விளிம்பு நிலை மனிதர்களின் தோல் வரலாறு நெடுகிலும் பல கோடி முறைகள் உரிதெடுக்கப்பட்டிருக்கிறது. அவையெல்லாம் அடக்குமுறையால் நிகழ்த்தப்பட்டவை. ஆனால் இப்போது அதே ஏழை மனிதர்களின் தோல் விற்பனைக்காக உரித்தெடுக்கப்படுகிறது. உலகையே அச்சுறுத்துகிற விஷயமாக வளர்ந்துகொண்டிருக்கிறது ‘ஸ்கின் டிராஃபிக்கிங்.’

உலகின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் பணக்காரரின் அழகு சீரமைப்புச் சிகிச்சைக்காக, எங்கோ இருக்கும் ஓர் ஏழையின் தோல் உரிக்கப்பட்டு கடத்தப்படுகிறது. சட்டத்துக்குப் புறம்பாக நடக்கும் இந்த சர்வதேசத் தோல் சந்தைக்கு, நேபாளம் தொடங்கி மும்பை வரை சப்ளையர்கள் இருக்கிறார்கள். இங்கெல்லாம் சிவப்பு விளக்குப் பகுதிகளில் வாழும் ஏழைப்பெண்கள்தான் இந்த தோல் வியாபாரிகளின் முதல் இலக்கு. காரணம், அவர்களின் சிவப்பு நிறம் மற்றும் ஏழ்மை. இந்தப்பெண்கள் தங்களின் தோலை மிகக் குறைந்த விலைக்கு விற்கிறார்கள், அல்லது அவர்களின் அனுமதியின்றி, மயக்க நிலையில் அவர்களின் தோல் திருடப்படுகிறது. அதற்காகச் செயல்படும் ஏஜென்ட்டுகள், சர்வதேச தோல் சந்தை, பாதிக்கப்பட்ட பெண்கள் என... செய்திகளைத் திரட்டத் திரட்ட, ரத்த வாடையோடு கிடைக்கின்றன அதிர்ச்சித் தகவல்கள்.

மும்பை சிவப்பு விளக்குப் பகுதியில் பாலியல் தொழிலில் சிக்கிக்கொண்ட நேபாளப் பெண் தாபா, அதிலிருந்து தப்பித்து உயிருக்கு பயந்து ஓடிக்கொண்டிருந்தபோது, தன் முதுகில் ஏற்பட்டிருந்த காயம், அன்று வந்த வாடிக்கையாளரால் ஏற்படுத்தப்பட்டது என்று நினைத்தார். ஆனால், அது அவர் தோல் திருடப்பட்டதால் ஏற்பட்ட காயம் என்பதை ஒரு வருடம் கழித்தே அறிந்துகொண்டார். அப்போதும்கூட, யாரோ ஒரு பணக்காரரை அழகாக்கத் தன்னுடைய தோல் திருடப்பட்டிருக்கிறது என்பதே அவர் அறிந்த விவரம். 110 மில்லியனுக்கு மேல் பணம் புரளும் ‘ஸ்கின் மார்க்கெட்’ மாஃபியா தொழிலில் தானும் ஒரு விக்டிம் ஆகியிருப்பது தாபாவுக்குத் தெரியாது.

தாபாவைப்போல இன்னும் எண்ணற்ற பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதைத் தனது கள ஆய்வின் மூலம் அறிந்து முதன்முதலில் பதிவுசெய்தவர், டெல்லியைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் சோமா பாசு. அவரிடம் பேசினேன்.

“காத்மண்டு, ஷாக்டாபூருக்கு அல்லது இந்திய - நேபாள எல்லையின் பார்டரில் இருக்கும் ஏதேனும் ஒரு பகுதிக்கு இந்தப் பெண்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். ஏழ்மைச் சூழ்நிலையால் தோலை விற்க வரும் பெண்களுக்கும், தங்களுக்கு என்ன நடக்கவிருக்கிறது என்பதே தெரியாமல் அங்கு அழைத்துவரப்படும் பாலியல் தொழிலாளிகளுக்கும் மயக்க மருந்து கொடுக்கப்படுகிறது. பின்னர் அங்கிருக்கும் சிறிய கிளினிக்குகளில் வைத்து அவர்களின் தோல் எடுக்கப்படுகிறது. சேகரிக்கப்பட்ட தோல் அனைத்தும் சிறிய லேப்களிலிருந்து நடுத்தர வகை லேப்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பதப்படுத்தப்படுகின்றன. பிறகு, அவை ஒரு நவீன லேப்புக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு தோல்களிலிருந்து திசுக்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இந்த ‘ரா மெட்டீரியல்’ அடுத்ததாக அமெரிக்காவுக்கு அனுப்பப்படுகிறது. பின்னர் அங்கிருந்து அவை சிகிச்சைக்குத் தேவையான ஒரு முழுமையான பிராண்டட் ‘புராடக்ட்’ ஆக இந்தியா உட்பட பல நாடுகளுக்கும் அனுப்பிவைக்கப்படுகிறது’’ என மனிதர்களுடைய உயிரும் தோலும் எப்படி ‘புராடக்ட்’டுகளாகின்றன என்று சோமா பாசு விவரித்தபோது நம் தோல் கூசுகிறது.

‘`நேபாளத்தைச் சேர்ந்த பலர் சிறிய ஏஜென்ட், பெரிய ஏஜென்ட், அதைவிடப் பெரிய ஏஜென்ட் என்று பல படிநிலைகளில் வேலைபார்க்கிறார்கள். இவர்களெல்லாம் விக்டிம்களுடன் நன்றாகப் பழகுவார்கள். மகளுடைய திருமணச் செலவுக்கு மறுகி நிற்கும் தந்தைக்கு உதவி செய்வதாகச் சொல்லி, அவரது உடல் உறுப்பினை ‘தானம்’ செய்யவைப்பது, வேலை வாங்கித்தருவதாகச் சொல்லி நேபாளப் பெண்களை நாடெங்கிலும் உள்ள ‘மசாஜ் பார்லர்களுக்கு’ வேலைக்கு அனுப்பிவைப்பது, தோல் ‘தானம்’ செய்யவைப்பது என, இவர்கள் கைகளில் பல அசைன்மென்ட்டுகள். தவிர, ஒருமுறை தோல் அல்லது உடல் உறுப்புக் கடத்தலுக்கு ஆளாகி பாதிக்கப்பட்டவர்கள், இதில் புரளும் பணத்தைப் பார்த்துவிட்டு ஏஜென்ட்டுகளாக மாறிவிடுவதும் நடந்திருக்கிறது’’ என்கிறார் சோமா பாசு.

100 இன்ச் தோலைக் கொடுக்கும் பெண்களுக்குக் கிடைப்பது அதிகபட்சம் 10,000 ரூபாய் அல்லது அதற்கும் குறைவான தொகைதான். ஆனால் இந்த 100 இன்ச் தோல், பல்வேறு நிலைகளில் இருக்கும் தரகர்களைத் தாண்டிச் செல்லும்போது அதன்மீது ரூபாய் 50,000 முதல் ரூபாய் 1,00,000 வரை ‘கட்டப்படுகிறது.’ இவை ‘புராடக்ட்’ ஆக மாறிய பின், தீக்காயத் தழும்புகளை பிளாஸ்டிக் சர்ஜரி செய்வது முதல், உதடு, மார்பகம், அந்தரங்க உறுப்புகள் எனப் பலவற்றின் அழகு சீரமைப்புக்கும் பயன்படுத்தப்படுவதாகச் சொல்லப்படுகிறது. தோலின் நிறம், அந்தத் தோலின் வயது ஆகியவற்றைப் பொறுத்து சந்தை மதிப்பு மாறுபடும்’’ என்றார் சோமா.

சென்னையைச் சேர்ந்த பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் சசிகுமார் முத்துவிடம் பேசினேன். `` இதை ‘ஸ்கின் கிராஃப்ட் (Skin Graft)’ சிகிச்சைகள் என்று சொல்வார்கள். தீக்காயங்கள், சரும நோய், படுக்கைப் புண், சருமப் புற்றுநோய் அறுவை சிகிச்சை ஆகிய சூழ்நிலைகளில், சம்பந்தப்பட்டவரின் முதுகு, பின்புறம், தொடை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தோல் எடுக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட சருமப் பகுதியில் பொருத்தப்பட்டு சீராக்கப்படும். சிகிச்சை எடுப்பது குழந்தையாக இருந்தால், அவர் பெற்றோரிடமிருந்து தோல் தானமாகப் பெறப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். ஒருவேளை அதிகளவிலான சருமப் பரப்பு பாதிக்கப்பட்டிருந்தால், சிகிச்சைக்குத் தேவைப்படும் தோல் `ஸ்கின் பேங்க்’கிலிருந்து பெற்றுப் பயன்படுத்தப்படும். அந்த பேங்குகளில் இருக்கும் தோல் என்பது, இறந்தவர்களிடமிருந்து அவர்கள் உறவினர்களின் அனுமதியுடன் பெறப்பட்டுப் பதப்படுத்தப்பட்ட தோலாக இருக்கும். அதை மைனஸ் 4 டிகிரிக்குக் கீழ், ‘க்ரையோனிக்’ எனப்படும் முறைப்படி பதப்படுத்தி வைத்து, தேவை உள்ளவர்களுக்கு எடுத்துப் பயன்படுத்துவார்கள். இந்தத் தோல் என்பது ஓர் உறைபோலதானே அன்றி, நிரந்தரமானது இல்லை.

மேலே சொன்ன மருத்துவ நடைமுறைகள் எல்லாம் சட்டரீதியானவை. சிகிச்சை என்பதைத் தாண்டி, நீங்கள் குறிப்பிடும் அழகு சீரமைப்பு விஷயங்களுக்குத் தோல் பயன்படுத்தப்படுவது சட்டத்துக்குப் புறம்பானது என்பதுடன், அதற்கான சாத்தியங்களும் குறைவு. உதாரணமாக, மார்பகத்தைப் பெரிதாக்கும் சிகிச்சைகளுக்கு, மெலிதான தன்மைகொண்ட தோலின் அளவு போதாது. இந்திய மருத்துவத்துறையைப் பொறுத்தவரை சட்டத்துக்குட்பட்டு இது போன்றதொரு விஷயம் நடக்கவில்லை. ஒருவேளை சட்டத்துக்குப் புறம்பாக அப்படி நடந்தால், அது மிகவும் மோசமானது’’ என்கிறார் சசிகுமார் முத்து.

காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சைகளுக்காக லட்சக்கணக்கில் செலவுசெய்யப் பலர் தயாராக இருக்க, நேபாளத்தின் ஏழைப் பெண்களும், இந்தியாவைச் சேர்ந்த பாலியல் தொழிலாளர்களும் சுரண்டப்படுகிறார்கள் என்றால், இது குறித்த சட்டரீதியான புகார்கள் எழுப்பப்படாதது ஏன் என்று சோமா பாசுவிடம் கேள்வி எழுப்பினோம். ‘`ஒரு பாலியல் தொழிலாளி, தொடர்ந்து தன்னைப் பயன்படுத்திவந்த வாடிக்கையாளரிடமிருந்து தப்பி ஓட முயற்சி செய்தார். அதனால் அவர் கொன்று வீசப்பட்டார். ‘வாடிக்கையாளர் ஒருவரால் என் மகன் நாக்கில் சூடுவைக்கப்பட்டது’ என்றார் மற்றொரு பாலியல் தொழிலாளி. இந்த அடிமைச் சூழ்நிலையில் அவர்களால் எப்படிப் புகார் தர முடியும்? நான்கூட இந்தக் கள ஆய்வை ஆபத்துகளுக்கு நடுவில்தான் செய்துமுடித்தேன். என் உறவினர் ஒருவருக்குத் தோல் தேவைப்படுகிறது என்று சொல்லி, அந்த இருட்டு உலகத்துக்குச் சென்றேன்’’ என்று சொல்லும் சோமா பாசு, கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் தன் சொந்தச் செலவில் இதுபற்றி ஆராய்ந்துள்ளார்.

அரசின் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் மட்டுமே இந்த பாதகச்செயலுக்கு முடிவுகட்டும். அதை உடனே செய்யவேண்டும். இல்லையென்றால் இது இந்தியா முழுவதும் பரவும் அபாயம் இருக்கிறது!

உயர்ந்துவரும் அழகு சிகிச்சை!

இந்தியாவில் காஸ்மெட்டிக் சர்ஜரி செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை 2005 முதல் 2007-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் 34 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. ‘ஸ்கின் கிராஃப்ட்’டைப் பொறுத்தவரை, தோலிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, அந்த அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ‘அல்லோடெர்ம்’ என்ற மருந்தின் வியாபாரம் 2002க்குப் பிறகு 70% அதிகரித்திருக்கிறது.