ஆட்டோ எக்ஸ்போ, ஃபார்முலா 1 ரேஸ், ஃபெராரி மியூசியம்...கார் பிரியர்கள் மிஸ் செய்யக்கூடாதவை! | Dear Car Enthusiasts... Have you done these once?

வெளியிடப்பட்ட நேரம்: 19:47 (07/10/2018)

கடைசி தொடர்பு:19:47 (07/10/2018)

ஆட்டோ எக்ஸ்போ, ஃபார்முலா 1 ரேஸ், ஃபெராரி மியூசியம்...கார் பிரியர்கள் மிஸ் செய்யக்கூடாதவை!

எனவே உங்கள் நாடி நரம்புகளில் ரத்தத்துடன் பெட்ரோல்/டீசல் கலந்திருக்கிறது என்றால், இங்கு சொல்லப்படும் விஷயங்களைச் செய்துபார்த்திருக்கிறீர்களா என உங்களை நீங்களே சுயப்பரிசோதனை செய்துபார்த்துக் கொள்ளவும்!

ஒவ்வொருவரும் தம் வாழ்வில், தான் சந்தேகிக்கும் விஷயங்களில் சிலவற்றை நிச்சயம் செய்துபார்த்திருக்க வேண்டும். அப்போதுதான் அதன்மீதான நம்பிக்கை கிடைக்கும். உதாரணத்துக்கு காரில் வேகமாகச் செல்வதைச் சொல்லலாம்! எனவே உங்கள் நாடி நரம்புகளில் ரத்தத்துடன் பெட்ரோல்/டீசல் கலந்திருக்கிறது என்றால், இங்கு சொல்லப்படும் விஷயங்களைச் செய்துபார்த்திருக்கிறீர்களா என உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்துபார்த்துக் கொள்ளவும்; இவை ஒவ்வொரு கார் ஆர்வலரும் தமது மூச்சு முடிவதற்குள் செய்துவிட உறுதி பூண்டுவிடுவார்கள் என நம்பலாம்.

சர்வதேச கண்காட்சிகளுக்குச் செல்வது

கார்

ஸ்டைலான சூப்பர்கார்கள், அதிரடியான கான்செப்ட் கார்கள் எனத் தங்களால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு வித்தையையும் கார் நிறுவனங்கள் சர்வதேச எக்ஸ்போக்களில் காட்டும். இவற்றையெல்லாம் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில்..... அதுவும் பல நிறுவனங்களின் புதிய படைப்புகளைப் பார்ப்பது என்பது செம அனுபவம்! இன்டர்நெட்டில் உட்கார்ந்து பார்த்தால் தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்; என்றாலும், நேரில் செல்லும்போது அந்தக் கார்களைத் தொட்டுணர முடிவதுடன், இடவசதி - தரம் - அம்சங்கள் எல்லாம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்துவிடலாம்; அதுவும் நம் நாட்டுக்கு வரப்போகும் கார்களை, அனைவருக்கும் முன்பாகவே பார்த்து உணரச் செய்வது என்பதை, வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

ஃபார்முலா 1 ரேஸைப் பார்ப்பது

 

car Enthusiasts

 

வேகமான காரும் மனிதனும் பின்னிப் பிணைந்த இடம்.... ரேஸ் டிராக். எனவே 300கிமீ வேகத்தில் ரேஸ் டிரைவர்கள் தமது F1 காரில் ஜஸ்ட் லைக் செல்வதைப் பார்ப்பதே புல்லரிக்கும். அது Aryton Senna, Micheal Schumacher போன்ற பிரபலங்களாக இருந்தால் இன்னும் அருமை! எனவே காலப்போக்கில் ரேஸர்கள் மாறினாலும், இங்கே காட்சிகள் மாறாது; எனவே லைவ்வாக F1 போட்டியைப் பார்க்கும்போது, உங்கள் ஆதர்ச F1 டிரைவர் புயல் வேகத்தில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருப்பார். அது ஒரு வேற லெவல் ஃபீல் பாஸ்!

ஹை-பர்ஃபாமென்ஸ் டிரைவிங் வகுப்புகளுக்குச் செல்வது

car Enthusiasts

 

 ஸ்விஃப்ட்டாக இருந்தாலும், ஃபெராரியாக இருந்தாலும்... அதன் ஒட்டுமொத்தத் திறனை நம் ஊர் சாலைகளில் டெஸ்ட் செய்வது ஏறக்குறைய சாத்தியமில்லை என்றே சொல்லவேண்டும். எனவே, இதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டவைதான் ஹை-பெர்ஃபாமென்ஸ் டிரைவிங் ஸ்கூல்கள்; இதில் நேர்ச்சாலைகள், வளைவுகள், திடீர் திருப்பங்கள் போன்ற இடங்களில் காரைக் கையாள்வது குறித்து உங்களுக்கு ஒரு Professional Driver சொல்லித் தருவார். எனவே, ரேஸ் டிரைவர்களுக்கு மட்டுமல்லாமல், காரைச் சரியாக ஓட்ட விரும்புபவர்களுக்கான இடமாகவும் இது திகழ்கிறது. ஆனால், என்ன இது வழக்கமான டிரைவிங் ஸ்கூலுடன் ஒப்பிடும்போது கட்டணம் மிகவும் அதிகம்.

இந்தியா முழுக்கக் காரில் பயணிப்பது

car Enthusiasts

 

உண்மையைச் சொல்வதென்றால், இந்தியா போல பலதரப்பட்ட சாலைகளைக் கொண்ட நாடு எதுவும் இல்லை என்றே கூறலாம். உலகின் பெரிய பாலைவனங்கள், பனி படர்ந்த ஹிமாலய மலைகள், உலகின் தாழ்வான மற்றும் உயரமான சாலைகள், நீர் படர்ந்த மற்றும் நினைவுச் சின்னங்கள் நிறைந்த இடங்கள், வனப்பகுதிகள் என நம் நாட்டில் ஒவ்வொருவரின் டேஸ்ட்டுக்கு ஏற்றச் சாலைகள் இருப்பதால், காரில் ரோடு ட்ரிப் செல்வது நல்ல சாய்ஸாக இருக்கும்.

காரின் இன்ஜினை ரீ-டீயூன் செய்வது

கார்

 

இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் பட்ஜெட் காரான ஆல்டோ வெளிப்படுத்துவது வெறும் 47bhp பவர்தான்; ஆனால், அதே பவரை 83bhp பவரை வெளிப்படுத்தும் ஸ்விஃப்ட்டில் சேர்க்க முடிந்தால் எப்படி இருக்கும்? ஒரு ஹாட் ஹேட்ச்பேக் ரெடி தோழர்களே! இதுவே 180bhp பவரை வெளிப்படுத்தும் ஸ்கோடா ஆக்டேவியாவில் 50bhp பவரைச் சேர்த்தால், அதற்கு ஆடி/பிஎம்டபிள்யூ/பென்ஸ் போன்ற ஜெர்மானிய நிறுவன செடான்களுடன் போட்டி போடக்கூடிய திறன் வந்துவிடும்;  இது கொஞ்சம் காஸ்ட்லி விளையாட்டுதான். சிம்பிளாக ஹை-பெர்ஃபாமென்ஸ் ஸ்பார்க் பிளக் - ஏர் ஃபில்டர் - இன்ஜின் ஆயில் - பெட்ரோல்/டீசல் போடுவது ஒரு வகை என்றால், காரில் இருக்கும் டர்போசார்ஜர் - பிரேக்ஸ் - சஸ்பென்ஷன் - டயர்கள் ஆகியவற்றையே மாற்றுவது மற்றொரு வகை!

24 Hours of LeMans ரேஸைப் பார்ப்பது

 

car Enthusiasts

 

உலகின் மிகவும் பழமையான Endurance கார் ரேஸ்களில் முதன்மையானது 24 Hours of Le Mans. மற்ற ரேஸ்களில் வேகம் முக்கியம் என்றால், இங்கே காரின் கையாளுமை மற்றும் தரமே பிரதான பங்கு வகிக்கிறது. எனவே ஒவ்வொரு வருடமும் இந்த ரேஸின் போட்டித்தன்மை அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது. 24 மணி நேர கார் ரேஸ் என்பதால், இங்கே கார்களுக்கும் டிரைவர்களுக்கும் இடையேயான பந்தம் மிகவும் முக்கியம். 

2 ஸ்ட்ரோக் கோ-கார்ட்களை ஓட்டிப் பார்ப்பது

car Enthusiasts

 

இந்தப் பட்டியலில் இது கொஞ்சம் வித்தியாசமாகத் தெரிந்தாலும், 2 ஸ்ட்ரோக் கோ-கார்ட்டை ஓட்டுவது நன்றாகவே இருக்கும்; JK Tyre-run Rotax Max Kart Open championship போட்டியில் இருக்கும் இது, 28bhp பவரையே வெளிப்படுத்துகிறது. என்றாலும், காரின் எடை வெறும் 80 கிலோதான் என்பதால், டிரைவர் இல்லாத 2 ஸ்ட்ரோக் கோ-கார்ட்டின் பவர்-டு-வெயிட் ரேஷியோ 350bhp-யாக இருக்கிறது! இது எந்த அளவுக்கு அதிகம் என்பதை உணர்த்த, போர்ஷே Cayman S காரின் பவர்-டு-வெயிட் ரேஷியோவே 240bhpதான்!

பனியில் காரை ஓட்டுவது

 

car Enthusiasts

 

பக்கவாட்டுத் திசையில் காரை ஓட்டுவது செம என்றால், அதைப் பனியில் செய்வது வாவ்; ஆனால், அது இந்தியாவில் எளிதில் சாத்தியப்படாது; அதுவும் உங்களுக்கு அருகே ஒரு Instructor இருந்து படிப்படியாக உங்களுக்கு வழிமுறையை விளக்கும்போது, கார் தானாகவே திருப்பங்களில் கார் பக்கவாட்டில் பயணிப்பதைப் பார்க்கலாம்; நீங்கள் இந்த வித்தையைக் கற்றுத் தேர்ந்தபிறகு, ஒரு போட்டியாளருடன் ரேஸ் வைத்துக்கொள்வதில் கிடைக்கும் மகிழ்ச்சியை விவரிக்க முடியாது.

சீனாவின் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஓட்டுவது (G219)

 

car Enthusiasts

 

சீனாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் சீன நெடுஞ்சாலை 219, Xinjiang Uyghur Autonomous Region-ல் இருக்கும்  Yecheng தொடங்கி Tibet Autonomous Region-ல் இருக்கும் Lhatse வரை செல்கிறது. 2,086கிமீ தூரம் இருக்கும் இந்தச் சாலை, People’s Republic of China-வின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்தியாவும் ஒருபுறம் இது தனக்குச் சொந்தமான பகுதி எனச் சொல்கிறது; என்றாலும், Aksai Chin இந்தப் பிரச்னைக்குரிய இடத்தில்தான் உள்ளது. உலகின் உயரமான சாலைகளில் ஒன்றான இங்கேதான், Rutok County இருக்கிறது. இது இயற்கை வளம் நிறைந்த இடமாக இருந்தாலும், தரிசு நிலங்களும் அதிகமாக உள்ளது இங்குதான். இன்னும் சொல்லப்போனால், உலகின் தொலைதூரச் சாலை இதுதான் என்றும் சொல்லலாம். 

ஃபெராரியின் தொழிற்சாலை மற்றும் மியுசியத்துக்குச் செல்வது

car Enthusiasts

கதவின் ஒருபுறத்தில் Enzo கார் நின்றால், மறுபுறத்தில் F40 கார் நிற்கும் ஒரே இடம், பூமியில் உண்டு என்றால் அது ஃபெராரியின் தொழிற்சாலையாகத்தான் இருக்கமுடியும்! நமது டீன்-ஏஜ் காலத்தில் போஸ்டர்களிலும் கம்ப்யூட்டர் கேம்களிலும் பார்த்து ரசித்த கார்கள், இங்கே வரிசையாக அணிவகுத்து நிற்பதைப் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்; இதுவே மியூசியம் என்றால், 1999-ல் ஃபெராரிக்கு உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வாங்கிக்கொடுத்த F1 கார் தொடங்கி, இந்த நிறுவனம் தயாரித்த வரலாற்றுச் சிறப்புமிக்க 250 GTO முதல் சமீபத்திய LaFerrari கார்வரை ஒரே இடத்தில் பார்த்தாலே, பிறவிப்பலனை அடைந்துவிடலாம்!

ரேஸ் காரில் பயணிப்பது

car Enthusiasts

பவர்ஃபுல் காரில் ரேஸ் டிரைவருடன் சேர்ந்து ரேஸ் டிராக்கில் செல்வது மயிர்க்கூச்செரியும் அனுபவம் என்றாலும், கூடவே காரை விரட்டி ஓட்டுவது எப்படி என்பதை அருகிலிருந்து பார்க்கும் பாக்கியமும் ஒருசேரக் கிடைப்பது இங்குதான்! டிராக்கின் எந்தப் பகுதியில் கார் செல்கிறது, திருப்பத்தில் காரைச் செலுத்துமிடம் - பிரேக் பிடிக்குமிடம் - திருப்பத்திலிருந்து கார் வெளியேறும் இடம் - OverSteer/UnderSteer செய்வது என சில விநாடிகளில் நடப்பதைப் புரிந்துகொள்ளலாம்.

300கிமீ வேகத்தில் செல்வது

கார்

இது கேட்க த்ரில்லிங்காக இருந்தாலும், இந்த வேகத்தை எட்டிப்பிடிக்கக்கூடிய கார் பலரிடம் இருக்காது. ஒருவேளை கார் இருந்தால், அந்த வேகத்தில் செல்வதற்கான சாலை கிடைக்காது; என்றாலும், இந்தவகைக் கார்களில் அந்த வேகத்தில் பயணித்திருந்தாலே பயங்கரமான நினைவுகள் கிடைக்கும். எனவே ஒரு சான்ஸ் கிடைத்தால், அதை நழுவவிடாமல் பயன்படுத்திக் கொள்ளவும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close