வெளியிடப்பட்ட நேரம்: 12:06 (05/10/2018)

கடைசி தொடர்பு:12:06 (05/10/2018)

`க்யூட்' ஓவியா.. `ஆட்டிட்யூட்' பாலாஜி.. பிக் பாஸ் - 2 ஃபேஷன் ஜகான்ஸ்!

கடந்த 3 மாதமாக தமிழ்நாட்டு மக்களை அதிகம் விமர்சிக்கவைத்த ரியாலிட்டி ஷோ, `பிக் பாஸ்-2'. `இந்த வாரம் இவர் வெளியேறிவிடுவார்' என நினைத்தவர் இறுதிவரை காப்பாற்றப்பட்டது, `நிச்சயம் இவர் இறுதிச்சுற்றுக்குப் போவார்' என எதிர்பார்க்கப்பட்டவர் வெளியேற்றப்பட்டது எனப் பல நிகழ்வுகள் மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தின. ``வாக்கு எண்ணிக்கைகூட குறைந்திருக்கிறது'' என்று கமல்ஹாசனே ஒரு எபிசோடில் சொல்லியிருப்பார். இப்படிப் பல வாக்குவாதங்களுக்கிடையே, `ரித்விகா' இந்த சீஸனின் வெற்றியாளரானார். `தொடக்கத்திலிருந்து இதில் கலந்துகொண்டவர்களில், ஃபேஷன் சென்ஸில் மக்களை அதிகம் கவர்ந்த போட்டியாளர் யார்?' என்று சில கேள்விகளை முன்வைத்திருந்தோம். அந்த ரிசல்ட் வந்தாச்சு!

பிக் பாஸ்

1) `அறிமுக விழாவில் உங்கள் ஃபேவரிட் யார்' என்ற கேள்விக்கு, 32.9 சதவிகித வாக்குகள் பெற்று, சிவப்பு நிற லெஹெங்கா சோலி அணிந்திருந்த ஜனனி முதல் இடம் பிடித்தார். 32.1 சதவிகித வாக்குகளைப் பெற்று யாஷிகா 2வது இடத்திலும், 22.8 சதவிகித வாக்குகளுடன் ரித்விகா  3வது இடத்திலும் உள்ளனர். ஆண் போட்டியாளர்களில் மஹத் 4.8 சதவிகித வாக்குகள் பெற்றுள்ளார்.

பிக் பாஸ் ரிசல்ட்

2) `பிக் பாஸ்' டாஸ்க்கின் ஒன்றான, `மீண்டும் பள்ளிக்குப் போகலாம்' டாஸ்க்கில் அனைத்துப் போட்டியாளர்களும் சீருடை அணிந்து பாடசாலைக்குச் சென்றனர். இந்தச் `சீருடையில் யார் பக்கா?' என்ற கேள்விக்கு, 43.4 சதவிகித வாக்குகள் ஐஸ்வர்யாவுக்குக் கிடைத்திருக்கிறது. 32.3 சதவிகிதம் வாக்குகள் பெற்று ஜனனி 2 ம்  இடத்தைப் பிடித்துள்ளார். ஆண்களில், 14.2 சதவிகித வாக்குகளை ஷாரிக் பெற்றுள்ளார். 6.8 சதவிகித மக்கள் `மோமோ'வுக்கும் வாக்களித்துள்ளனர்.

ரிசல்ட்

3. இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் கமல்ஹாசனும் பல வித்தியாச உடைகளில் வந்தார். அவற்றில் 28.5 சதவிகித வாக்குகள் பெற்று மக்களின் ஃபேவரிட்டாகியிருப்பது `மெட்ராஸ் செக்டு ஷர்ட்'. `வித்தியாசமா இருக்கே!' என்று பலராலும் அதிகம் பேசப்பட்ட சாம்பல் நிற குர்தா 22.9 சதவிகித வாக்குகள் பெற்று 2 ம் இடத்தில் இருக்கிறது. இறுதிநாளில் அணிந்து வந்த வேஷ்டி மற்றும் ஜாக்கெட்டுக்கு சுமார் 20 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளன. ஆனால், தொடக்க நாளில் உடுத்தியிருந்த `சஸ்பெண்டர் பேன்ட்' காஸ்ட்யூமுக்கு 7.6 சதவிகித வாக்குகள்தாம் கிடைத்திருக்கின்றன.

ரிசல்ட்

4) உடை எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவு ஹேர்ஸ்டைலும் முக்கியம். முகத்தை அழகிய வடிவில் எடுத்துக்காட்டுவது சீரான ஹேர்ஸ்டைல்தான். இதில், 38.8 வாக்குகள் பெற்று ஐஸ்வர்யா முதல் இடத்தில் இருக்கிறார். லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாக வீட்டினுள் வலம்வந்த விஜயலட்சுமி 27.7 சதவிகித வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். 21 சதவிகித வாக்குகள் பெற்று மும்தாஜ் 3 ம் இடத்திலும், ஆரம்பத்திலேயே வித்தியாச ஹேர்ஸ்டைலுடன் வீட்டினுள் நுழைந்த ரம்யா 12.5 சதவிகித வாக்குகளைப் பெற்று 4 ம் இடத்திலும் உள்ளனர்.

ரிசல்ட்

5) இந்த சீஸனில் யாஷிகாவுக்கு வழங்கப்பட்ட டாஸ்க்கை, `சென்ற சீஸனில் மேக்கப்பும் கையுமாய் அலைந்த ரைசாவுக்கு, கொடுத்திருக்கலாமே' என்று பலரும் கிசுகிசுத்துக்கொண்டிருந்தார்கள். அப்படி மேக்கப் இல்லாமல், `ரியல் பியூட்டி யார்?' என்ற கேள்விக்கு, 59.8 சதவிகித வாக்குகளைப் பெற்று அதிகப்படியான வித்தியாசத்தில் ஜனனி முன்னணியில் இருக்கிறார். அவரைத் தொடர்ந்து ஐஸ்வர்யா, யாஷிகா இருவரும் சுமார் 17 சதவிகித வாக்குளைப் பெற்றுள்ளனர்.

ரிசல்ட்

6) மொட்டை அடிக்க வேண்டும், புருவத்தை நீக்க வேண்டும், தலைமுடியை கலர் செய்ய வேண்டும் என்று இந்த சீஸனில் ஏடாகூடமான டாஸ்க்குகள் ஏராளம் இருந்தன. மற்றவர்களுக்காக தங்களை வற்புறுத்திக்கொண்டு செய்த இந்த டாஸ்க் முடிந்த பிறகும், `யாருடைய ஆட்டிட்யூட் மக்களுக்குப் பிடித்திருக்கிறது?' என்ற கேள்விக்கு, மொட்டை அடித்துக்கொண்ட பாலாஜி, 46 சதவிகித வாக்குகளைப் பெற்று முதல் இடத்தில் இருக்கிறார். ``பொய் சொல்வதும் ஸ்ட்ராடஜி'' என்று கூறி சென்றாயன் தலைமுடியை கலர் செய்யவைத்து, பிறகு சென்றாயனுக்காகத் தன் நீண்ட தலைமுடியை வெட்டிக்கொண்ட ஐஸ்வர்யாவுக்கு 32.3 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் சென்றாயனுக்கு 13.1 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளன.

ரிசல்ட்

7) இறுதி நாள் மேடையில், `பிக் பாஸ்-2' போட்டியாளர்கள் அனைவரும் அமர்ந்திருந்தனர். `இவர்களில் யார் க்யூட்?' என்ற கேள்விக்கு, டைட்டில் வின்னர் ரித்விகாவுக்கு 17.8 சதவிகித வாக்குகள் கிடைத்தன. 22.8 சதவிகித வாக்குகள் ஜனனிக்கும், 9.9 சதவிகித வாக்குகள் ஐஸ்வர்யாவுக்கும், 8.6 சதவிகித வாக்குகள் விஜயலட்சுமிக்கும் கிடைத்தன.

ரிசல்ட்

ஆனால், இவர்களைவிட சிறிது நேரம் மட்டுமே மேடையேறிப் பேசிய ஓவியாவுக்கு 38.9 சதவிகித வாக்குகள் கிடைத்தன. மக்கள் மனதில் இன்றும் ஓவியா ஸ்பெஷல்தான்!


டிரெண்டிங் @ விகடன்