வெளியிடப்பட்ட நேரம்: 17:36 (10/10/2018)

கடைசி தொடர்பு:17:36 (10/10/2018)

``ரேகாவுக்கு மதுரை மல்லிகைன்னா ரொம்ப இஷ்டம்!'' - நெகிழும் டாக்டர் கமலா செல்வராஜ்

``தமிழ்நாட்டில் அவளுக்கு ரொம்ப பிடிச்சது, சிஸ்டர்ஸான நாங்களும் மதுரை மல்லிகையும்தான். அடர்த்தியா கட்டின மதுரை மல்லிகைப் பூவை, கொண்டையைச் சுற்றி வைச்சுக்கிறது அவளுக்கு ரொம்பப் பிடிக்கும்.''

ந்தியத் திரையுலகின் தவிர்க்கமுடியாத அழகு ஆளுமைகளில் ஒருவர், பானுரேகா. இதே நாள் (அக்டோபர் 10, 1954), சென்னையில் பிறந்த இவரை, 'ஜெமினி கணேசனின் மகள்', 'பாலிவுட் நடிகை ரேகா' என்று சொன்னால் உடனே அடையாளம் தெரியும். ரேகாவின் சகோதரியான டாக்டர் கமலா செல்வராஜிடம், தங்கையைப் பற்றி பேசினேன்.

நடிகை ரேகா

``குடும்பத்து மேலே ரொம்பப் பிரியமா இருக்கும் பொண்ணு பானு. அவள் கரியரில் எவ்வளவோ பிரச்னைகளைப் பார்த்திருக்கா. அதனாலோ என்னவோ, எல்லா விஷயங்களையும் பாசிட்டிவா அணுகுவா. கிசுகிசு பேசறது அவளுக்குச் சுத்தமா பிடிக்காது.

அப்பா மற்றும் சகோதரியுடன்

தமிழ்நாட்டில் அவளுக்கு ரொம்பப் பிடிச்சது, சிஸ்டர்ஸான நாங்களும் மதுரை மல்லிகையும்தான். அடர்த்தியா கட்டின மதுரை மல்லிகைப் பூவை, கொண்டையைச் சுற்றி வைச்சுக்கிறது பானுவுக்கு ரொம்பப் பிடிக்கும். உங்ககிட்ட பேசிக்கிட்டே, மதுரை மல்லிகையை அவளுக்கு அனுப்ப பேக் பண்ணிட்டிருக்கேன்'' என்றார் வாஞ்சையுடன்.