காவிரி நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பு வந்து பத்து ஆண்டுகள் ஆனபிறகும்கூட, நீரும் கிடைக்காமல், நீதியும் கிடைக்காமல் காய்ந்து கருகும் வயல்களோடும், உழன்று உருகும் உள்ளங்களோடும் தமிழக விவசாயிகள் பட்டுக்கொண்டிருக்கும் வேதனைகளை, காலம் என்ற அளவுகோலால் மட்டுமே அளந்துவிட முடியாது. இந்த வேதனைகளின் அடர்த்தியை மேலும் கூட்டியிருக்கிறது, காவிரிப் பிரச்னை தொடர்பாக தற்போது உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு.

1991ல் காவிரி நடுவர்மன்ற இடைக்காலத்தீர்ப்பில் தமிழகத்துக்கு 205 டி..எம்.சி தண்ணீரை கர்நாடகா வழங்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. 2007-ல் வெளியான இறுதித்தீர்ப்பில், 192 டி.எம்.சி என்று குறைத்தார்கள். ‘இந்த நீர் போதுமானதல்ல’ என்று நாம் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், உச்ச நீதிமன்றமோ மேலும் 14.75 டி.எம்.சி-யைக் குறைத்து, 177.25 டி.எம்.சி தண்ணீர் கொடுத்தால் போதும் என்று இப்போது தீர்ப்பளித்திருக்கிறது. இதனால், காவிரியை முழுமையாக நம்பியிருக்கும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காவிரி பாய்ந்தோடும் பகுதியில் இருக்கும் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் விவசாயத்தின் நிலை மேலும் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஏக்கருக்கும் மேலான விவசாயப் பரப்பு, தரிசு நிலப்பட்டியலில் புதிதாக இணையும் சூழல் உருவாகியிருக்கிறது என்பது நிதர்சனம்.

சர்வதேச நகரமாக வளர்ந்துவரும் பெங்களூரு நகரின் நீர்த் தேவையையும், தமிழகத்தில் காவிரிப்படுகையில் இருக்கும் நிலத்தடி நீரையும் கருத்தில்கொண்டு, தமிழகத்துக்கான தண்ணீரின் அளவைக் குறைத்திருப்பதாக உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் வியாக்கியானம்... அதிர்ச்சியின் உச்சம்.

முதலில், நிலத்தடி நீர் என்பதே, மறைந்துகிடக்கும் நீர்; மரம், செடி, கொடிகளுக்கான நீர் மட்டுமே. அதையும் கணக்கில் கொள்வதென்பது... வஞ்சத்தின் உச்சம். இது ஒருபுறமிருக்க, காவிரி டெல்டாவைப் பொறுத்தவரை, அது மறைந்துவிட்ட நீராகிப் பல ஆண்டுகள் ஆகின்றன. மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் என்று வெவ்வேறு பெயர்களோடு காவிரி டெல்டா பகுதிகளில் செயல்படுத்தப்படும் பல திட்டப்பணிகளுக்காக ராட்சத மோட்டார்கள் மூலமாக காவிரிநீர் உறிஞ்சப்படுவது; தொடர்ந்து காவிரியில் போதுமான நீர்வரத்து இல்லாததால், மோட்டார் மூலமாக உறிஞ்சப்பட்டே பல ஆண்டுகளாக பெரும்பாலும் விவசாயம் நடத்தப்படுவது போன்ற காரணங்களால், டெல்டா பகுதியில் உப்புநீர் ஊடுருவிப் பல ஆண்டுகள் ஆகின்றன. எஞ்சியிருக்கும் நிலத்தடி நீரும் 500 அடி, 1000 அடி என்று பாதாளத்துக்குப் போய்விட்டது.

இதேநிலை நீடித்தால், டெல்டாவே முற்றாக வறண்டுவிடும் என்பதோடு, கற்பனை செய்ய இயலாத அளவுக்கு சுற்றுச்சூழலும் நாசமடைந்துவிடும் என்பதே களநிலவரம். இவற்றையெல்லாம் கணக்கில் கொள்ளாமல், பல ஆண்டுகளுக்கு முன்பாக எடுக்கப்பட்ட ‘10 டி.எம்.சி நிலத்தடி நீர்’ என்கிற சொத்தைக்கணக்கைச் சொல்லி, ‘நிலத்தடி நீரை அவ்வப்போது உறிஞ்சி எடுக்காவிட்டால் அது வீணாகிவிடும்‘ என்று உலகமகா பித்தலாட்ட வாதத்தைக் கர்நாடகா முன்வைக்க, அதையும் தன் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் மேற்கோள்காட்டியிருப்பது, வேதனையின் உச்சம்.

‘காவிரி எங்களுடையதுதான் என்று எந்த ஒரு மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது. அது தேசத்தின் பொதுச்சொத்து’ என்று உச்ச நீதிமன்றம் சொல்லியிருப்பதன் மூலமாக, ‘தமிழகம் உள்ளிட்ட காவிரிப் பாசன மாநிலங்களின் அனுமதியின்றி, புதிதாக எந்த அணையையும் கர்நாடகா கட்டமுடியாது’ என்பது ஆறுதல் அளிக்கும் விஷயமே. அதேசமயம், ‘காவிரி நடுவர்மன்றம் பல ஆண்டுகளாக ஆய்வுசெய்து, பல்வேறு விஷயங்களையும் அலசி ஆராய்ந்து உருவாக்கிய காவிரி ஒழுங்காற்றுக்குழு மற்றும் காவிரி மேலாண்மை வாரியம் இரண்டையும் அமைக்கவேண்டும் எனத் தெள்ளத்தெளிவாக உத்தரவிடாதது மீண்டும் மீண்டும் தமிழகத்துக்கு இழைக்கப்படும் அநீதி என்றே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது’ என விவசாயிகள் கொதிப்பதில் நியாயங்கள் இருக்கவே செய்கின்றன. ‘ஆறு வாரங்களுக்குள் காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பாக அமைப்பை உருவாக்க வேண்டும் என்று கூறியிருக்கும் உச்ச நீதிமன்றம், ஒழுங்காற்றுக்குழு மற்றும் வாரியம் ஆகிய இரண்டையும் அமைக்க வேண்டும் என்று இந்தத் தீர்ப்பில் வெளிப்படையாகக் குறிப்பிடாமல்போனது ஏன் என்ற கேள்விக்கு பதில் இல்லை.

எல்லாம் போகட்டும்... இந்த 177.25 டி.எம்.சியைத் தருவதை உறுதிப்படுத்தவும் கண்காணிக்கவும் உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கும் அந்த ஓர் அமைப்பை ஆறு வாரங்களுக்குள் குடியரசுத் தலைவரின் தலைமையின்கீழ் உருவாக்குவார்களா? இதற்கும் கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் அரசு முட்டுக்கட்டை போடுமா? அந்த மாநில சட்டசபைத் தேர்தலை மனதில்கொண்டே காய்களை நகர்த்திக்கொண்டிருக்கும் பிஜேபி அதற்கு ஜால்ரா போடாமல் இருக்குமா? விவசாயிகள் எழுப்பும் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் என்ன பதில்?

இந்த இக்கட்டான சூழலில் பிரச்னையை எதிர்கொண்டு தமிழகத்துக்கு நீதி கிடைப்பதை உறுதிப்படுத்தவேண்டிய அ.தி.மு.க. அரசோ மறுபடி மறுபடி, ‘நாங்கள் மத்தியில் ஆளும் பிஜேபி அரசின் கைப்பாவையே’ என்பதை நிரூபிப்பதுபோலச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. தமிழகத்தின் நலன் எப்படியெல்லாம் பறிபோயிருக்கிறது என்பதை ஆராய்வதை விட்டுவிட்டு, ‘எல்லாம் தி.மு.க ஆட்சிக் காலத்தில் நடந்த தவறுகள்’ என்று பழைய பல்லவியைப் பாட ஆரம்பித்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அதேபோல, எதிர்க்கட்சிகளும் வழக்கம்போல வெற்று அறிக்கைகளோடு வாய்ச்சொல் வீரர்களாக வேடிக்கை காட்டிக்கொண்டுள்ளனர். சிஸ்டத்தை மாற்றப்போகிறேன்... உழவர்களோடு இணைந்து தமிழகத்தை உழப்போகிறேன் என்றெல்லாம் கலர்ஃபுல் வார்த்தைகளோடு புதிதாகக் களமிறங்கியிருப்பவர்களும் இந்த வாய்ச்சொல் வீரர்களின் வரிசையிலேயே சேர்ந்து நின்று, நம்மைச் சோர்வடையச் செய்கின்றனர்.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, சாதி, மதம், மொழி என அனைத்துவிதமான மாச்சர்யங்களையும் மறந்துவிட்டு, நம் எதிர்கால சந்ததிக்காக நாம் விட்டுச் செல்லவேண்டிய காவிரித்தாயின் மடியைக் காப்பாற்றுவதற்காகக்கூட ஒரே குரலில் ஒன்றிணைந்து, ஒட்டுமொத்த இந்தியாவுக்கே தமிழகத்தின் ஒற்றுமையை எடுத்துக்காட்டும் வகையில் கைகோத்து நிற்காமல்... வெற்று அறிக்கைகளால் என்ன பயன் வந்துவிடப்போகிறது?

‘இதுதான் இறுதித்தீர்ப்பு; இதை எதிர்த்து யாரும் மேல்முறையீடு செய்ய முடியாது; காவிரி தொடர்பாக இதுவரை நிலுவையில் இருக்கும் அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்படுகின்றன’ என்று உச்ச நீதிமன்றம் கறார் காட்டியிருக்கும் இந்த நேரத்தில்கூட இணைந்து நிற்காமல் போனால்... காலம் ஒருபோதும் நம்மை மன்னிக்கவே மன்னிக்காது!