மொட்டைத்தலை, மெலிந்த தேகம், அயர்ந்த கண்கள்... #NeedHelp Sponsored Content. | Lets help Mekala to fight Cancer Sponsored Content.

வெளியிடப்பட்ட நேரம்: 18:52 (08/10/2018)

கடைசி தொடர்பு:18:13 (24/10/2018)

மொட்டைத்தலை, மெலிந்த தேகம், அயர்ந்த கண்கள்... #NeedHelp Sponsored Content.

இந்தியா போன்ற ஜனத்தொகை மிகுதியான நாட்டில், ஒவ்வொரு வருடமும் புதிதாக 7 லட்சம் கேன்சர் நோயாளிகள் கண்டறியப்படுவதாக National Institute of Cancer Prevention and Research (NICPR) கூறுகிறது. சரியான நேரத்தில் நோய் கண்டறியப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டால், கேன்சரைக் குணப்படுத்த வாய்ப்புள்ளதாகவும் NICPR தெரிவிக்கிறது...  'கேன்சருக்கு மருந்தா, இதோ வந்துவிட்டது' எனப் பல வருடங்களாய் பல செய்திகள் வந்தவண்ணம் இருந்தாலும் உண்மையில் கேன்சர் நோயாளிகள் அனைவருக்குமான மருத்துவ முறையாய் எஞ்சி நிற்பவை கீமோதெரப்பி மற்றும் ரேடியோதெரப்பிதான். ஆனால் இதற்கு ஆகும் செலவோ இன்னும் எளியவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்துவருகிறது.

மேகலாவின் கதை...

மேகலா, 15 வயது சிறுமி. ஈரோடு மாவட்டத்தில் வசித்து வரும் மேகலாவின் தாய் மோகனாம்பாள் மற்றும் தந்தை சேகர் நெசவுக் கூலிகளாக வேலைப் பார்த்துவருபவர்கள்... அளவான குடும்பம், ஏழைகள் என்றாலும்  ஜீவனத்துக்கு ஏற்ற பணத்தைக் கொண்டு நிம்மதியாக வாழ்ந்துவந்தனர்... இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மேகலாவுக்குக் காய்ச்சலும், கடுமையான உடல் அசதியும் ஏற்பட, மருந்து மாத்திரைகள் வாங்கிக்கொடுத்தனர் பெற்றோர். இருந்தும் காய்ச்சல் குணமாகாததால், கோயம்புத்தூருக்குச் சென்று மேகலாவைப் பரிசோதித்தனர்.

சேகர் - மோகனாம்பாள் தலைமீது இடியென விழுந்தது மேகலாவுக்கு வந்திருக்கும் வியாதி பற்றிய செய்தி. மேகலாவுக்கு வந்திருப்பது Acute Myeloid Leukemia எனும் இரத்தப் புற்றுநோய் என்பதையறிந்து இருவரும் கதிகலங்கி போயினர். அபாயகரமான கட்டத்தை எட்டுவதற்குள் மேகலாவைக் குணப்படுத்த கீமோதெரப்பி செய்யவேண்டும் என்று டாக்டர்கள் கூற தங்கள் உயிரையும் கொடுத்தாவது மகளைக் காப்பாற்றுவது எனத் தீர்மானித்தனர். 

சேகர் ஒரு நெசவுக்கூலி என்பதால், மாதத்துக்கு மூன்றாயிரம் முதல் நான்காயிரம் வரை மட்டுமே வருமானமாகப் பெற்றுவருகிறார். அன்றாடத் தேவைகளுக்கே இந்தப் பணம் செலவாகிவிடும் நிலையில் மகளின் மருத்துவத் தேவைக்காக தன்னுடைய தகுதியையும் மீறி கடன் வாங்கி மருத்துவம் பார்த்துவருகிறார். முதல் ஆறு மாதங்கள் எப்படியோ ஓடிவிட, இப்போது சேகர் கையில் இருப்பது மகளை எப்படியாவது காப்பாற்றிவிடுவோம் என்கிற நம்பிக்கை மட்டுமே. ஆனால், இந்த சமயத்தில் மன தைரியத்தைவிட முக்கியமாகத் தேவைப்படுவது மருத்துவத்துக்கான பொருளுதவி. தனக்குத் தெரிந்த, தெரியாத நபர்கள் என முடிந்தவரை எல்லோரிடமும் பண உதவி பெற்றுவிட்ட சேகருக்கு இனி என்ன செய்வது எனத் தெரியவில்லை. உதவிக்கு Edudharma நிதி திரட்டும் தளத்தை நாடியுள்ளார்.

"மேகலா மிகவும் அமைதியான பெண். 10ஆம் வகுப்புத் தேர்வில் நன்றாக மார்க் எடுக்கவேண்டும் என்பதே அவள் ஆசை. ஆனால், இன்னும் இரண்டுமுறை கீமோதெரப்பி செய்தால் மட்டுமே அவள் உயிர் பிழைப்பால் என டாக்டர்கள் கூறிவிட்டனர். கண் முன்னரே தங்கள் பிள்ளையை இழந்துகொண்டிருக்கும் சோகம் எந்தவொரு தாய் தந்தைக்கும் வரவேகூடாது", எனக் கண்ணீர் விட்டுக் கதறுகிறார் அம்மா மோகனா. 

மேகலாவின் மருத்துவத்துக்கு இன்னும் ரூபாய் 6 லட்சம் தேவைப்படுகிறது, https://www.edudharma.com/campaigns/save-mekala  எனும் தளத்துக்குச் சென்று நம்மால் முடிந்த உதவியைச் செய்யலாம்!

பிறர் வியாதியால் அல்லல்படும்போது ஒருவகை பயமும், நோய்ப் பீடித்தவர்களின் மேல் ஒருவகை இரக்கமும் நமக்கு வந்தாலும், ஏதோவொரு விஷயத்தை மனதில் போட்டுக்கொண்டு அதை மறந்து கடந்துபோவோம். மேகலாவின் கதியும் அப்படியாகிவிடக்கூடாது. நாம் கொடுத்து உதவும் ஒவ்வொரு ரூபாயும் அவளைக் காப்பாற்றமுடியும். படுக்கையில் இருந்து எழுந்து மீண்டும் மேகலா பிற குழந்தைகள் போல பள்ளிக்குச் செல்ல நம்மால் ஆன உதவியை நிச்சயம் செய்வோம். தர்மம் தலைகாக்கும்...

பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை  Edudharma- வின் விளம்பரதாரர் பகுதி. இதில் கூறப்பட்டுள்ள உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் விகடன் நிர்வாகம் பொறுப்பல்ல. மேலும் வாசகர்கள் இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம். நன்கொடை செய்வதற்கு முன்னர் வாசகர்கள் உண்மைத்தன்மையை சுயாதீனமாக சரிபார்த்துக் கொள்ளவும்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close