ஒரு சராசரி மனிதன், ஒரு நாளில் எட்டு முதல் பன்னிரண்டு மணிநேரத்தை, தான் வேலை செய்யும் இடத்தில்தான் செலவழிக்கிறான். கிட்டத்தட்ட ஒரு நாளின் பாதி இது. வீட்டில் இருக்கும் நேரத்தைவிட வேலையில் இருக்கும் நேரம்தான் அவனுக்கு அதிகமாக உள்ளது. இதுவே மாதக்கணக்கில், வருடக்கணக்கில் தொடரும்போது, வேலையின் தன்மைகளும் சூழ்நிலைகளும் நெருக்கடிகளும், அவனை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கின்றன. இருந்தும் குடும்பத் தேவைகளின் காரணமாக, வேலையை விட முடியாமல், அதே வேலையைத் தொடர்ந்து செய்வதால் அவனுக்கு ஏற்படுவதுதான், Occupational Diseases என்ற `தொழில் சார்ந்த நோய்கள்.’

நமது நாட்டில் மட்டும் ஒவ்வொரு வருடமும், 17 மில்லியன் மக்கள் பணிசார்ந்த நோய்களால் பாதிப்படைகின்றனர் என்கிறது ஓர் ஆய்வு. அவர்களில் கிட்டத்தட்ட 20% பேரை, நாம் இழந்தும்விடுகிறோம் என்றால் இதன் தீவிரத்தைச் சற்று உணரலாம்...

`பணி சார்ந்த பிணிகள்’ என்றதும் ஏதோ இப்போது ஐ.டி. துறை வந்த பிறகுதான் இது ஆரம்பித்தது என்று எண்ணிவிட வேண்டாம். நமது முப்பாட்டன்கள் ஆடு மாடு மேய்க்கும்போதே இது ஆரம்பித்துவிட்டது.ஆடு மாடுகளைத் தாக்கிய ஆன்த்ராக்ஸ் கிருமிகள் அவர்களையும் தாக்க, காரணம் தெரியாமல் அவர்கள் இறக்கவும் நேரிட்டது.

அன்று தொடங்கிய தொழில்சார் நோய்களின் வரலாறு, இன்றுவரை டீச்சர், டாக்டர், இன்ஜினீயர், விண்வெளி ஆராய்ச்சியாளர் என யாரையும் விட்டுவைக்காமல் இன்னும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

கொல்லும் ரசாயனங்கள்

நீண்ட காலம் நிலக்கரிச் சுரங்கங்களில், ரசாயனத் தொழிற்சாலைகளில், உணவு மற்றும் உரக் கம்பெனிகளில், பருத்தி மற்றும் சர்க்கரை ஆலைகளில் தொடர்ந்து வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் சற்று பயத்தையே உண்டாக்குகின்றன. இயந்திரங்களின் அதிர்வுகளால் நிரந்தர தசைவலி, எலும்பு மற்றும் மூட்டு பாதிப்பு, இயந்திரங்களின் பெரும் இரைச்சலால் ஏற்படும் காது கேளாமை, அதிக வெளிச்சத்தினால் பாதிக்கப்படும் கண் பார்வை என்று ஒவ்வொரு உறுப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன இயந்திரங்கள். இரசாயனக் கலவைகள் உண்டாக்கும் தோல் அரிப்பு, அலர்ஜிக் டெர்மடைட்டிஸ் என்ற ஊறல், மூச்சுத்திணறல், ஆஸ்துமா, நாட்பட்ட நுரையீரல் பாதிப்பு ஆகியனவும் இவர்களுக்கு ஏற்படும். மாஸ்க், கையுறைகள் மற்றும் கண் கண்ணாடிகளில் தொடங்கும் பாதுகாப்பு வழிமுறைகள், சுத்தமான காற்று, நீர், தகுந்த மருத்துவப் பரிசோதனைகள், மருத்துவ ஆலோசனைகள், தடுப்பூசிகள், சிகிச்சை முறைகள், புனர்வாழ்வு என, இந்தப் பட்டியல் நீண்டுகொண்டேதான் உள்ளது. அதைச் சரியாகப் பின்பற்றுவதன் மூலம் ஆபத்துகளைக் குறைக்கலாம்.

ஆசிரியர்களுக்கும் இருக்கிறது ஆபத்து

நான்கு சுவர்களுக்குள்ளேயே இவர்கள் தொடர்ந்து பணிபுரிவதால், காய்ச்சல், சளி, தொண்டை வலி, அலர்ஜி, கண் எரிச்சல், சிறுநீர்த் தொற்று போன்றவை இவர்களை எளிதாக பாதிக்கின்றன.

நான்கில் ஓர் ஆசிரியருக்கு, குரல் சம்பந்தப்பட்ட vocal nodules என்ற தொண்டைக்கட்டு நோயும், பேச்சு மற்றும் மொழித்திறன் பாதிப்பும் (Speech and Language Disorder) ஏற்படுகின்றன. இவை அனைத்திற்கும் மேலாக, பணியில் பதற்றநிலை, மன அழுத்தம் மற்றும் வன்முறைகளை இவர்கள் அதிகம் சந்தித்துக்கொண்டே இருக்கின்றனர். நல்ல வெளிச்சம், சுத்தமான காற்று, சுகாதாரமான நீர், மனவியல் ஆலோசனைகள் போன்றவை உடனடித் தீர்வாக இருந்தாலும், அவ்வப்போது இவர்களுக்கு `வாய்ஸ் ரெஸ்ட்’ மற்றும் `பிரெய்ன் ரெஸ்ட்’ கட்டாயம் தேவைப்படுகிறது என்கிறார் மருத்துவர் லீ அக்ஸ்ட்.

நின்றதால் கொல்லும்...

விற்பனையகங்களில் வேலைபார்க்கிற ஊழியர்கள், வாட்ச்மேன்கள், சேல்ஸ்மேன்கள் வாழ்நாளின் பாதியை நின்றுகொண்டே கழித்துவிடுகின்றனர். இதனால் கால்வலி, கணுக்கால் வீக்கம், முட்டிகளில் நீர் சுரப்பு, வெரிக்கோஸ் வெய்ன்ஸ் எனும் கால் நரம்பு வீக்கம், Lumbago எனும் முதுகு வலி, மூட்டு வலி ஆகியன ஏற்படுகின்றன. இந்த சேல்ஸ்மேன் மற்றும் வாட்ச்மேன்களைப் போலவே நீண்ட நேரம் நின்றபடி வேலை செய்யும் நடத்துநர், சர்வர், மெஷின் ஆபரேட்டர், டிராஃபிக் போலீஸ், செவிலியர்கள் என அனைவரையும் பாதிக்கின்றது. தொடர்ந்து நின்றபடி பணி செய்யும்போது ஓடாத கடிகாரத்தின் பெண்டுலமாய் நிற்கும் இவர்களின் முதுகுத்தண்டு, சட்டென உடல் இயங்கத் தொடங்கியதும் ஆடும் பெண்டுலமாக மாறி, தசைகளையும் தசைநார்களையும் இறுக்குகிறது. இதனால் உண்டாவதே இந்த வலிகள் அனைத்தும். மேலும் நின்றுகொண்டே இருப்பதால், காலின் தசைகளில் தேங்கி நிற்கும் ரத்தம், இதயத்திற்கும் மற்றும் உடலின் மேற்புற உறுப்புகளுக்கும் தக்க சமயத்தில் சென்றடைவதில்லை. தலைச்சுற்றல், தலைவலி, திடீர் மயக்கம் என, பல சேல்ஸ் பெண்கள் சரிந்து விழுவது orthostatic hypotension என்ற இந்தக் குறைந்த ரத்த அழுத்தத்தின் காரணமாகத்தான். சில சமயங்களில், கால்களின் ரத்தக் குழாய்களில் நாட்படத் தங்கிய ரத்தம் உறைந்து, ரத்தக் குழாய்களில் அடைப்பாக (Deep vein thrombosis) மாறுவதால் ஆளையே கொல்லும் இதய, மூளை மற்றும் நுரையீரல் பாதிப்புகளுக்கும் இவர்கள் ஆளாக நேரிடுகிறது. இவற்றையெல்லாம் குறைக்க, பணிநேரத்தின் இடையே தக்க இடைவெளிகளில் ஓய்வுகள், சிறு சிறு உடற்பயிற்சிகள், தகுந்த காலணிகள் ஆகியன மட்டுமே இவர்களுக்கு இதிலிருந்து தப்பப் பெரிதும் உதவும். கால்களைச் சற்று உயரத்தில் வைத்து ஓய்வெடுப்பதும், தேவைப்படும்போது, இயன்முறைப் பயிற்சிகளை அளிப்பதும் இதற்கு அடுத்தநிலைத் தீர்வுகளாகும்.

மருத்துவர்களின் கவனத்துக்கு...

நீண்ட நேரப்பணியால் ஏற்படும் தூக்கமின்மை, அசிடிட்டி, மன அழுத்தம், முதுகு வலி ஆகியன மருத்துவர்களின் நிரந்தரச் சாபம் எனலாம்.பன்றிக் காய்ச்சல், அம்மை நோய் போன்ற காற்று மற்றும் தொடுதலில் பரவும் தொற்றுநோய்கள் ஒருபுறம் இருக்க, Needle stick injury எனப்படும் ஊசியால் ஏற்படும் காயங்களும், அதன் வழியாகப் பரவும் ஹெச்ஐவி, ஹெபடைடிஸ் போன்ற ஆபத்தான நோய்களின் எண்ணிக்கையும், மருத்துவர்களுக்கும் லேப் டெக்னீஷியன்களுக்கும் செவிலியர்களுக்கும், மருத்துவமனைத் துப்புரவுப் பணியாளர்களுக்கும் சற்று அதிகமாகவே ஏற்படுகிறது. அனஸ்தீசியா மருந்துகளின் சுவாசத்தால் ஏற்படும் அலர்ஜி, மயக்கம், மருத்துவ உபகரணங்களின் ஒளி, சூடு அல்லது புகையினால் ஏற்படும் கண், நுரையீரல் மற்றும் தோல் நோய்கள், எக்ஸ்ரே கதிரியக்கத்தால் தோன்றும் புற்றுநோய்கள் என மருத்துவப் பிணிகளின் பட்டியலும் சற்று நீளமானதுதான். அனைத்து மருத்துவ வசதிகள் கிடைக்கப் பெறும் நிலையில் இருந்தபோதிலும், தூக்கமின்மை மற்றும் மன அழுத்தத்தின் காரணமாக, இளம் மருத்துவர்களை மருத்துவ உலகம் சமீப காலமாக இழந்துவிடுகிறது என்பது பெரும் வலி.

இது ஐ.டி ஆபத்து!

தொழில் சார்ந்த நோய்கள் அதிகம் காணப்படுவது ஐ.டி துறையில்தான். உடல் உழைப்பு சிறிதும் இல்லாத மென்பொருள் பொறியாளர்களுக்கு இந்த வேலை கொடுக்கும் உடனடிப் பரிசு உடற்பருமன் தான். கூடவே இதனுடைய இலவச இணைப்பாய் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், பக்கவாதம், கண்பார்வைக் குறைபாடுகள், கழுத்து மற்றும் இடுப்பு வலி, விரல் மற்றும் மூட்டு வீக்கம் என அனைத்தும் இவர்களிடத்தில் காணப்படுகின்றன. ஹார்மோன்கள் மாற்றங்களால் ஆண், பெண் இருபாலரிடையேயும் குழந்தைப் பேறின்மை மிக அதிகமாகக் காணப் படுகிறது. ஒளித்திரையின் முன் தொடர்ந்து பணிபுரியும் இவர்களுக்கு, உடற்சோர்வு, தலைவலி, தூக்கமின்மை, பதற்ற நிலை, மன அழுத்தம் என அனைத்தும் சேர்ந்து தற்கொலை முயற்சியில்கூட இவர்களை ஈடுபடச் செய்கிறது. அதிகநேரம் கணினித் திரைக்குமுன்னால் அமர்ந்து வேலைபார்க்கிறவர்கள் 20 நிமிடத்துக்கு ஒருமுறையாவது, கணினியின் ஒளித்திரையிலிருந்து 20 அடி தூரத்தில் உள்ள ஏதாவது பொருள் ஒன்றை, 20 விநாடிகளாவது பார்க்க வலியுறுத்துகிறது மேயோ கிளினிக். அவ்வப்போது வெயில் படும்படியான ஒரு நடைப்பயிற்சி, நண்பர்களுடன் சிறு அரட்டை, குளிர்ந்த நீர் ஆகியன பணியிடையே இவர்கள் செய்ய வேண்டிய எளிய ரிலாக்ஸ் முறைகள். கண்களைக் கூசச் செய்யாத ஒளித்திரை மற்றும் கண்ணாடி, (Antiglare screen and spectacles) தகுந்த இருக்கைகள், தண்டுவட இயன்முறைப் பயிற்சிகள், கழுத்துக்கான ஓய்வு, தேவைப்படும்போது மனவியல் ஆலோசனைகள் ஆகியன இவர்களுக்கான அடுத்தநிலைத் தீர்வுகளாகும்.

வேலையில்லாப் பட்டதாரிகளுக்கும்...

எந்த வேலைக்கும் போகாமல் வெட்டியாக இருப்பவர்களுக்கும்கூட ஆபத்துகள் இருக்கின்றன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இன்று சும்மா இருக்கும் பலரும், வெட்டியாகப் பொழுதைப் போக்கிட ஸ்மார்ட் போனைத்தான் ஆயுதமாகத் தொடர்ந்து உபயோகப்படுத்துகின்றனர். ஒரு நாளில் மூன்றிலிருந்து நான்கு மணிநேரம் வரை தொடர்ந்து, சிறிய ஸ்கிரீனை உற்று நோக்கும் இவர்களுக்கும் இதே கழுத்து வலி, தூக்கமின்மை, மன அழுத்தம் ஆகியன ஏற்படுகின்றன. கடந்த ஐந்து வருடங்களாக, இவர்களில் சரிபாதியினருக்கு, ‘Text claw’ எனப்படும், கட்டை விரல் வீக்கம் மற்றும் வலி அதிகம் காணப்படுவதாக அமெரிக்க ஆய்வு கூறுகிறது. “Grip and Grasp” என்ற கைகளின் அதிமுக்கியமான பிடிமானப் பணிக்கு அச்சாணியாக விளங்கும் கட்டைவிரல் மனிதனின் அடையாளங்களுள் முக்கியமான ஒன்றும்கூட.

இறுதியாக...

வேலையில் இருந்தாலும், சும்மா இருந்தாலும், சரியான அளவிலான ஆழ்ந்த தூக்கம், சீரான (Balanced diet) இயற்கை உணவுமுறைகள், உடற்பயிற்சி, யோகா, தியானம், மூச்சுப்பயிற்சிகள் ஆகிய வாழ்க்கைமுறை மாற்றங்கள் அனைவருக்கும் பொதுவானவை. வேலை எதுவாக இருந்தாலும் இவற்றையெல்லாம் வழக்கமாக்கிக்கொண்டால் எந்தப் பிரச்னையும் இருக்காது!