'அவர் ரொம்ப சீரியஸ்லாம் கிடையாதுங்க!' - இயக்குநர் ராம் மனைவி சுமதி | ''He is very jolly person'' - director Ram's wife shares about her husband

வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (03/10/2018)

கடைசி தொடர்பு:16:10 (03/10/2018)

'அவர் ரொம்ப சீரியஸ்லாம் கிடையாதுங்க!' - இயக்குநர் ராம் மனைவி சுமதி

''இயக்குநர் ராம் பற்றி எங்களுக்குத் தெரியாத சில விஷயங்களைப் போட்டு  உடையுங்களேன்'' என்றதும், சிரித்த முகத்துடன் பகிர்கிறார், ராமின் மனைவி சுமதி.

இயக்குநர் ராம் மகளுடன்

''என் கணவரும் பசங்களும் ஒண்ணுசேர்ந்தால் அவ்வளவுதான், வீடே ரெண்டாகிரும். ராமை வீட்டுல எல்லோரும் ‘புனிதன்’னு கூப்பிடுவாங்க. நானும் அப்படித்தான் கூப்பிடுவேன். அவர் ரொம்ப சீரியஸானவர்னு பலரும் நினைச்சுட்டிருக்காங்க. நிஜத்தில், அவர் ரொம்பவே ஜாலியான பர்சன். பேசிட்டிருக்கும்போது திடீர்னு கவுன்டர் அடிப்பார். அவரும் எங்க பொண்ணும் பயங்கர குளோஸ். இப்போ எங்க பொண்ணு பத்தாவது படிக்கிறாங்க.  அவங்க கேட்கிறதை எல்லாம் எனக்குத் தெரியாம அடிக்கடி அவங்களைக் கூட்டிட்டுப்போய் வாங்கிக்கொடுத்துடுவார். ‘அப்பா – மகள்’ அன்பு வீட்டுக்குள் அலாதியாகவே இருக்கும். இப்போ, பொண்ணு போட்டோகிராஃபியில் ஆர்வமா இருக்காங்க. அதைத் தெரிஞ்சுகிட்டு, ஒரு கேமரா வாங்கிக்கொடுத்து சர்ப்ரைஸ் பண்ணினார். அவருடைய 'தங்கமீன்', எங்க பொண்ணுதான்!'' என நெகிழ்கிறார் சுமதி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க