`எந்த வரனுமே பொருத்தமாக இல்லை!' - மேட்ரிமோனி தளத்துக்கெதிராக வழக்கு தொடர்ந்த பெண் | Women got compensation from Matrimony for not finding a match

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (05/10/2018)

கடைசி தொடர்பு:15:00 (05/10/2018)

`எந்த வரனுமே பொருத்தமாக இல்லை!' - மேட்ரிமோனி தளத்துக்கெதிராக வழக்கு தொடர்ந்த பெண்

இன்றைய பரபரப்பான காலகட்டத்தில் சரியான வரன் தேடுவது மிகவும் கடினமான, நேரம் எடுக்கும் வேலை ஆகிவிட்டது. இதனால் தற்போது பலரும் மேட்ரிமோனி தளங்களையே நம்புகின்றனர். இந்த மேட்ரிமோனி தளங்கள் சரியான துணையைக் கண்டுபிடித்துத் தருவதாக வாக்குறுதி கொடுக்கின்றன. அதுவும் குறிப்பாக நல்ல தொகை செலுத்துபவருக்குச் சரியான பொருத்தத்தைக் கண்டுபிடித்து தருவோம் என்கின்றன இந்த தளங்கள். ஆனால், சில நேரங்களில் இதைச் செய்யத் இந்தத் தளங்கள் தவறிவிடும். மக்களும் இதைப் பெரிய பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் விட்டுவிடுவர். ஆனால், அப்படி இல்லாமல் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சுமார் 70,000 ரூபாய் இழப்பீடு பெற்றுள்ளார்.

மேட்ரிமோனி

20களில் இருக்கும் அந்தப் பெண் 2016ல் Wedding Wish Pvt Limited என்ற தளத்தில் தன் விவரங்களைப் பதிந்துள்ளார். மேலும் அதில் 'Royal Plan' என்ற சந்தாவில் சேர 1 வருடத்துக்கு 58,650 ரூபாய் கட்டியுள்ளார். இதில் சுமார் 21 பொருத்தமான வரன்களைக் கண்டுபிடித்து தருமெனவும் அதில் தேர்ந்தெடுக்கப்படுவரின் வீட்டாருடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்படுமெனவும் அந்தத் தளம் கூறியுள்ளது. 

ஆனால், இந்தத் தளம் அனுப்பிய எந்த வரனுமே பொருத்தமாக இல்லை என்று குற்றம்சாட்டியுள்ள அந்தப் பெண், துளியும் சம்பந்தம் இல்லாத வரன்களைக் காட்டிய அந்நிறுவனத்துக்கெதிராக வழக்கும் தொடர்ந்தார். அந்த மேட்ரிமோனி நிறுவனமோ வாடிக்கையாளருடன் நல்லுறவை ஏற்படுத்த 21-க்குப் பதிலாகக் கிட்டத்தட்ட 37 பொருத்தங்களைக் காட்டியதாகவும் அவர் யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை என்றும் தங்களின் அழைப்புகளையும் துண்டிக்க தொடங்கினார் என்றும் அவர்கள் தரப்பில் தெரிவித்தனர். இதை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் பொருத்தமான வரனைக் கண்டுபிடிக்கத் தவறியதால் பெறப்பட்ட தொகை போக இழப்பீட்டுடன் சேர்த்து 71,650 ரூபாயை வழங்க உத்தரவிட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க