வெளியிடப்பட்ட நேரம்: 19:54 (11/10/2018)

கடைசி தொடர்பு:19:57 (11/10/2018)

`96 படம் பார்த்துவிட்டு, தங்கள் ஜானு, ராமிடம் இவ்வளவு பேர் பேசினார்களா? #SurveyResult

`96 படம் பார்த்துவிட்டு, தங்கள் ஜானு, ராமிடம் இவ்வளவு பேர் பேசினார்களா? #SurveyResult

`96 படத்தின் ராம்-ஜானு, தமிழகத்தின் 80'ஸ், 90'ஸ் கிட்ஸ் அனைவரையும் தங்களது ஜானுவையும் ராமையும் நினைத்துத் தவிக்கவைத்துள்ளனர்; பலரையும் தங்களின் பள்ளியில் எடுத்த `குரூப் போட்டோக்களையும், ஸ்லாம் புக்கையும்' அலமாரிகளில் தேடவைத்துள்ளனர். பலர் பழைய பெட்டியில் பத்திரப்படுத்திவைத்திருக்கும் இங்க் படிந்த சட்டை, வாடிய ரோஜாப்பூ எனத் தங்கள் ஜானுவின் நினைவாக உள்ள பொருள்களை காதலுடன் ஒருமுறை எடுத்துப் பார்த்திருப்பீர்கள். அப்போது உங்கள் கண்களில் பெருக்கெடுத்த நீரை யாரும் பார்த்திடும் முன்னே துடைத்துக்கொண்டு, இயல்புநிலைக்குத் திரும்பியிருப்பீர்கள். அப்படி, வாசகர்களின் ஞாபகத்தில் நிறைந்திருக்கும் உங்கள் பள்ளி வாழ்க்கையின் சில அம்சங்களை நினைவுபடுத்தும்விதமாக சிறிய சர்வே ஒன்று வாசகர்களிடையே நடத்தியிருந்தோம். அதில் வாசகர்கள் அளித்த விவரம்... 

1) `நீங்கள் படித்தது, ஆண்கள் பள்ளியா... பெண்கள் பள்ளியா அல்லது co-education-னா?' என்ற கேள்வியில் poll-ஐ ஆரம்பித்திருந்தோம். அதற்கு  `ஆண்கள் பள்ளியில் படித்தோம்' என 24.8 சதவிகிதத்தினரும், `பெண்கள் பள்ளியில் படித்தோம்' என 9.7 சதவிகிதத்தினரும், `co-education-ல் படித்தோம்' என 59.8 சதவிகிதத்தினரும், `co-education. ஆனா, தனித்தனி க்ளாஸ்' என 5.7 சதவிகிதத்தினரும் பதிவிட்டிருந்தனர்.

96

2) பள்ளிகளில் படிக்கும் காலத்தில் எந்த பெஞ்ச் ஸ்டூடன்ட் என்பதிலிருந்துதான் சக மாணவனிடம் மதிப்பைப் பெற முடியும் என்பது அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களிடையே நிலவும் மனநிலை. லாஸ்ட் பெஞ்ச் ஸ்டூடன்ட் என்றால், ப்ரவுட் மொமன்ட்களில் இருப்பவர்களும் உண்டு. அதை முன்வைத்து `உங்க  க்ளாசிஸில் நீங்கள் எந்த பெஞ்ச் ஸ்டூடன்ட்?' என ஒரு கேள்வியைக் கேட்டிருந்தோம்.

`ஃப்ர்ஸ்ட் பெஞ்ச்' என 21.5 சதவிகிதத்தினரும், `லாஸ்ட் பெஞ்ச்' என 30.1 சதவிகிதத்தினரும், `மிடில் பெஞ்ச்' (கூட்டத்தில் ஒருவன்) என 45.5 சதவிகிதத்தினரும், `அவுட் ஸ்டாண்டிங் ஸ்டூடன்ட்' (அடிக்கடி வெளியில் நிற்பவர்)  என 2.9 சதவிகிதத்தினரும் பதிவிட்டிருந்தனர்.  

96

3) பள்ளி நண்பர்களைப் பற்றிய ஞாபகம் வரும்போதெல்லாம் அவர்களின் நினைவாக நாம் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் பொருள் ஒன்றை எடுத்துப் பார்த்துக்கொள்வோம். அப்படி, `உங்கள் பள்ளி நண்பர்களின் நினைவாக நீங்கள் பத்திரப்படுத்தி வைத்திருப்பது எது?' எனக் கேட்டிருந்தோம்.

அதற்கு, `ஸ்லாம் புக்' என 31 சதவிகிதத்தினரும், `பள்ளிக் காலத்தில் எடுத்த குரூப் போட்டோ' என 58.2 சதவிகிதத்தினரும், `நண்பர்கள் கொடுத்த கிஃப்ட்ஸ்' என 10.8 சதவிகிதத்தினரும் பதிலளித்திருந்தனர்.

96

4) `96' படத்தின் ஆதாரப்புள்ளியே ராமும் ஜானுவும்தான். படத்தின் ஒரு காட்சியில் நண்பர்கள் சேர்ந்து அவர்கள் இருவரின் பெயருக்கும் FLAMES போட்டுப்பார்ப்பார்கள். பள்ளிக் காலத்தில் FLAMES போட்டுப்பார்ப்பது என்பது திருமணத்துக்கு ஜோசியரிடம் 10 பொருத்தம் பார்ப்பதைப் போன்று அவ்வளவு கவனமாக மேற்கொள்ளப்படும். அதையொட்டி, `உங்களுக்கும் உங்கள் கிரஷ்க்கும் FLAMES போட்டுப்பார்த்ததுண்டா... என்ன ரிசல்ட்?' எனக் கேட்டிருந்தோம்.

இதற்கு `F-Friends' என வந்ததாக 18.1 சதவிகிதத்தினரும்,  `L-Love' என வந்ததாக  20.4 சதவிகிதத்தினரும், `A-Affection' என வந்ததாக 17.7 சதவிகிதத்தினரும், `M-Marriage' என வந்ததாக - 13.3 சதவிகிதத்தினரும், `E-Enemy' என வந்ததாக 7.8 சதவிகிதத்தினரும், `S-Sister' என வந்ததாக 1.7 சதவிகிதத்தினரும் (இவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்) பதிவிட்டிருந்தனர்.

96

5) வகுப்பறையில் தூங்காமல் பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் மிகச் சொற்பமானவர்கள். பிற்பகலில் சாப்பிட்டு முடித்ததும் நடக்கும் முதல் பாடவேளை, `உறக்கமும் உறக்கம் நிமித்தமுமாகவே முடியும்'. அதை முன்வைத்து `எந்தப் பாடவேளையின்போது அதிகமாகத் தூங்கினீர்கள்?' எனக் கேட்டிருந்தோம்.

அதற்கு, `Maths வகுப்பில் தூங்கினோம்' என 13.9 சதவிகிதத்தினரும், `Chemistry வகுப்பில் தூங்கினோம்' என 28.6 சதவிகிதத்தினரும், `Physics வகுப்பில்  தூங்கினோம்' என 25.6 சதவிகிதத்தினரும், `நீங்க எல்லாம் கிட்ஸ், மென்ஸ், நாங்க லெஜெண்ட்ஸ். எல்லா வகுப்புலயும் தூக்கம் வரும் பாஸ்' என  31.6 சதவிகிதத்தினரும் தூங்கி வழிந்ததாக, குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்கள்.

96

6) விளையாடுவதற்காகவே பள்ளிக்குச் செல்பவர்கள் பலர். பள்ளிகளில் விளையாடுவதற்காகவே புதிய விளையாட்டுகளைக் கண்டுபிடித்த பெருமைக்குரியது நம் சமூகம். அந்த விளையாட்டுகளை நினைவூட்டும்விதமாகக் கேட்கப்பட்ட கேள்வி. `நீங்கள் விளையாடிய ஃபன் கேம் எது?' என்ற கேள்விக்கு,

`Hand Cricket' என 33.4 சதவிகிதத்தினரும், `Pen fight' என  19.2 சதவிகிதத்தினரும், `எறிபந்து' என 21.5 சதவிகிதத்தினரும், `7 ஸ்டோன்ஸ்' என 25.8 சதவிகிதத்தினரும் பதிலளித்திருந்தனர்.

96

7) நிறைய பெண்கள் தங்களின் புத்தகத்தில் சில பொக்கிஷங்களைப் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருப்பர். அப்படி `உங்கள் புத்தகத்துக்குள்  நீங்கள் பத்திரப்படுத்தி வைத்திருந்த பொருள்?' எனக் கேட்டிருந்தோம்.

அதற்கு, `மயிலிறகு' என 30.9 சதவிகிதத்தினரும், `சாக்லேட் கவர்' என 22.9 சதவிகிதத்தினரும், `ரோஜாப்பூ' என 14.9 சதவிகிதத்தினரும், `நாங்கல்லாம் வேற லெவல். நாங்க புக்கையே பத்திரமா வெச்சுக்கிட்டதில்லை' என 31.3 சதவிகிதத்தினரும் பதிவிட்டிருந்தனர். 

96

கடைசிக் கேள்வியாக, `உங்கள் ஜானுவிடம் ராமுவிடம் பேசினீர்களா?' எனக் கேட்டிருந்தோம். வரலாற்று முக்கியத்துவமிக்க அந்தக் கேள்விக்கு, `பேசவில்லை' என 55.6 சதவிகிதத்தினரும், `போன் அட்டெண்ட் செய்யவில்லை' என 2.5 சதவிகிதத்தினரும், `பேசினேன்' என 8.6 சதவிகிதத்தினரும், `அடபோங்கப்பா! நாங்கெல்லாம் முரட்டு சிங்கிள்' என 33.3 சதவிகிதத்தினரும் பதிவிட்டிருந்தார்கள்.

96

Poll-ல் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகள். உங்கள் பதிலையே உங்கள் நண்பரும் கூறினாரா எனக் கேட்டுத் தெரிந்துகொள்ளவும். 


டிரெண்டிங் @ விகடன்