சினிமா
தொடர்கள்
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

ந்தியில் வெளியான ‘Padman’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் பெரிய பேரை வாங்கியிருக்கிறார் சோனம் கபூர். படத்துக்குக் கிடைத்த பாஸிட்டிவ் ரிசல்ட்டால் உற்சாகத்தில் இருக்கிறார். “காலம் மாறிடுச்சு. சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் சினிமால இருந்துட்டு பொறுப்பில்லாம இருக்க முடியாது” என்று அக்கறையோடு பேசியிருக்கிறார். இனி நடிக்கும் படங்களையும் பொறுப்போடு தேர்வு செய்யப்போகிறாராம். சூப்பர் சோனம்

இன்பாக்ஸ்

தொடர்ந்து `சிறுத்தை’ சிவா படங்களிலேயே நடித்துவரும் அஜித்தின் அடுத்த பட இயக்குநர் `சதுரங்க வேட்டை’, ‘தீரன்-அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய வினோத். ‘சதுரங்க வேட்டை’ பட வெற்றிக்குப் பிறகு அஜித்திடம் கதை சொல்லியிருக்கிறார் வினோத். ஆனால், பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்தை எட்டுவதற்குள் இருவருமே வேறு வேறு படங்களுக்குச் சென்றுவிட ‘தீரன்’ வெற்றிக்குப்பிறகு மீண்டும் வினோத்தை அழைத்திருக்கிறார் அஜீத்்.பேச்சுவார்த்தை ‘ஆல் இஸ் வெல்’ ஆக முடிய ‘விஸ்வாசம்’ படம் முடிந்ததும் வினோத் இயக்கும் படத்தின் ஷூட்டிங் ஆரம்பம். ஹீரோயின், டெக்னீஷியன்களை இறுதி செய்யும் பேச்சுவார்த்தை மிகத்தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது. வாழ்த்துகள் வினோத்!

இன்பாக்ஸ்

மிழின் முதல் சூப்பர்ஹீரோ கதையான ‘முகமூடி’யின் படுதோல்வியால் அப்போது கொஞ்சம் அப்செட்டில் இருந்தார் மிஷ்கின்.  ``இப்போதுதான் ‘முகமூடி’யில் நான் செய்த தவறுகள் என்னென்ன என்று புரிகிறது. விரைவில் ‘முகமூடி’ மாதிரியே இன்னொரு சூப்பர் ஹீரோ கதையை இயக்கி ஹிட் படமாகக் கொடுப்பேன். அது 3டி வெர்ஷனில் வரும். சோஷியல் நெட்வொர்க்கின் இன்னொரு முகத்தை காமெடியாக இந்த 3டி படம் பேசும். அதற்கான ஸ்க்ரிப்ட் எழுதிக்கொண்டிருக்கிறேன்’’ என்றும் சொல்லியிருக்கிறார் மிஷ்கின். மிஷ்கின்மேன்!

இன்பாக்ஸ்

ந்திய முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி எழுதியிருக்கும் ‘A century is not enough’ புத்தகம்  செம ஹிட். தன் கிரிக்கெட் வாழ்க்கையின் அந்திமக்காலத்தில் தான் சந்தித்த சிக்கல்களையும் சவால்களையும் பற்றி இந்தப் புத்தகத்தில் மனம் திறந்து எழுதியுள்ளார் கங்குலி.  “என் சுயசரிதை வெளிவந்தால் பலருடனும் பல பிரச்னைகள் எழும். பெரிய பூகம்பங்கள் வெடிக்கும்” என்று முன்பொருமுறை சொல்லியிருந்தார் கங்குலி. இப்போது புத்தகம் வெளிவந்துள்ள நிலையில், வங்கப்புலி போட்டுத் தள்ளியிருக்கும் ஆட்கள் யார் யாரெனத் தெரிந்துகொள்ள ஆவலுடன் புத்தகத்தை வாங்கிக் குவிக்கிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள். ரைட்டு ரைட்டரே!

இன்பாக்ஸ்

‘மாலிஃபசன்ட்’ படத்துக்குப் பிறகு தாய் ஏஞ்சலீனாவும் அவரின் 10 வயது மகள்  விவியனும் ஆக்‌ஷன் படமொன்றில் கைகோக்கிறார்கள்.  குட்டிக் குழந்தையாக `மாலிஃபசன்ட்’ படத்தில் மிரட்டியெடுத்த சுட்டி விவியனுக்கு இப்போது 10 வயது. கராத்தே, குங்ஃபூ, பாலே டான்ஸ் என சகலகலாவல்லியாக அம்மாவை மிஞ்சும் நடிகையாக வளர இப்போதே ஸ்கெட்ச் போட்டுப் பயிற்சி செய்துவருகிறார். ஜூனியர் ரெடி!

இன்பாக்ஸ்

ற்கெனவே ‘ஹனுமான் : த தாம்தர்’ அனிமேஷன் படத்தில் ஹனுமானுக்கு வாய்ஸ் கொடுத்துக் குழந்தைகளை மகிழ்வித்தவர் சல்மான். இப்போது  ஹாலிவுட்-பாலிவுட் கூட்டுத்தயாரிப்பில் `ஹனுமான்’ கதையை லைவ் ஆக்‌ஷன் படமாகவே எடுக்கவிருக்கிறார்கள். அதிலும் சல்லுபாய்தான் ஹனுமானாக நடிக்கவிருக்கிறார். படத்தை முழுக்க முழுக்க வெளிநாடுகளில் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார்கள். சலோ சல்லுபாய் சலோ!

இன்பாக்ஸ்

ஹாலிவுட் போல இந்தியாவிலும் விண்வெளிப் படங்களின் சீசன் இது. தமிழில் ஜெயம் ரவி நடிக்கும் ‘டிக் டிக் டிக்’, இந்தியில் மாதவன் நடிக்கும் ‘சந்தா மாமா தூர் கே’ என ஏற்கெனவே இரண்டு விண்வெளிப் படங்கள் தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில் ஷாரூக்கானும் களத்தில் இறங்கியிருக்கிறார். இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் என்ற பெருமையைப் பெற்ற ராகேஷ் ஷர்மாவின் பயோ-பிக்கில் நடிக்கிறார்் ஷாரூக்கான். படத்துக்கு ‘சல்யூட்’ எனப் பெயரிட்டிருக்கிறார்கள். வானத்தையே எட்டிப்பிடிப்போம்!

இன்பாக்ஸ்

ன்ஸ்டாகிராமத்தில் குடியேறி ஹிட்டடிக்கிறார் இசைப்புயலின் மகன் ஏ.ஆர்.ஆர்.அமீன். அப்பா இசையால் மயக்குவதைப்போல மகன் செல்போன் கேமராவில் எடுக்கும் போட்டோக்கள் எக்கச்சக்க `ஹார்ட்ஸ்’ வாங்கிவிடுகிறது. நிறையபேர் இவரை ஃபாலோ செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். ‘அப்பா நல்லா இருக்காரா?’ என்று யாரேனும் கேட்டால்கூட, ‘நல்லா இருக்கார் அங்கிள்’ என சின்ஸியராய்ப் பதிலும் சொல்லி ஷாக் கொடுக்கிறது இந்த மினியேச்சர் புயல். அப்பா நல்லா இருக்காரா?