersport 300 சாம்பியன்ஷிப்பை உருவாக்கினார்கள். சாம்பியன் டிரைவர் ஆனா கராஸ்கோ ஓட்டியது புதிதாக வந்த கவாஸகி நின்ஜா 400. கன்ஸ்ட்ரக்டர் சாம்பியன்ஷிப்பையும் இந்த முறை கவாஸகி நிறுவனம்தான் ஜெயித்தது. பெண்கள் ரேஸ் உலகில் அசத்திவருகிறார்கள். சவுதியில் கார் ஓட்ட அனுமதி கொடுத்த உடனே அங்கு பெண் ஃபார்முலா ஒன் ரேஸர் உருவாகிவிட்டார்.


டிரெண்டிங் @ விகடன்