புதிய டச் ஸ்க்ரீன், பெட்ரோல் இன்ஜின்... ஃபோர்டு ஆஸ்பயர் பேஸ்லிஃப்ட்டில் என்ன ஸ்பெஷல்?! | Ford launches the much awaited aspire facelift at 5.55 lakhs!

வெளியிடப்பட்ட நேரம்: 17:37 (05/10/2018)

கடைசி தொடர்பு:17:49 (05/10/2018)

புதிய டச் ஸ்க்ரீன், பெட்ரோல் இன்ஜின்... ஃபோர்டு ஆஸ்பயர் பேஸ்லிஃப்ட்டில் என்ன ஸ்பெஷல்?!

டைட்டானியம் வேரியன்ட்டைத் தவிர்த்து, மற்ற வேரியன்ட்களின் விலைகள் முன்பைவிடத் தோராயமாக 6 ஆயிரம் - 55 ஆயிரம் ரூபாய் வரை குறைந்திருக்கிறது.

புதிய அமேஸ் மற்றும் டிசையருடன் போட்டிபோடும்விதமாக, 5.55 - 8.14 லட்சம் ரூபாய்க்குத் தனது ஆஸ்பயர் காம்பேக்ட் செடானின் பேஸ்லிஃப்ட் மாடலை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது ஃபோர்டு. பெட்ரோல் ஆட்டோமேட்டிக் மாடலுக்கு, 8.49 லட்சம் ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலைகளான இவை, அறிமுகக்காலச் சலுகையாகும். எனவே, பின்னாளில் காரின் விலை ஏற்றப்படுவதற்கான சாத்தியங்கள் உண்டு.

காரில் பாதுகாப்பு வசதிகள் எப்படி?

ஃபோர்டு

இந்த காரின் 5 வேரியன்ட்களிலும் 2 காற்றுப்பைகள் - ABS - EBD - முன்பக்க இருக்கைக்கான சீட்பெல்ட் Reminder - அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன்பக்க & பின்பக்க இருக்கைகளின் ஹெட் ரெஸ்ட் ஆகிய பாதுகாப்பு வசதிகள் ஸ்டாண்டர்டாக அளிக்கப்பட்டுள்ளன.

டாப் வேரியன்ட்டில் 4 காற்றுப்பைகள் மற்றும் Emergency Assistance சர்வீஸ் வசதி கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன.

ஆட்டோமேட்டிக் வேரியன்ட்டில் Hill-Start Assist, ESP, டிராக்‌ஷன் கன்ட்ரோல் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

காரின் டிசைன் மற்றும் கேபினில் என்ன மாற்றம்?

ford

சென்ற ஏப்ரல் மாதத்தில் ஃபோர்டு வெளியிட்ட ஃப்ரீஸ்டைல் காரில் வழக்கமான மாடலுடன் ஒப்பிடும்போது என்னென்ன டிசைன் மாற்றங்கள் இருந்தனவோ, அவை அப்படியே இங்கும் இடம்பெயர்ந்திருக்கின்றன. கிரில், பம்பர்கள் ஆகியவை இதற்கான உதாரணங்கள். முந்தைய மாடலில் 14 இன்ச் அலாய் வீல்கள் இருந்த நிலையில், இங்கே அது 15 இன்ச்சாக வளர்ந்திருக்கிறது. மற்றபடி, காரின் தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை.

aspire

பீஜ் - பிளாக் நிற கேபினில், ஃப்ரீஸ்டைல் காரைத் தொடர்ந்து Sync 3 உடனான 6.5 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆஸ்பயர் பேஸ்லிஃப்ட்டில் புதிதாகப் பொருத்தப்பட்டுள்ளது. முன்பு ஸ்போர்ட்ஸ் எடிஷன் இருந்த நிலையில், தற்போது அதற்குப் பதிலாக Trend+ எனும் வேரியன்ட்டைக் கொண்டுவந்திருக்கிறது ஃபோர்டு. அதேபோல, பெட்ரோல் ஆட்டோமேட்டிக் மாடலை, Titanium வேரியன்ட்டில் மட்டுமே வாங்க முடியும்.

இன்ஜின் - கியர்பாக்ஸ் ஏதும் மாறியிருக்கிறதா?

ஆஸ்பயர்

முந்தைய மாடலில் இருந்த 4 சிலிண்டர், 1.2 லிட்டர் (88bhp - 18.16 கிமீ அராய் மைலேஜ்) பெட்ரோல் இன்ஜினுக்குப் பதிலாக, ஃப்ரீஸ்டைல் காரில் இருந்த 3 சிலிண்டர், 1.2 லிட்டர் (96bhp - 20.4 கிமீ அராய் மைலேஜ்) Ti-VCT பெட்ரோல் இன்ஜின் - 5 ஸ்பீடு Getrag மேனுவல் கியர்பாக்ஸ் கூட்டணியை இதில் வழங்கியிருக்கிறது ஃபோர்டு. 1.5 லிட்டர் TDCi டர்போ டீசல் இன்ஜின் - 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லையென்றாலும், முன்பைவிட காரின் அராய் மைலேஜ் 0.27 கிமீ உயர்ந்திருக்கிறது (அதாவது 26.1கிமீ). எக்கோஸ்போர்ட்டில் உள்ள 1.5 லிட்டர், Ti-VCT பெட்ரோல் இன்ஜின் (123bhp) - 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் (Torque Converter) அமைப்புகொண்ட மாடல், முன்பைவிட 13bhp பவர் மற்றும் 1.4kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. என்றாலும், அராய் மைலேஜ் 0.7 கிமீ சரிந்திருக்கிறது (அதாவது 16.3கிமீ).

காரின் விலை குறைந்திருப்பது எப்படி?

பேஸ்லிஃப்ட்

டைட்டானியம் வேரியன்ட்டைத் தவிர்த்து, மற்ற வேரியன்ட்களின் விலைகள் முன்பைவிட தோராயமாக 6,000 - 55,000 ரூபாய் வரை குறைந்திருக்கிறது. உள்நாட்டு உதிரிபாகங்கள் அதிகளவில் காரில் பயன்படுத்தப்பட்டிருப்பதே குறைவான விலை மற்றும் பராமரிப்புச் செலவுகளுக்குக் காரணம் என ஃபோர்டு தெரிவித்துள்ளது. 1 லட்சம் கிமீ ஆயுள்காலத்தில் ஆஸ்பயர் பேஸ்லிஃப்ட்டின் பெட்ரோல் மாடலின் பராமரிப்புச் செலவு கிமீ-க்கு 38 பைசாவும், டீசல் மாடலின் பராமரிப்புச் செலவு கிமீ-க்கு 45 பைசாவும் இருக்கும் எனத் தகவல்கள் வந்திருக்கின்றன.

facelift

தனது வகையிலேயே சிறந்த 5 வருடம் /1 லட்சம் கிமீ வாரன்ட்டியைக் கொண்டிருக்கும் ஃபோர்டு ஆஸ்பயர்-அறிமுக டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலைகள் பின்வருமாறு...

Ambiente MT - 5.55 - 6.45 லட்சம் ரூபாய்.

Trend MT - 5.99 - 6.89 லட்சம் ரூபாய். 

Trend+ MT - 6.39 - 7.29 லட்சம் ரூபாய்.

Titanium MT - 6.79 - 7.69 லட்சம் ரூபாய்.

Titanium AT - 8.49 லட்சம் ரூபாய்.

Titanium+ MT - 7.24 - 8.14 லட்சம் ரூபாய்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்