வெளியிடப்பட்ட நேரம்: 17:05 (03/10/2018)

கடைசி தொடர்பு:17:29 (03/10/2018)

தொழில் தொடங்க சிறந்த நாடுகளில் இந்தியாவுக்கு முதலிடம்! - இணையதள ஆய்வு முடிவு

சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைத் தொடங்க, உலகின் சிறந்த இடமாக இந்தியா திகழ்வதாக இணையதள ஆய்வில் தெரியவந்துள்ளது. 

சிறு தொழில்

எஸ்இஎம் ரஷ் (SEMrush) என்ற ஆன்லைன் டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனம், தொழில் தொடங்க சிறந்த இடம் எது என்ற தேடுதல் பட்டியலில், அதிகம் நபர்களால் தேடப்பட்ட முதல் 10 நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னணியில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இதில், இந்தியர்களைப் பொறுத்தமட்டில் அவர்களின் தாய்நாடே, தொழில் தொடங்குவதற்கான முதல் விருப்பமான நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதோடு, சிறு மற்றும் நடுத்தர ரக தொழில் தொடங்குவதற்கான முன்னுரிமை நாடு என்ற பட்டியலிலும் முதலிடத்தில் இடம்பெற்றுள்ளது. 

இது தொடர்பாக எஸ்இஎம் ரஷ் நிறுவனத்தின் பிராந்திய விற்பனை மேலாளர் ரோஹன் கூறுகையில், "இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்  4.25 கோடி உள்ளன. இவற்றின் சராசரி வளர்ச்சி விகிதம் 10 சதவிகிதமாக உள்ளது. இந்தியாவின் ஜி.டி.பி விகிதத்துக்கு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், உற்பத்தித்துறை மூலம் அளிக்கும் பங்களிப்பு 6.11 சதவிகிதமாகவும் சேவைகள் துறைகள் மூலம் அளிக்கும் பங்களிப்பு 24.63 சதவிகிதமாகவும் உள்ளது" எனத் தெரிவித்தார்.

கடந்த 12 மாதங்களாக ‘how to start a company in’, ‘opening business in’, ‘found a business in’ என்ற வெவ்வேறு தலைப்புகளில் தேடப்பட்ட சில முக்கிய தேடுதள பிரிவுகளில் அதிகம் பேரால் தேடப்பட்ட நாடாக இந்தியா உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 

இந்தப் பட்டியலில், இந்தியாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் சிங்கப்பூரும், பிலிப்பைன்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முறையே மூன்று மற்றும் நான்காவது இடங்களிலும் உள்ளன. ஆஸ்திரேலியா, கனடா மற்றும் ஐக்கிய அரபு எமிரேடு போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவைத் தேடியவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. 

சிங்கப்பூரைப் பொறுத்தவரை அதன் வேலைவாய்ப்பின்மை விகிதம் 2.1 சதவிகிதமாகவும், ஜிடிபி விகிதம் நபர் ஒன்றுக்கு 53,000 டாலராகவும் உள்ளது. இதனாலேயே உலக அரங்கில் சிங்கப்பூரின் பொருளாதாரம் மிக வலுவானதாக இருக்கிறது. இதற்கு 99 சதவிகிதம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்பே காரணமாக உள்ளது. இதனாலேயே, தொழில் தொடங்குவதற்கான சிறந்த நாடுகளில் பட்டியலில் சிங்கப்பூர் உலக அளவில் அதிகம் பேரால் விரும்பப்படும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது.   

நீங்க எப்படி பீல் பண்றீங்க