ரூ.5.25 லட்சத்துக்கு அறிமுகமான டாடா டிகோர் பேஸ்லிஃப்ட்! | Tata Motors Launches Tigor Facelift

வெளியிடப்பட்ட நேரம்: 21:27 (10/10/2018)

கடைசி தொடர்பு:21:27 (10/10/2018)

ரூ.5.25 லட்சத்துக்கு அறிமுகமான டாடா டிகோர் பேஸ்லிஃப்ட்!

ஹெட்லைட்ஸ் - கதவு கைப்பிடிகள் - முன்பக்க பம்பர் - கிரில் - பனி விளக்கு - டெயில் கேட் ஆகிய இடங்களில் க்ரோம் வேலைப்பாடுகள் மின்னுகின்றன.

இந்திய கார் சந்தை எவ்வளவு போட்டி நிறைந்தது என்பது, மற்றுமொருமுறை நிரூபணம் ஆகியிருக்கிறது. ஆம், ஃபோர்டு ஆஸ்பயர் பேஸ்லிஃப்ட் வெளிவந்து ஒரு வாரம்கூட ஆகவில்லை... அதற்குப் போட்டியாகத் தனது டிகோர் பேஸ்லிஃப்ட் மாடலைக் களமிறக்கியுள்ளது டாடா மோட்டார்ஸ். மொத்தம் 9 வேரியன்ட்கள் மற்றும் 6 கலர்களில் கிடைக்கும் இந்தக் காரின் சென்னை எக்ஸ் ஷோரூம் விலை 5.25 லட்சம் - 7.46 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. XZ+ எனும் புதிய டாப் வேரியன்ட் சேர்க்கப்பட்டுள்ளது; XT கிடையாது. தவிர காரின் அனைத்து வேரியன்ட்டிலும் 2 காற்றுப்பைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. 

டிகோர்

காரைப் பார்க்கும்போது சதுர வடிவிலான ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், Clear Lens LED டெயில் லைட்ஸ், shark-Fin Antenna, புதிய Egyptian Blue கலர் ஆப்ஷன் ஆகியவை முதலில் தெரிகின்றன. மற்றபடி ஹெட்லைட்ஸ் - கதவு கைப்பிடிகள் - முன்பக்க பம்பர் - கிரில் - பனி விளக்கு - டெயில் கேட் ஆகிய இடங்களில் க்ரோம் வேலைப்பாடுகள் மின்னுகின்றன. 

டிகோர்

கேபினில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே உடனான 7 இன்ச் Harman டச் ஸ்க்ரீன் சிஸ்டம் நம்மை வரவேற்கிறது. ரிவர்ஸ் கேமரா மற்றும் பார்க்கிங் சென்சார்கள் இருப்பது பெரிய போனஸ். இதனுடன் Faux லெதர் சீட்கள், எலெக்ட்ரிக்கலாக மடிக்கக்கூடிய ரியர் வியூ மிரர்கள், டிரைவர் சீட்டின் உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வசதி இருக்கிறது. மற்றபடி கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, கன்ட்ரோல்களுடன் கூடிய ஸ்டீயரிங் வீல், கப் ஹோல்டருடன் கூடிய சென்டர் ஆர்ம்ரெஸ்ட், கூல்டு க்ளோவ்பாக்ஸ் போன்ற வழக்கமான வசதிகளும் தொடர்கின்றன. 

டிகோர்

பெட்ரோல்/டீசல் இன்ஜின் - மேனுவல்/AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் இல்லை. மேலும், EPAS ஸ்டீயரிங் - Dual Path சஸ்பென்ஷன் - வீல்கள் - மோனோகாக் சேஸி - 419 லிட்டர் பூட் ஸ்பேஸ் ஆகியவற்றிலும் No Change! ஆஸ்பயர் தவிர அமேஸ், டிசையர், எக்ஸென்ட், ஏமியோ ஆகிய கார்களுடனும் போட்டிப்போடுகிறது டிகோர் பேஸ்லிஃப்ட். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close