வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (04/10/2018)

கடைசி தொடர்பு:18:04 (04/10/2018)

``மாதவன், ரவிகுமார் சார், சதீஸ் எல்லாம் என் கஸ்டமர்ஸ்’’ - பேக்கிங்கில் அசத்தும் நகுல் மனைவி

என்னுடைய பிசினஸுக்கு நகுல்தான் முதுகெலும்பு. அவருக்கு பெட்ஸ் வளர்க்கறது ரொம்பப் பிடிக்கும்.

``மாதவன், ரவிகுமார் சார், சதீஸ் எல்லாம் என் கஸ்டமர்ஸ்’’ - பேக்கிங்கில் அசத்தும் நகுல் மனைவி

டிகர் நகுலின் மனைவி, ஒரு கேக் பேக்கர். தனது சமூக வலைதளங்களில் மனைவி செய்த விதவிதமான கேக்குகளை அப்லோடு செய்து லைக்ஸ் அள்ளிவருகிறார் நகுல். இதுகுறித்து, நகுலின் மனைவி ஸ்ருதியிடம் பேசினேன்.

நகுல்

``என்னுடைய பிசினஸுக்கு நகுல்தான் முதுகெலும்பு. அவருக்கு பெட்ஸ் வளர்க்கறது ரொம்பப் பிடிக்கும். எனக்கு கேக் பண்றதுதான் உலகம். கே.எஸ்.ரவிகுமார் சார், மாதவன், சதீஸ் என செலிபிரெட்டிகளுக்கும் கேக் ஆர்டர் எடுத்து செய்துகொடுக்கிறேன். ஆர்டர்கள் அடுத்தடுத்து வரும்போது, சரியான நேரத்தில் முடிச்சுக்குக் கொடுக்க நகுல் சப்போர்ட் பண்ணுவார். எங்களுக்குக் கல்யாணமான பிறகு, கேக் செய்யறதை என்கிட்ட கேட்டு ரொம்ப ஆர்வத்துடன் கத்துக்கிட்டார் நகுல். கேக் டிசைன் செய்றது, கலர் செலக்ட் பண்றது, ஈவென்ட்டுக்கு தகுந்த மாதிரி கேக்கை வடிவமைக்கிறது எல்லாத்திலும் எக்ஸ்பர்ட் ஆகிட்டார். சினிமா  வாய்ப்புகள் தொடர்ந்து வந்துட்டிருந்தாலும், சரியான ஸ்க்ரிப்ட்டா பார்த்தே செலக்ட் செய்வார். எது செய்தாலும் பெஸ்டா செய்யணும்ங்கறது அவர் பாலிசி. அதனால்தான் ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் நிறைய பிரேக் எடுத்துகறார். சினிமாவில்தான் இந்த பிரேக். ஹோம்மேஜ் கிட்ஸ்களுக்கு உதவறது, பெட்ஸ் நெட் வொர்க் என மற்ற விஷயங்களில் சார் எப்பவும் பிஸிதான்'' எனப் புன்னகைக்கிறார் ஸ்ருதி.