வெளியிடப்பட்ட நேரம்: 20:35 (04/10/2018)

கடைசி தொடர்பு:20:35 (04/10/2018)

2050-ல் தொழில் துறை எப்படி இருக்கும்? - யூபிகாம் - 2018

வெகுவேகமாக வளர்ந்துவரும் வணிக உலகில், யு-காமர்ஸ் மற்றும் டிஜிட்டல் டிஸ்ரப்ஷன் தொழில்நுட்பம், மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. பிசினஸ் மாடல், சுற்றுச்சூழலியல், புதிய கண்டுபிடிப்புகள், புத்தாக்கச் சிந்தனைகள் மற்றும் நிறுவனக் கட்டமைப்புகள் என அனைத்திலும் யு-காமர்ஸ் (U Commerce) பெரிய புரட்சியையே ஏற்படுத்திவருகிறது. இ-காமர்ஸின் தொழில்நுட்ப ரீதியிலான விரிவாக்கம்தான் இந்த யு-காமர்ஸ்.

இந்தத் தொழில்நுட்பத்தின் உறுதுணையோடு 2050-ம் ஆண்டில் தொழில்துறை வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதுகுறித்த கருத்துகளை விவாதிக்கும், பரிமாறிக்கொள்ளும் ஒரு களமாக, யுபிகாம் 2018 (UBICOM 2018) என்ற தேசிய அளவிலான யு-காமர்ஸ் ஒருநாள் மாநாடு, சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா பெண்கள் கல்லூரியில் வரும் சனிக்கிழமை (அக்டோபர் 6, 2018) நடைபெற உள்ளது. 

Dr.Lalitha BalaKrishnan

இந்த மாநாட்டின் சிறப்பம்சங்கள் குறித்து எம்.ஓ.பி வைஷ்ணவா பெண்கள் கல்லூரியின் முதல்வர் டாக்டர் லலிதா பாலகிருஷ்ணன் கூறுகையில், ‘‘இந்த மாநாட்டில் கலந்துகொள்வதன்மூலம், யு-காமர்ஸை முன்னெடுத்துச்செல்லும் முக்கியக் காரணிகள்குறித்து தெரிந்துகொள்ளலாம். யு-காமர்ஸுடன் தொடர்புடைய பல்வேறு துறைகளில் நிகழ்ந்துவரும் மாற்றங்கள் மற்றும் சவால்கள்குறித்த ஆய்வுகள், ஆய்வறிக்கைகளைத் தெரிந்துகொள்ளலாம். எதிர்காலத்தில் புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய  க்ளவுட், பிக்டேட்டா, ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ், ஐ.ஓ.டி, மெஷின் லேர்னிங் உள்ளிட்ட பல்வேறு படிப்புகள்குறித்து தெரிந்துகொள்ளலாம். யு-காமர்ஸ் துறை சார்ந்த டெவலப்பர்கள், ஆய்வாளர்கள் மற்றும் வல்லுநர்களோடு அறிமுகத்தையும் தொடர்புகளையும் ஏற்படுத்திக்கொள்ள உதவும்’’ என்றார்.

இந்த மாநாட்டின் தொடக்கமாக, யு-காமர்ஸின் சர்வதேச போக்கு பற்றி தமிழக அரசின் உயர்கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர் மங்கள் ராம் சர்மா ஐஏஎஸ் பேசுகிறார். `இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ்’ என்கிற தலைப்பில், டாட் கோர் ஏஐ (.kore.ai) நிறுவனத்தின் சீஃப் மார்க்கெட்டிங் ஆபீஸர் சாய்ராம் வேதம் பேசுகிறார். ரீடெய்ஸ் இன்டஸ்ட்ரியில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் பற்றி ஸ்டைலுமியா நிறுவனத்தின் சி.இ.ஒ கணேஷ் சுப்பிரமணியன் பேசுகிறார். ப்ளாக்செயின் டெக்னாலஜி பி.எஸ்.பிரவீன் பேசுகிறார். வேல்டெக் டி.பி.ஐ நிறுவனத்தின் சி.இ.ஓ. ராஜாராம் வெங்கட்ராமன், மேத்தா ஹாஸ்பிட்டல்ஸ் டைரக்டர் சி.இ.ஓ. சமீர் மேத்தா, காக்னிஸன்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் மனிதவளத் துறை துணைத் தலைவர் ராஜீவ் மேனன் உள்ளிட்ட பல நிபுணர்கள், பல்வேறு தலைப்புகளில் இந்த மாநாட்டில் பேசுகிறார்கள். 

தங்களது நிறுவனங்களில் யு-காமர்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த விரும்பும் கார்ப்பரேட் நிறுவனத் தலைவர்கள், தங்களது தொழிலைத் திறமையுடன் முன்னெடுத்துச்செல்ல விரும்பும் புத்தாக்கச் சிந்தனையாளர்கள், மிகப்பெரிய தொழில்வாய்ப்பில் முதலீடு செய்ய விரும்புபவர்கள், கல்வியாளர்கள், வணிகவியல் சார்ந்த மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு இந்த மாநாடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த மாநாட்டில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் www.mopvc.edu.in என்ற இணையதளத்தில் இதுகுறித்த விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.