ஜெகதீஸ்வரனை, ‘ஐ (eye) ஜெகதீஸ்வரன்’ என்றுதான் கொங்கு வட்டாரத்தில் அழைக்கிறார்கள். 67 வயதாகிறது. அடுத்த சில மணி நேரத்தில் மண்ணோடு மக்கியோ, நெருப்போடு கருகியோ போகவிருந்த 6,500 கருவிழிகளை தானமாகப் பெற்று, பார்வையற்றவர்களுக்கு வெளிச்சம் தந்திருக்கிறார்.

கோவை, சிங்காநல்லூரைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன், டர்னராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இப்போது ஒரு பார்சல் சர்வீஸில் முகவராக இருக்கிறார். மரணம் நிகழ்ந்த வீடுகளை நாடிச்சென்று கண்தானம் பெறுவது ஒரு பகுதி நேர வேலையாகவே மாறிவிட்டது அவருக்கு. முப்பது வருடங்களுக்கு முன்னர் வாசித்த ஒரு பத்திரிகைச் செய்தி அவரை இந்தச் சேவையின் பக்கம் திருப்பிவிட்டிருக்கிறது.

``பத்திரிகைல கண்தானம் பற்றிப் படிச்ச செய்தி என்னை ரொம்பவும் பாதிச்சது. கண் தானம் கிடைக்காமப் போராடும் மனுஷங்களை நினைச்சுப் பாத்தப்போ ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு. நண்பர்கள், என் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள்னு எல்லோர்கிட்டயும் கண்தானம் குறித்துப் பேச ஆரம்பிச்சேன். நாலு வருஷத்துல 40 ஆயிரம் பேர் `கண்தானம் தர்றேன்’னு பதிவுசெஞ்சாங்க. ஆனா, பதிவுசெஞ்ச யாரும் தானம் தரத் தயாரா இல்லை. ‘இறந்துட்டாங்க’னு கேள்விப்பட்டுப் போனா, திட்டி அனுப்புவாங்க. அந்த நாலு வருஷத்துல ஒரு விழிகூட தானமாகக் கிடைக்கலை. நான், அலையுறதையும் திட்டு வாங்குறதையும் பார்த்துட்டு, எங்க பாட்டி, ‘நான் செத்ததுக்குப் பிறகு என் கண்ணை எடுத்துக்க சாமி’னு சொன்னுச்சு. அதே மாதிரி, அது இறந்தப்போ மாமாக்கள் சம்மதத்தோட பாட்டியோட விழிகளை தானமாகக் கொடுத்தேன். அதுதான் எனக்குக் கிடைச்ச முதல் தானம்.

அதுக்கப்புறம், இறப்பு எங்கே நடந்தாலும் முதல் ஆளா அங்கே போயிருவேன். அந்த வீட்டுல முக்கியமான ஆள் யாருனு பார்ப்பேன். பொதுவா, பொண்ணு கட்டின மருமகன், தாய்மாமன் சொன்னா எல்லோரும் கேப்பாங்க. அப்படியே இல்லைனா ஊர்த் தலைவர்... அவங்களைத் தனியா அழைச்சுக்கிட்டுப் போய் அஞ்சு நிமிஷம் பேசி மனசைக் கரைச்சுடுவேன். ஒத்துக்கிட்டா, கண் இமை மேல ஈரப்பஞ்சுவெச்சு மூடிட்டு டாக்டர் குழுவுக்குப் போன் பண்ணிடுவேன். அவங்க வந்து கருவிழிகளை எடுத்துக்கிட்டு டம்மி கண்களைப் பொருத்துவாங்க.

கண்தானம் கொடுத்ததுக்கான சான்றிதழை மருத்துவமனையில இருந்து வாங்கி, அதுல போட்டோ ஒட்டி கோல்டு ஃபிரேம் போட்டுக்குவேன். எட்டாம் நாள் காரியம் நடக்கிறப்போ, ஒரு சந்தன மாலை வாங்கிக்கிட்டு அவங்க வீட்டுக்குப் போவேன். சடங்குகள் முடிஞ்சு சாப்பிட உட்காரும்போது, எல்லோரோட கவனத்தையும் திருப்பி, கண்தானத்தோட சிறப்பு பத்திப் பேசுவேன். ‘இவங்களால ரெண்டு பேருக்குப் பார்வை கிடைச்சிருக்கு... இறந்த பிறகும் ரெண்டு பேருக்கு வாழ்க்கை கொடுத்திருக்காங்க’னு பெருமையாப் பேசி, இறந்தவர் படத்துக்கு மாலையைப் போட்டு, குடும்பத்துல முக்கியமானவங்களைக் கூப்பிட்டு, கையில சான்றிதழைக் கொடுத்துட்டுத் திரும்பிடுவேன். இப்போ, பல குடும்பங்கள்ல, சொந்தக்காரங்களுக்குச் சொல்ற மாதிரி எனக்கும் இறப்புச் செய்தி சொல்லி அனுப்பிடுறாங்க. ஒரே குடும்பத்துல இதுவரைக்கும் 14 ஜோடிக் கண்கள் தானமாகக் கிடைச்சிருக்கு. இறப்பு வீட்டுக்குப் போறதும், கண்தானம் எடுக்கிறதும் இப்போ பகுதிநேர வேலை மாதிரி ஆகிப்போச்சு” என்கிறார் ஜெகதீஸ்வரன்.

“கண்தானம்னா அப்படியே கண்ணைத் தோண்டிக்கிட்டுப் போயிடுவாங்கனு நினைக்கிறாங்க. கண்ல இருக்கிற கருவிழியை மட்டும்தான் எடுப்பாங்க. அதுக்குப் பதில் மாற்றுக் கருவிழி பொருத்திடுவாங்க. இறந்தவங்க முகத்துல எந்த மாற்றமும் இருக்காது. காமாலை, ஹெச்.ஐ.வி, ரத்தப் புற்றுநோய் இருந்து இறந்தவங்க கண்களை மட்டும் பயன்படுத்த முடியாது. அதே மாதிரி தூக்குப்போட்டு, விஷம் குடிச்சு இறந்தவங்களோட கண்களும் பயன்படாது. மற்றபடி சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் இருக்கிறவங்கெல்லாம் கண்தானம் செய்யலாம். 100 வயது முதியவரோட கண்ணை மூணு வயசுக் குழந்தைகளுக்குப் பொருத்தலாம். அந்த அளவுக்குக் கண் வித்தியாசமான, உயிர்ப்பான உறுப்பு” என்கிறார் ஜெகதீஸ்வரன்.

உலக மக்கள்தொகையில் 20 சதவிகிதம் பேர் பார்வைக்குறைபாட்டால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். இதில் 90 சதவிகிதம் பேரின் பார்வையை மீட்டுவிட முடியும். ஒரே வழி, கண்தானம். ஆனால், தேவையில் 1 சதவிகிதம் அளவுக்குக்கூட கண்கள் தானமாகக் கிடைப்பதில்லை. இந்தச் சூழலில் கண்தானம் பெறுவதையே தன் பணியாகக் கருதி அலைந்துதிரியும் ஜெகதீஸ்வரனின் பணி, நிச்சயம் தெய்விகப்பணி!