தீபாவளிக்கு புது கார் வாங்கப் போறீங்களா... இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க! | Going to buy a new car.... read this before you decide!

வெளியிடப்பட்ட நேரம்: 10:03 (09/10/2018)

கடைசி தொடர்பு:13:19 (09/10/2018)

தீபாவளிக்கு புது கார் வாங்கப் போறீங்களா... இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!

ஃபோக்ஸ்வாகன் ஏமியோவில் புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் - ஹூண்டாய் எக்ஸென்ட்டில் ஸ்டாண்டர்டாக வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு வசதிகள் - டாடா ஜெஸ்ட்டில் Premio ஸ்பெஷல் எடிஷன் - ஃபோர்டு ஆஸ்பயரில் பேஸ்லிஃப்ட் மாடல் என காம்பேக்ட் செடான் செக்மென்ட் செம் ஹாட்டாக இருக்கிறது.

பண்டிகை காலம்... இந்தியாவில் கார் தயாரிப்பாளர்கள் தமது புதிய தயாரிப்புகளைக் களமிறக்கும் நேரமிதுதான்! இதில் புது மாடல்கள், பேஸ்லிஃப்ட், ஸ்பெஷல் எடிஷன் ஆகியவை அடங்கும். இந்த வருடத்துக்கான பண்டிகைக் காலப் பரிசாக மாருதி சுஸூகி, ஹூண்டாய், டாடா, மஹிந்திரா என இந்தியாவின் டாப்-4 கார் தயாரிப்பாளர்கள், புதிய கார்களை அறிமுகப்படுத்தும் முடிவில் இருக்கிறார்கள். அடுத்த 2 மாதத்துக்குள்ளாக வரப்போகும் ஹேட்ச்பேக்/செடான்/எஸ்யூவி என்னென்ன?

புதிய ஹோண்டா CR-V: அக்டோபர் 9, 2018

கார்

தற்போது விற்பனையில் இருக்கும் மாடலைவிட, பலமடங்கு முன்னேறியிருக்கிறது புதிய CR-V. 7 சீட் ஆப்ஷன், 120bhp பவரை வெளிப்படுத்தும் புதிய 1.6 லிட்டர் டீசல் இன்ஜின் - 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கூட்டணி, 156bhp பவரை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுக்குப் புதிய CVT கியர்பாக்ஸ் ஆகியவை இதற்கான உதாரணம். ஹூண்டாய் டூஸான், ஜீப் காம்பஸ் Limited Plus, ஃபோக்ஸ்வாகன் டிகுவான் ஆகிய கார்களுடன் போட்டிபோடு இந்த எஸ்யூவியில், மாடர்ன் வசதிகளும் - 4 வீல் டிரைவ் ஆப்ஷனும் உண்டு. புதிய ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டிருந்தாலும், இதன் எடை முன்பைவிட 140கிலோ அதிகம்.

டாடா டிகோர் பேஸ்லிஃப்ட் - அக்டோபர் 10, 2018

car'

 

மாருதி டிசையர் மற்றும் ஹோண்டா அமேஸ் ஆகியவை ஒருபுறம் மாதாந்திர விற்பனையில் புதிய உச்சத்தை எட்டியிருக்கின்றன என்றால், மறுபுறத்தில் ஃபோக்ஸ்வாகன் ஏமியோவில் புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் - ஹூண்டாய் எக்ஸென்ட்டில் ஸ்டாண்டர்டாக வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு வசதிகள் - டாடா ஜெஸ்ட்டில் Premio ஸ்பெஷல் எடிஷன் -  ஃபோர்டு ஆஸ்பயரில் பேஸ்லிஃப்ட் மாடல் என காம்பேக்ட் செடான் செக்மென்ட் செம் ஹாட்டாக இருக்கிறது. எனவே அதற்கேற்ப தனது மற்றொரு காம்பேக்ட் செடான் காரான டிகோரின் பேஸ்லிஃப்ட் மாடலைக் களமிறக்கும் முடிவில் இருக்கிறது டாடா. புதிய ஹெட்லைட் - டெயில் லைட், புதிய Dark Blue கலர், எலெக்ட்ரிக்கலாக மடிக்கக்கூடிய ரியர் வியூ மிரர்கள், க்ரோம் பட்டையுடன் கூடிய முன்பக்க பம்பர், Shark Fin Antenna என வெளிப்புறத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உள்ளன. காருக்குள்ளே ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ உடனான 7 இன்ச் Harman டச் ஸ்க்ரீன் சிஸ்டம், டிரைவர் இருக்கைக்கு Height Adjust வசதி, ரிவர்ஸ் கேமரா, கப் ஹோல்டருடன் கூடிய சென்டர் ஆர்ம்ரெஸ்ட் எனக் கணிசமான அம்சங்கள் புதிதாக இருக்கின்றன. இவையனைத்தும் XZ+ எனும் புதிய வேரியன்ட்டில் இருக்கின்றன.

டட்ஸன் கோ & கோ ப்ளஸ் பேஸ்லிஃப்ட் - அக்டோபர் 10, 2018

car

 

இந்திய வரலாற்றில் முதன்முறையாக, தனது கோ சீரிஸ் கார்களின் பேஸ்லிஃப்ட் மாடல்களைக் களமிறக்க உள்ளது டட்ஸன். LED DRL உடனான புதிய முன்பக்க பம்பர், மாற்றியமைக்கப்பட்ட ஹெட்லைட் மற்றும் கிரில், 14 இன்ச் அலாய் வீல்கள் பின்பக்கத்தில் வைப்பர் மற்றும் புதிய பம்பர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. கேபினில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே உடனான 7 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், டேக்கோமீட்டருடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 4 கதவுகளுக்கும் பவர் விண்டோஸ், வழக்கமான சீட்கள் மற்றும் ஹேண்ட் பிரேக் லீவர், மூடியுடன் கூடிய க்ளோவ் பாக்ஸ், புதிய சென்டர் கன்சோல் என கேபின் முழுமையாக மாறியிருக்கிறது. பாதுகாப்பு வசதிகளைப் பொறுத்தமட்டில், ABS - EBD - ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் - 2 காற்றுப்பைகள் ஆகியவை ஸ்டாண்டர்டாக வழங்கப்பட்டிருப்பது ப்ளஸ்.

இசுஸூ MU-X பேஸ்லிஃப்ட்: அக்டோபர் 16, 2018

car

 

ஆயுத பூஜையை ஒட்டி, தனது MU-X எஸ்யூவியின் பேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகப்படுத்த உள்ளது இசுஸூ. இன்ஜின் ஆப்ஷன்களில் மாற்றமிருக்காது என்றாலும், காரின் டிசைன் மற்றும் கேபினில் அதிக மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இதில் பெரும்பாலானவை, D-Max V-Cross பிக்-அப்பில் இருப்பவை எனத் தெரிகிறது. டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டேவருடன் போட்டி போடும் விதமாக, அதிக வசதிகள் காரில் வழங்கப்பட்டுள்ளன. 

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ - அக்டோபர் 23, 2018

santro

 

இயானுக்கு மாற்றாக, டால் பாய் டிசைனுடன் கூடிய புதிய சான்ட்ரோவைக் களமிறக்க இருக்கிறது ஹூண்டாய். இதில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே உடனான 7 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், ரியர் ஏசி வென்ட், ரிவர்ஸ் கேமரா, AMT கியர்பாக்ஸ், ரியர் வைப்பர், டூயல் டோன் கேபின் என அதிக வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதில் இடம்பெற்றுள்ள அப்டேட் செய்யப்பட்ட 1.1 லிட்டர் Epsilon பெட்ரோல் இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி, 20.3 கிமீ அராய் மைலேஜைத் தருகிறது. டாடா டியாகோ மற்றும் மாருதி சுஸூகி செலெரியோவுடன் போட்டியிடும் சான்ட்ரோவின் அனைத்து வேரியன்ட்டிலும், 2 காற்றுப்பைகள் - ஏபிஎஸ் - ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் போன்ற பாதுகாப்பு வசதிகள் இருக்கும் என நம்பலாம்.

 புதிய மஹிந்திரா Y400 எஸ்யூவி - அக்டோபர் 2018

 

car

 

தற்போது குறைவான அளவில் விற்பனையாகும் ரெக்ஸ்ட்டனைவிட மாடர்ன் டிசைன் மற்றும் இடவசதியைக் கொண்டிருக்கிறது இந்த எஸ்யூவி. 20 இன்ச் அலாய் வீல்கள், LED லைட்டிங், அறுகோண க்ரோம் க்ரில் ஆகியவை இதற்கான உதாரணம். டூயல் டோன் கேபினில் செய்யப்பட்டுள்ள லெதர் உள்ளலங்காரம் தரமாக இருக்கிறது. ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உடனான 9.2 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், 369 டிகிரி கேமரா, 7 இன்ச் LCD இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், சன் ரூஃப் என லேட்டஸ்ட் வசதிகள் அனைத்தும் இங்கே உள்ளன. 4 வீல் டிரைவ் கொண்ட இந்த எஸ்யூவியில் இருப்பது, 187bhp பவர் - 42kgm டார்க்கை வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் - 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கூட்டணி.

புதிய மாருதி சுஸூகி எர்டிகா - நவம்பர் 2018

car

 

லேட்டஸ்ட் மாருதி சுஸூகி கார்களைப் போலவே, புதிய எர்டிகாவும் Heartect ப்ளாட்ஃபார்மில்தான் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் SHVS உடனான பெட்ரோல்/டீசல் இன்ஜின் - கியர்பாக்ஸ் கூட்டண் பொருத்தப்பட்டுள்ளன. இவை பேஸ்லிஃப்ட் சியாஸில் இருப்பவையேதான்! தற்போதைய மாடலைவிட அளவில் பெரிதாகி இருப்பதால், புதிய எர்டிகாவில் இடவசதி அதிகரித்திருக்கிறது. ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல், ஸ்மார்ட் ப்ளே டச் ஸ்க்ரீன் சிஸ்டம், ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், கிளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ரிவர்ஸ் கேமரா மற்றும் பார்க்கிங் சென்சார் போன்ற அதிக வசதிகள் காரில் இடம்பெற்றுள்ளன.

மஹிந்திரா S201 எஸ்யூவி - டிசம்பர் 2018

 

கார்

 

 'ஒரே கல்லில் இரண்டு மாங்காய்' என்ற ரீதியில், போட்டிமிகுந்த காம்பேக்ட் எஸ்யூவி மற்றும் மிட் சைஸ் எஸ்யூவி செக்மென்ட்டை ஒரே நேரத்தில் எதிர்கொள்ளவிருக்கிறது மஹிந்திரா. இதில் மராத்ஸோவில் இருக்கும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி, 4 வீல் டிஸ்க் பிரேக்ஸ் அமைப்பு ஆகியவை இடம்பெறலாம். புதிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினும் இங்கே அறிமுகமாகலாம். மேலும் 17 இன்ச் அலாய் வீல்கள், சன்ரூஃப், டூயல் ஸோன் கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, க்ரூஸ் கன்ட்ரோல், பல்வேறு வசதிகளுடன் கூடிய பெரிய டச் ஸ்க்ரீன் சிஸ்டம், LED ஹெட்லைட்ஸ் - DRL - டெயில் லைட்ஸ் என வசதிகளில் எகிறியடிக்கும் எனத் தெரிகிறது. பாதுகாப்பு வசதிகளைப் பொறுத்தவரை, 7 காற்றுப்பைகள் - ABS - ESP - ரியர் பார்க்கிங் சென்சார் என அசத்த காத்திருக்கிறது இந்த எஸ்யூவி!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்