“`வேணாம், வேணாம்’னு சொன்னேம்ப்பா... பிரவீன் அண்ணாவும் லோகேஷ் சித்தாவும் ஐஸ்க்ரீம் வாங்கிக் குடுத்துட்டாங்க... இப்போ தொண்டை வலிக்குது...” - தனக்கு என்ன நேர்ந்திருக்கிறது என்றே தெரியாமல், முகத்தைச் சுருக்கிக்கொண்டு தன்யஸ்ரீ பேசும் அந்த மழலைத் தமிழ் நம் இதயத்தை உலுக்குகிறது. தலையில் அரைவட்ட வடிவத்தில் அறுவைசிகிச்சை முடிந்திருக்கிறது. நிலா போன்ற வட்ட முகம் அவளுக்கு. காயத்தின் வீரியம் முகத்தில் தெரிகிறது. காலில் ஒரு சிறு முறிவு. ஒருவாரப் போராட்டம்... ஸ்ரீதரும் யமுனா தேவியும் வாழ்வில் இதுவரை எதிர்கொண்டிராத பெருந்துயரம். நேரிலும், சமூக ஊடகங்கள் மூலமாகவும் பல நூறு பேர் செய்த உதவியும், பிரார்த்தனையும் தன்யஸ்ரீக்கு மறுபிறப்பு அளித்திருக்கின்றன.

தன்யஸ்ரீக்கு நிகழ்ந்தது யாரும் எதிர்பார்க்கவியலாத துயர நிகழ்வு. ஒரு ஞாயிறு. குழந்தைகளோடு விளையாடிக் களித்த மகிழ்ச்சியில் தாத்தாவோடு பிரெட்-ஜாம் வாங்க சூப்பர் மார்க்கெட்டுக்குப் போனாள் தன்யா. சூப்பர் மார்க்கெட்டின் நான்காவது மாடியில் நின்றபடி போன் பேசிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர், தடுமாறி, கீழே சரியாக தன்யாவின் மீது விழுந்துவிட்டார். நான்காவது மாடியிலிருந்து விழுந்த அந்த இளைஞனுக்குக் காலில் எலும்பு முறிவுதான். ஆனால், விபத்தின் முழுத் தாக்கத்தையும் சுமந்துகொண்டிருக்கிறார் நான்கு வயதுச் சிறுமி தன்யஸ்ரீ. உடலெங்கும் பலத்த அடி... குறிப்பாகத் தலையில்!

பழைய வண்ணாரப்பேட்டை, தணிகாசலம் சந்தில், ஒரு சின்னஞ்சிறு வீட்டில் வசிக்கிறார் ஸ்ரீதர். எளிய குடும்பம். வாட்டர் கேன் போடும் வேலை. தன்யஸ்ரீக்கு மூத்தவள் பெயர் யாஷிகா. ஒன்றாம் வகுப்பு படிக்கிறாள்.

நடந்ததைப் பற்றிப் பேசினாலே ஸ்ரீதருக்கு உடல் நடுங்குகிறது. ``நரகம் பத்திக் கொஞ்சம் படிச்சிருக்கேன் சார். `மரணத்துக்குப் பிறகுதான் நரகம்னா என்னன்னு தெரியும்’னு சொல்வாங்க. ஆனா, நான் வாழும்போதே அந்த வலியை அனுபவிச்சிட்டேன். தானும்மா குருவிக்குஞ்சு மாதிரி... அவளுக்குப் பட்டுப் பாவாடை சட்டை போட்டுவிட்டு, நானும் என் மனைவியும் அவ நடக்குற அழகைப் பார்த்து ரசிப்போம். அவளை, முகமெல்லாம் ரத்தம் ஒழுக, அடுத்து என்ன நடக்குமோனு நெஞ்சு பதற, பக்கத்துல உட்கார்ந்து பாத்துக்கிட்டிருந்த நாள்கள் இருக்குல்ல... அதை நினைச்சாலே இதயம் நடுங்குது...” - ஸ்ரீதர் கண்கலங்குகிறார்.

“துறுதுறுனு இருப்பா... யாரா இருந்தாலும் அஞ்சு நிமிஷத்துல ஒட்டிக்குவா. பக்கத்துல இருக்குற ஸ்கூல்ல எல்கேஜி படிக்கிறா. லீவ் விட்டா, நரசய்யா தெருவுல இருக்கிற அவங்க அத்தை வீட்டுக்குப் போயிடுவா. அங்கே அவளுக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ் உண்டு. ராத்திரி 9 மணிக்கு மேலதான் வீட்டுக்கு வருவா.

அன்னிக்கு ஞாயித்துக்கிழமை. அரக்கோணத்துல இருந்து தாத்தா வந்திருந்தார். அவளுக்குத் தாத்தானா உசுரு. அவர்கூட ஒட்டிக்கிட்டே திரிவா. அன்னிக்கு போலியோ சொட்டு மருந்து போட்டாங்க. காலையில எழுந்து சொட்டு மருந்து போட்டுக்கிட்டு, அத்தை வீட்டுக்குப் போயிட்டா. ராத்திரி வரைக்கும் ஃப்ரெண்ட்ஸ்கூட விளையாடினா. ராத்திரி பால்சோறு ஊட்டிவிட்டேன். ‘வேணாம், பிரெட், ஜாம்தான் வேணும்’னா. `சரி வா, வாங்கிட்டு வருவோம்’னு தாத்தா கூட்டிக்கிட்டுப் போனார். அடுத்த அரை மணி நேரத்துல போன் வருது...’’ தன்யஸ்ரீயின் அத்தை சாந்தியால் அதற்கு மேல் பேச முடியவில்லை.

தன்யஸ்ரீயின் மேல் விழுந்தது, அதே பகுதியைச் சேர்ந்த சிவா என்ற இளைஞர். குடிபோதையில் விழுந்தார் என்றும், தற்கொலை முயற்சி என்றும் பலவாறு பேசிக்கொள்கிறார்கள். ஆனால், காவல்துறை, `மொபைலில் பேசியபடி தடுமாறி விழுந்துவிட்டார்’ என்று வழக்கு பதிந்திருக்கிறது.

அருகில் இருந்த மருத்துவமனைகள் கைவிரித்துவிட, நம்பிக்கை குலையாமல் குழந்தையைத் தூக்கிக்கொண்டு வேறு சில மருத்துவமனைகளில் ஏறியிறங்கி யிருக்கிறார்கள் ஸ்ரீதரும் அவரின் நண்பர்களும். இறுதியில் கிரீம்ஸ் ரோட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்திருக் கிறார்கள். குழந்தை என்பதால் என்ன பாதிப்பு என்பதைக் கண்டறிவதே சிரமமாக இருந்திருக்கிறது. இருந்தாலும், மருத்துவர்கள் நம்பிக்கை யளித்திருக்கிறார்கள். ஐந்து நாள்கள் எவ்வித உறுதியும் இல்லாமல் கழிந்தன. தன்யஸ்ரீ கண்விழிக்கவில்லை. தலையில் ஒரு பெரிய அறுவைசிகிச்சை செய்யப்பட்ட பிறகு, முன்னேற்றம் தெரிந்தது.

``ஆபரேஷன் முடிஞ்ச பிறகும் டாக்டர்கள் எந்த உறுதியும் கொடுக்கலை. குழந்தையைப் பார்க்கவே கஷ்டமா இருந்துச்சு. எந்த வலிக்கும் பழகாதவ. ஊசி போடக்கூட ஒத்துக்க மாட்டா. உடம்பு சரியில்லைன்னாக்கூட `மாத்திரையாக் கொடுங்க, ஊசி வேணாம்’னு சொல்லிடுவோம். பூப்போலவெச்சிருந்தோம். இப்படி முகமெல்லாம் கட்டோடப் பார்க்க மனசு பொறுக்கலை.

`குழந்தைக்கு நினைவு தப்ப வாய்ப்பிருக்கு. பக்கத்துல நின்னு அவ பேரைச் சொல்லி கூப்பிடுங்க... நல்லா பிரார்த்தனை பண்ணிக்குங்க’னு டாக்டர்கள் சொன்னாங்க. பக்கத்துல நின்னு ‘தானும்மா’-ன்னு கூப்பிட்டேன். ஒரே குரல்ல இமையை அசைச்சு விழிக்க முயற்சி செஞ்சா... வெளியே வரலாம்னு திரும்பினேன். `போகாத... முடியாது... முடியாது...’னு பேச ஆரம்பிச்சுட்டா... நர்ஸ்ல இருந்து டாக்டர் வரைக்கும் எல்லோருமே கண்கலங்கிட்டாங்க. அத்தனை பேரோட பிரார்த்தனைதான் இவளுக்குப் புதுப்பிறப்பைக் கொடுத்திருக்கு... உயிர் உள்ளவரைக்கும் யாரையும் மறக்க மாட்டேன்...” நெகிழ்ந்துபோய்ச் சொல்கிறார் ஸ்ரீதர்.

தன்யஸ்ரீ பற்றிய செய்திகள் சமூக ஊடகங்களில் பரவத்தொடங்கியதும், முகமறியாத மனிதர்கள்கூட வங்கிக்கணக்கு எண்ணை வாங்கி, தங்களால் இயன்ற தொகையைப் போடத் தொடங்கினார்கள். அருகிலுள்ள இளைஞர்கள் நிதி திரட்ட, அதிலும் பெரும் தொகை சேர்ந்தது... பலர், தங்கள் தொலைபேசி எண்ணைக் கொடுத்து, `மருத்துவச்செலவுக்கும், தன்யாவின் கல்விச்செலவுக்கும் எவ்வளவு பணம் தேவையென்றாலும் தொடர்புகொள்ளுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்கள். தன்யாவின் விஷயத்தில் மனிதம் உயிர்த்திருக்கிறது.

இப்போது தெளிவாகிவிட்டாள் தன்யஸ்ரீ. அவளுக்கு பிங்க் நிறம் பிடிக்கும் என்பதைத் தெரிந்துகொண்டு, மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள், பிங்க் டிரெஸ், பிங்க் நெயில்பாலிஷ், பிங்க் லிப்ஸ்டிக் என வாங்கிக் குவித்துவிட்டார்கள். உதட்டில் பிங்க் நிற லிப்ஸ்டிக்கைப் பூசிக்கொண்டு அப்பாவோடு சண்டை போடுகிறாள். அக்காவோடு பேசிச் சிரிக்கிறாள். அம்மா ஊட்ட, சேட்டைகள் செய்துகொண்டே சாப்பிடுகிறாள்.

இன்னும் இரண்டு மாதத்தில் அவளுக்கு இன்னொரு அறுவைசிகிச்சை செய்ய வேண்டியிருக்கிறது. `காலில் ஏற்பட்டிருக்கும் முறிவு, வளர வளரச் சரியாகிவிடும்’ என்கிறார்கள் மருத்துவர்கள். ஆயினும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தன்யஸ்ரீயை கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

புதிதாகப் பிறந்து வரும் தன்யஸ்ரீக்காகப் புதுவீடு பார்த்துக் குடிபோகத் தயாராகிவிட்டது ஸ்ரீதர் குடும்பம்!

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு 35 லட்சம் ரூபாய் நிதியுதவி

அகில இந்திய அளவில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழக அரசு ஹாட்ரிக் சாதனை படைத்திருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக அதிக உறுப்பு மாற்று சிகிச்சை நடந்தது தமிழகத்தில்தான். இதற்கென, சுகாதாரத் துறையின் கீழ் தனி ஆணையம் தொடங்கியதோடு, இணையதளம் ஒன்றையும் நடத்திவருகிறது. அதுதவிர, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு நிதியுதவித் திட்டம் ஒன்றும் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் கல்லீரல், சிறுநீரகம், எலும்பு மஜ்ஜை உள்ளிட்ட சில குறிப்பிட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு அதிகபட்சமாக 35 லட்ச ரூபாய் வரை நிதியுதவி அளிக்கப்படுகிறது. அரசு மருத்துவமனை மட்டுமன்றி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டாலும் இந்த நிதியுதவியைப் பெறமுடியும். அறுவை சிகிச்சை முடிந்தபிறகு, தேவைப்படும் மருந்துகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன. இது குறித்த கூடுதல் விவரங்களை www.tnos.org என்கிற இணையதளத்தில் பார்க்கலாம்.