போகாத ஊருக்குப் போ...

“பெரிய மகன் அஷோக்குக்கு இரண்டு வயசு இருக்கும்போது உடல்நிலை சரியில்லாமல் போயிடுச்சு. அப்ப எனக்கு சம்பளம் ரொம்பக் கம்மி. கவரப்பேட்டைக்கும், சென்னைக்குமா அலைஞ்சுட்டிருந்த சமயம். மருத்துவ நண்பர் ஒருத்தர் பிரைவேட் ஹாஸ்பிடல்ல சேர்க்கச் சொல்றாரு. என் கைல வெறும் 80 ரூபாய்தான் இருந்துச்சு. கவர்ன்மென்ட் ஹாஸ்பிடல்லதான் சேர்த்தேன். ரொம்ப சிரமத்துக்கு அப்புறம் அவன் உடல்நிலை சரியாகி வந்தான். ஆனா அந்த நாள்கள் என்னை பெரிசா பாதிச்சது. பணம் பற்றின பார்வையை மாத்துச்சு. இப்படி வேலை செஞ்சு பணம் சேர்த்தா, எவ்ளோ சம்பாரிச்சாலும் போதாதுனு தோணிச்சு. இப்படியே இருக்கக்கூடாது, நாம ஏதாவது பிஸினஸ் செய்யணும்னு முடிவு பண்ணினது அப்பதான்.”

`கேப்ளின் பாய்ன்ட்’ சி.சி.பார்த்திபன் எடுத்த அந்த ஒரு முடிவு இன்று 5,000 கோடி சந்தைமதிப்புள்ள நிறுவனமாக பிரமாண்டமாக வளர்ந்து நிற்கிறது. கும்மிடிப்பூண்டியில் உள்ள, பூவலம்பேடு கிராமத்தில் விவசாயக்குடும்பத்தில் பிறந்தவர், இன்று தன் 64வது வயதில், 23 நாடுகளில் கிளை பரப்பி, ஒவ்வொரு நாளும் மணிக்கொரு வெளிநாட்டினரோடு பிஸினஸ் பேசிக்கொண்டிருக்கிறார்.

பார்த்திபனின் பால்யம் அத்தனை எளிதாக இருக்கவில்லை. வறுமை வாழ்ந்த வீடு, அரசுப்பள்ளிதான். ஒவ்வொரு நாளும் பல கிலோமீட்டர்கள் நடந்தால்தான் படிப்பு. இருந்தும் படிப்பைக் கைவிடாமல் ஆர்வத்துடன் படித்தார். 11-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்ததால், பச்சையப்பா கல்லூரியில் பி.யு.சி. இடம் கிடைத்தது. அதற்குப்பிறகு பொன்னேரிக் கல்லூரியில் பி.ஏ.ஹிஸ்டரி படித்து முடிக்கிறார்.

கல்லூரி நண்பன், மும்பை சென்று அங்கிருந்து இவருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் ‘ஹோட்டல் இமாலயாஸ்’ என்று முகவரி இடப்பட்டிருக்க, ‘ஆஹா… நண்பன் ஒரு பெரிய ஹோட்டலில் வேலைக்குச் சேர்ந்துவிட்டான்’ என்று நம்பி, வீட்டில் சொல்லாமல் வேலை தேடி மும்பைக்குக் கிளம்பிவிடுகிறார் பார்த்திபன்.

அங்கே சென்றபோதுதான், அந்த `இமாலயாஸ்’ ஒரு டீக்கடை என்பதும், அவன் தங்கியிருப்பதே சவப்பெட்டி சைஸ் அறை என்பதும் தெரியவருகிறது. வேறுவழியில்லை வந்தாகிவிட்டது, இனி இங்குதான். இப்படித்தான் என முடிவெடுக்கிறார் பார்த்திபன்.

1974-75ல் தாராவிக்கு அருகில் இருந்த ஒரு தியேட்டரில் டிக்கெட் சரிபார்க்கும் வேலை கிடைக்கிறது. டாய்லெட் போகவேண்டுமென்றால் 25 பைசா கொடுக்க வேண்டும் என்பதால், அதையே இரண்டு நாள்களுக்கு ஒருமுறைதான் செய்யவேண்டிய நிலை. வறுமையின் கோரமான முகத்தை நேருக்கு நேராக எதிர்கொண்டு போராட வேண்டியதாக இருந்தது.

பாட்டியின் பாசமும், இரண்டு தங்கைகளின் பாசமும் இழுக்க பேக் டு பெவிலியன். சொந்த ஊருக்கே திரும்பி வருகிறார். கொஞ்சநாளிலேயே சும்மா இருப்பதன் வலி பொறுக்க முடியாமல், பாட்டியிடம் 10 ரூபாய் வாங்கிக்கொண்டு 1978-ம் ஆண்டு சென்னைக்கு வண்டியேறுகிறார் பார்த்திபன்.

சென்னையில் பல்வேறு இடங்களில் வேலை பார்க்கிறார். அந்தச் சமயத்தில், நண்பர் ஒருவர் மூலமாக ஃபார்மசூட்டிகல் கம்பெனி ஒன்றில் நேர்முகத்தேர்வுக்குச் செல்கிறார். ராஜமுந்திரியில் வேலை. அங்கிருந்து மீண்டும் சென்னை. இதற்கிடையில் திருமணம். இரண்டு மகன்கள். மாதச் சம்பளமும் பட்ஜெட்டும் வாழ்க்கையை ஆக்கிரமிக்கின்றன. அப்போதுதான் மகனுக்கு உடல்நலம் இல்லாமல்போகிறது. பணம் குறித்த பார்வை மாற, சுயமாகத் தொழில் செய்வது என்கிற முடிவை எடுக்கிறார்.

அயனாவரத்தில் ப்ளாட்டோ லேபரட்டரீஸ் என்ற சிறு கம்பெனி நடத்திவந்த சுப்பிரமணியம் சில காரணங்களால் நிறுவனத்தை மூட முடிவெடுக்கிறார். அதை வாங்க நினைத்து பார்த்திபன் செல்கிறார். “நான் லைசென்ஸை சரண்டர் பண்ணிட்டேன். புரொட்டீன் டானிக்குக்கு லைசென்ஸ் தேவையில்லை. 5,000 ரூவா இருந்தா 1,000 பாட்டில் புரொட்டீன் டானிக் ரெடி பண்ணி சேல்ஸ் பண்ணலாம். அதுல இருந்து ஆரம்பிங்க” என்று சுப்பிரமணியம் யோசனை தருகிறார்.

ஆண்டு 1983. 5000 முதலீட்டில் `டார்வின் ஃபார்மசூட்டிகல்ஸ்’ என்ற பெயரில் பிஸினஸ் உலகின் முதல் படியில் கால்வைக்கிறார் பார்த்திபன். புரொட்டீன் டானிக் தயாரித்து ஒவ்வொரு இடத்துக்கும் இவராகவே சென்று விற்கிறார். அப்போது கிடைத்த நட்பின் அடிப்படையில், இரு நண்பர்களோடு சேர்ந்து 1987-ல் `ட்ரை-வின் ஃபார்மசூட்டிகல்ஸ்’ என்ற நிறுவனம் தொடங்கப்படுகிறது. 1990-ல் மேலும் இரு நண்பர்களோடு கரம் கோத்து ‘கேப்ளின் பாய்ன்ட் லேபரட்டரீஸ்’ தொடங்கப்படுகிறது. CAPsule, Liquid, INjuction, Powder, OINtment, Tablet என்று மருந்தின் அனைத்து வகைகளும் இருப்பதுதான் CAPLIN POINT என்ற பெயரின் காரணம். 1993-ல் அதை பப்ளிக் லிமிடெட் ஆக உயர்த்துகிறார். பல்வேறு ஏற்ற இறக்கங்களுக்குப் பிறகு இந்திய அளவில் ஃபார்மசூட்டிகல் கம்பெனிகளில் முக்கிய இடத்தை அடைகிறது கேப்ளின் பாய்ன்ட்.

1994-ல் பப்ளிக் லிமிடெட் நிறுவனமாக முன்னேறியது, புதிய பங்கு வெளியீட்டில் 117 மடங்கு பங்குகளுக்கு விண்ணப்பிக்கப்பட்டு சாதனை படைத்தது, 1996-ல் பிரேசிலுக்குப் போன இந்தியாவின் முதல் ஃபார்மசூட்டிகல் நிறுவனம் என தொடர் வெற்றிகள். ஆனால் மார்க்கெட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த, தரம் உட்பட மற்ற சில துறைகளில் சரிவு. நிறுவனம் இதுவரை காணாத மிகப்பெரிய சரிவைச் சந்திக்கிறது. எந்த அளவுக்கு என்றால், மகனின் ஸ்கூஸ் ஃபீஸ் கட்டக்கூட வழியில்லாமல் போகிறது. 1998-ல் மீண்டும் பார்த்திபனை வறுமை மேகம் சூழ்கிறது.

`I took the road less travelled by, and that has made all the differences...’ ராபர்ட் ஃப்ராஸ்டின் இந்த வரிகளை ஒரு புத்தகத்தில் படிக்கிறார். ``ஒரு மிகப்பெரிய தோல்வியிலிருந்து மீண்டுவரவேண்டுமென்றால், யாருக்கும் தெரியாத ஒன்று நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்; அல்லது யாரும் போக பயப்படக்கூடிய இடங்களுக்கு நாம் செல்ல வேண்டும்.’’ இரண்டாவதைத் தேர்வு செய்கிறார் பார்த்திபன். அவர் சென்றது ரிபப்ளிக் ஆஃப் கினி நாட்டுக்கு!

கினியில் மருந்து விற்பனை என்பதெல்லாம் நம்மூர் சந்தைக்கடை மாதிரி இருக்கும். ‘மெடிசின் பிஸினஸ் என்பது, இங்கே மாஃபியா பிஸினஸ். எப்போது வேண்டுமானாலும் நீ சுடப்படலாம்’ என்று இந்திய நண்பர் ஒருவர் எச்சரிக்கை செய்கிறார். எப்படியும் திரும்ப ஊருக்குப் போனால், ஒவ்வொரு நாளும் சோதனையாகத்தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதற்கு இந்த ரிஸ்க் எடுக்கலாம் என்று முடிவு செய்கிறார். அதன்பிறகு சோமாலியா, சொமாலி லேண்ட், சாட் (Chad), அங்கோலா என்று ஒவ்வொரு நாடாகப் பயணிக்கிறார்.

அங்கோலாவில் காலடி எடுத்து வைத்த அடுத்த நாளிலேயே இவர் சந்தித்த அனுபவம், பயங்கரம். மருந்து மாதிரிகள் அடங்கிய ப்ரீஃப்கேஸுடன் காரில் சென்றுகொண்டிருக்கிறார். இரவு ஏழு மணி. ஓவர்டேக் செய்த கார் ஒன்றிலிருந்து இறங்கியவர்கள், இவரது காரின் டயர்களைச் சுட்டு நிறுத்துகிறார்கள். இறங்கிய இவர் தலையில், துப்பாக்கி முனையை அழுத்துகிறான் ஒருவன். உடனேயே கையிலிருந்த ப்ரீஃப்கேஸைக் கொடுத்துவிடுகிறார் இவர். அடுத்த நிமிடம், மேல்நோக்கிச் சுடுகிறான். ‘ஓடிவிடு.. இல்லைன்னா சுட்டுடுவேன்’ என்பது அதன் பொருள். உடனேயே அங்கிருந்து ஓடிவந்துவிடுகிறார் பார்த்திபன். அந்த ப்ரீஃப்கேஸில் இவரது ஃபோன் இருக்கிறது. அதற்கு அழைக்கிறார் இவரின் நண்பர். “காசிருக்கும்னு நம்பி, 2000 டாலர் செலவு பண்ணி இந்த வேலையப் பண்ணினோம். பூரா மருந்தா இருக்குது” என்று திட்டுகிறான் கொள்ளையன். ஆனால், அப்போதுதான் முடிவு செய்கிறார் பார்த்திபன். துப்பாக்கி முனையில் மிரட்டப்படுகிற ஓர் இடம் இருக்கிறதென்றால், இங்கே விற்பனையாளர்கள் வர பயப்படுவார்கள். ஆக, இங்கேதான் நாம் மார்க்கெட்டிங் செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கிறார். ஆனால், கான்டாக்ட்ஸ் கிடைக்கவில்லை. இப்போது, சின்ன வயதில் செய்த ஹோட்டல் வேலை ஞாபகம் வருகிறது.

உடனே, இந்திய வகை உணவுவகைகளுக்காக ‘ரெஸ்டாரன்ட் தாஜ்மஹால்’ என்ற பெயரில் ஒரு சின்ன உணவகம் ஆரம்பிக்கிறார். உணவகத்தின் அழைப்பிதழோடு நிறைய ஆஃபர்களை அறிவிக்கிறார்.

உள்ளூர்ப் பத்திரிகைகள், டிவி சேனல்கள் முழுவதும் இந்த ரெஸ்டாரன்ட் பற்றித்தான் பேச்சு.

தன் ஹோட்டலில் வாடிக்கையாளர்களிடம் நேரடியாக அவரே ஆர்டர் எடுக்கிறார். அப்படி ஆர்டர் எடுக்கும்போது வரும் நபர்களைக் கவனித்து, அதில் ஒருவரோடு நட்பாகிறார். அவரும் மருந்து பிஸினஸில் இருப்பதை அறிந்து, இந்தியாவில் இவர் செய்த ஃபார்மசூட்டிகல் பிஸினஸ் பற்றிச் சொல்கிறார். அவருடைய நட்பைப் பயன்படுத்தி மருந்து பிஸினஸைத் தொடங்குகிறார். அந்த முதல் வருவாயிலேயே, ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்க இவர் செய்த செலவுகளை எல்லாம் சரிசெய்துவிடுகிறார். அதன்பிறகு அங்கோலாவிலேயே, இவரது மருந்துகளை விற்க ஒரு விற்பனைக் கிடங்கு ஆரம்பிக்கிறார். பணம் இருக்கிறது என்று அறிந்தாலே சுட்டுக்கொன்றுவிடுகிற ஆட்கள் இருக்கிற இடம். அதனாலேயே வெகு சாதாரண இடமொன்றில் தங்கித்தான் இவற்றைச் செய்கிறார். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இந்தியா வந்து, சென்னை அலுவலகத்தையும் மேம்படுத்துகிறார்.

1997-ல் 10 கோடி நஷ்டம், 27 செக் பவுன்ஸ் கேஸ் என்று வீழ்ந்தவர், மீண்டு வந்தது நிச்சயம் பலருக்குமான பாடம். இன்றைக்கு இரண்டு மகன்களும், இவருடன் சேர்ந்து இவரது பிஸினஸைப் பார்த்துக்கொள்கின்றனர். “அங்கோலாவில் நடந்த அந்தச் சம்பவத்தின்போது ஒன்று புரிந்து கொண்டேன். `Pain and Risk By Choice is a Gain’ என்பதுதான் அது. இந்த ரிஸ்க் எடுக்க வேண்டும் என்பது நாமாகத் தேர்ந்தெடுத்தது. நிச்சயம் இந்த ரிஸ்க் நமக்கு நன்மையையே தரும் என்று உணர்ந்தேன். அதே போல துயரம் என்பது நம் தலைக்கு மேல் சுற்றிக்கொண்டிருக்கும் பறவையாக இருக்கலாம். ஆனால் ஒருபோதும், அதை உங்கள் தலைக்குள் கூடு கட்ட விடக் கூடாது” என்கிறார் பார்த்திபன்.

5,000 ரூபாயில் ஆரம்பித்த சின்ன தொழில், 5000 கோடி சந்தைமதிப்புள்ள நிறுவனமாக உயர்ந்து நிற்கிறது இன்று. யாரும் செல்லத் தயங்கும் பாதையில் பயணிக்கத் தயாரானால், எதுவும் சாத்தியம் என்பதே பார்த்திபன் சொல்லும் பாடம்!

பார்த்திபனின் பிசினஸ் மொழி!

* தோல்வியை எப்போதும் நாம் சுமக்க, அவை நம் குழந்தைகள் அல்ல. எனவே தோல்வியிலிருந்து கிடைக்கும் பாடம் நம் வெற்றிக்கு முதல்படியே.

* சாதனை படைக்க சாமான்யனாலும் முடியும். அதற்குத் தேவை நேர்மறை எண்ணங்கள், நம்பிக்கை, அறிவுபூர்வமான உழைப்பு.

* தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தால் வளமையை வறுமை தடுக்கவும் முடியாது; மறைக்கவும் முடியாது.

* ஒரு மிகப்பெரிய தோல்வியிலிருந்து மீண்டுவரவேண்டுமென்றால், யார்க்கும் தெரியாத ஒன்று நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்; யாரும் போக பயப்படுகிற இடத்துக்கு நாம் பயணிக்கத் தயாராக இருக்க வேண்டும்.