Published:Updated:

சைபுன்னிஷா உள்ளிட்ட 4 பேருக்கு சரணடைய 4 வாரம் அவகாசம்!

சைபுன்னிஷா உள்ளிட்ட 4 பேருக்கு சரணடைய 4 வாரம் அவகாசம்!
சைபுன்னிஷா உள்ளிட்ட 4 பேருக்கு சரணடைய 4 வாரம் அவகாசம்!
சைபுன்னிஷா உள்ளிட்ட 4 பேருக்கு சரணடைய 4 வாரம் அவகாசம்!

புதுடெல்லி: நடிகர் சஞ்சய் தத்தை தொடர்ந்து மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளிகளான சைபுன்னிஷா உள்ளிட்ட 4 பேருக்கு சரணடைய 4 வாரங்கள் அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் கீழ்கோர்ட் விதித்த தண்டனையை உறுதி செய்து கடந்த மாதம் 21 ஆம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ஜாமீனில் இருந்த குற்றவாளிகள், தங்களுக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை அனுபவிக்க 4 வார காலத்தில் போலீசில் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த கால அவகாசம் ஏப்ரல் 18 ம் தேதியுடன் ( இன்று ) நிறைவடைகிறது.  இந்நிலையில், சரண் அடைய கூடுதல் அவகாசம் வேண்டி குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். 

நடிகர் சஞ்சய்தத் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், நான்கு வாரங்கள் கூடுதலாக அவகாசம் வழங்கி உத்தரவிட்டது.

##~~##
இதற்கிடையே இதே வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அல்டாப் அலி செயத், ஈஷா மேனன், யுசுப் நால்வா ஆகியோர் சரண் அடைய கூடுதல் அவகாசம் கேட்டு மனுதாக்கல் செய்தனர். இன்று அந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது அவர்கள் மூன்று பேருக்கும் கூடுதலாக நான்கு வார காலம் அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மற்றொரு குற்றவாளி சைபுன்னிஷா தாக்கல் செய்த மனு மீது இன்று  பிற்பகல் 2 மணிக்கு விசாரணை நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதி, சைபுன்னிசாவுக்கும் 4 வாரம் அவகாசம் வழங்கினார்.