`டைட்டானிக்’ கேட் வின்ஸ்லெட் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி. 80களில் போதை நிழல் உலகத்தைத் தன் பிடியில் வைத்திருந்த பெண்மணி க்ரிசெல்டா பிளாங்கோ. இருபதாண்டுச் சிறைத்தண்டனை முடித்து கொலம்பியா திரும்பியவரை அவரது பாணியிலேயே 2012-ல் தலைசிதறச் சுட்டுக் கொன்றனர் பழைய எதிரிகள். காட்ஃபாதர் படம் பார்த்து, தன்னை போதை மற்றும் ஆயுதக்கடத்தல் தலைவியாக வளர்த்துக்கொண்ட இந்த அம்மணியின் கதை இப்போது ஹாலிவுட் ஆக்ஷனுக்குத் தயாராகிறது. கேட் வின்ஸ்லெட் தான் க்ரிசெல்டா பாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். காட்மதர் ரெடி!

ஹர்திக் பாண்ட்யாவுக்கும் இந்தி நடிகை எல்லி எவ்ராமுக்கும் காதல் என்று மும்பை மீடியாக்கள் எல்லாம் கதறுகின்றன. ஆனால், இருவரும் அதை மறுத்துவந்தனர். இந்த நிலையில் பாண்ட்யாவின் சகோதரர் க்ருனால் பாண்ட்யாவின் திருமணத்தில் எல்லியும் கலந்துகொண்டு குடும்பத்தில் ஒருவராக பிஸியாக இருந்தார். இப்போது மீண்டும் இரண்டுபேருக்கும் நிச்சயமாகக் காதல்தான் எனப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள் மும்பைவாலாக்கள்! மாட்னார்யா!

இந்த ஆண்டு அதர்வாவின் ஐந்து படங்கள் வெளிவரவிருக்கின்றன. ‘இமைக்கா நொடிகள்’ ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது. அடுத்து பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் பர்னேஷ் இயக்கத்தில் ‘ஒத்தைக்கு ஒத்தை’, ஷாம் ஆண்டன் இயக்கத்தில் ஹன்சிகாவுடன் நடிக்கும் ‘100’, ஆர். கண்ணன் இயக்கத்தில் மேகா ஆகாஷுடன் ‘பூமராங்’ என வரிசையாகப் படங்கள் வெளியீட்டுக்குக் காத்திருக்கின்றன. இதுபோக அதர்வா நடித்துத் தயாரித்துள்ள ‘செம போத ஆகாதே’ அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. ராக்கெட் ஸ்டார்!

‘அப்பா மிலிட்டரியில் இருந்து ஓய்வுபெற்றவர். அதனால், சிறுவயது தொடங்கி நிலையாக ஓரிடத்தில் இருந்தது கிடையாது. பல மாநிலங்கள் பயணம். அதனால் மொழிப்பற்று, இடத்தின் மீதான பிடிப்பு... என எதுவும் எனக்குக் கிடையாது. செயலில் மட்டுமே கவனமாக இருப்பேன்.’ ஸ்ரத்தா ஸ்ரீநாத் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் இவை. அப்படித்தான் தேடித்தேடி படங்களில் கமிட்டாகிறார். ‘சார்லி’யின் தமிழ் ரீமேக், ஓர் இந்திப் படம், ‘நானும் ரௌடிதான்’ கன்னட ரீமேக் என்று சவாலான, நடிக்க வாய்ப்புள்ள கதைகளைத் தேடி ஸ்டேட் ஸ்டேட்டாக ஓடிக்கொண்டிருக்கிறார் ஸ்ரத்தா. யாஞ்சி ராக்ஸ்

அமிதாப் பச்சன், ரிஷி கபூர் இருவரும் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடிக்கும் படம், ‘102 நாட் அவுட்.’ இதில், ‘உலகின் அதிக வயதில் வாழும் மனிதன்’ என்ற சாதனையைச் செய்ய முயலும் 102 வயது தந்தை வேடத்தில் அமிதாப்பும் அவருக்கு உதவிசெய்யும் 75 வயது மகன் வேடத்தில் ரிஷி கபூரும் நடித்துள்ளனர். கபி... கபி...

சிவகார்த்திகேயனின் புதிய ஹீரோயின், ரகுல் ப்ரீத் சிங்! சிவகார்த்தி தற்போது பொன்ராம் இயக்கத்தில் ‘சீமராஜா’ படத்தில் நடித்துவருகிறார். இது சிங்கம்புனரி ஜமீன் பற்றிய கதை. இந்தப் படத்தைத் தொடர்ந்து முற்றிலும் வேறு களம், வேறு கலர் என ‘இன்று நேற்று நாளை’ இயக்குநர் ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இது ஏலியன்கள் பற்றிய சை-பை படமாக இருக்குமாம்! இதில்தான் ரகுல் சிவாவோடு நடிக்கவிருக்கிறார். ரகுல் அதிகாரம் இரண்டு

சர்வதேச அளவில் இந்தியாவில் தற்கொலைகள் அதிகரித்துக்கொண்டே இருப்பதை உறுதிப் படுத்தியிருக்கிறது மருத்துவ ஆராய்ச்சி இதழான ‘லான்செட்’. அது குறிப்பிட்டிருக்கும் இன்னொரு அதிர்ச்சியான விஷயம், இந்தியாவில் நடக்கும் தற்கொலைகளில் 60 சதவிகிதத்தினர் 15 வயது முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் என்பது. கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார வசதிகளில் முன்னேறியிருக்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தற்கொலைகள் அதிகம் நடப்பதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. கேர்ஃபுல் மக்கா!

இந்தியாவுக்கு சன்னிலியோன் எப்படியோ அப்படித்தான் பாகிஸ்தானுக்கு டெமீனா அஃப்சல். பாகிஸ்தான் வம்சாவளி அமெரிக்கரான டெமீனா அஃப்சல், பல மியூசிக் வீடியோக்களில் நடித்துப் பிரபலமாகி வருகிறார். இணையதளம் எங்கும் ‘மிஸ் மீனா’ என்று செல்லமாக அழைக்கப்படும் இவருக்கு இன்ஸ்டாகிராமில் ரசிகர்மன்றங்களெல்லாம் வைத்திருக்கிறார்கள்! மீனம்மா மீனம்மா...

பாலிவுட்டுக்குச் செல்கிறார்கள் துல்கர் சல்மானும், நிவின்பாலியும். ‘கர்வான்’ படத்தில் இர்ஃபான்கானுடன் இணைந்து நடித்துக்கொண்டிருக்கிறார் துல்கர் சல்மான், அடுத்து சோலோ ஹீரோவாக சோனம் கபூருடன் இணையவிருக்கிறார். ‘மூத்தோன்’ என்ற இந்திப் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் நிவின்பாலி. அடுத்து ஃபகத் ஃபாஸிலும் பாலிவுட் போவார் என்கிறது மலையாள வட்டாரம். பாக்யமுண்டாகட்டே!