`ஓவியத்தை வரைந்தது ரவிவர்மா அல்ல; என் தந்தை!- நெகிழும் கீதா ஹல்டான்கர் | Do you think that the art was made by ravivarma?! Here is the truth!

வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (06/10/2018)

கடைசி தொடர்பு:13:37 (06/10/2018)

`ஓவியத்தை வரைந்தது ரவிவர்மா அல்ல; என் தந்தை!- நெகிழும் கீதா ஹல்டான்கர்

ரவி வர்மா

 PC: The Week

பாரம்பர்ய முறையில் புடவை கட்டிய ஓர் இந்தியப் பெண், தன்னிடம் இருக்கும் விளக்கு அணைந்துவிடக் கூடாது எனக் கைகளால் அணைக்கட்டி இருக்கும்படி வரையப்பட்டிருக்கும் இந்தப் படம், க்ளோ ஆஃப் ஹோப் (Glow of hope) என்று அழைக்கப்படுகிறது. பெண்ணின் விரல்களுக்கு இடையே வெளிவரும் விளக்கின் வெளிச்சம், முகத்தைப் பிரகாசமாகக் காட்டுவது ஓவியத்தின் சிறப்பு. பார்க்கும் யாரையும் ரசிக்கவைக்கும் இந்த ஓவியம், ரவி வர்மா வரைந்தது எனப் பலராலும் நம்பப்படுகிறது.

இந்த ஓவியத்தை வரைந்தது ஓவியர் ரவிவர்மாவும் இல்லை; இவள் கற்பனைப் பெண்ணும் இல்லை. ஓவியர் ஹல்டான்கர் என்பவரால் 1945-46 ஆண்டுகளில் வரையப்பட்டது. தற்போது, இந்த ஓவியம் மைசூரில் உள்ள ஜெகன்மோகன் அரண்மனையில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தில் இருக்கும்‌ பெண், ஹல்டான்கரின் மூன்றாவது மகளான, கீதா ஹல்டான்கர். இந்த‌ ஓவியம் வரையப்பட்டபோது, மகாராஷ்டிரா மாநிலத்தின் கோல்ஹாபூரில் வசித்து வந்தனர். 

ஒரு தீபாவளி‌ நாளில், விளக்கு அணையாதிருக்க தன் கைகளால் அணைக்கட்டி நின்ற மகளைப் பார்த்தார் ஹல்டான்கர். இந்தத் தருணத்தை ஓவியமாக்க எண்ணினார். இதற்காக, கீதா ஹல்டான்கர் மூன்று மணி நேரம் சிற்பம் போல நிற்க, வரைந்து முடித்தார் ஹல்டான்கர். இந்த ஓவியம், வாட்டர் கலரால்‌‌ தீட்டப்பட்டு உயிர்பெறச் செய்யப்பட்டுள்ளது. ''உலகப் புகழ்பெற்ற இந்த ஓவியத்தை, தந்தை படைத்தபோது என் வயது 12'' எனத் தனது நூறாவது பிறந்தநாளில் நெகிழ்ந்துள்ளார் கீதா ஹல்டான்கர்.

2017-ம் ஆண்டு, நூறாவது பிறந்தநாளைக் கொண்டாடிய கீதா ஹால்டான்கர், கடந்த செவ்வாய்க் கிழகை,கோல்ஹாபூரில் உள்ள தன் மகள் வீட்டில் காலமானார். பெண்மையை மிளிரச் செய்யும் இந்த விளக்கின் ஒளி, இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் பிரகாசிக்கும் என்பதில் ஐயமில்லை.


[X] Close

[X] Close