வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (11/10/2018)

கடைசி தொடர்பு:18:40 (11/10/2018)

`வாகன விற்பனையில் புதிய உச்சம்!’ - உலக சாதனை படைத்த ஹீரோ மோட்டோகார்ப்

உலகிலேயே ஒரே மாதத்தில் அதிக வாகனத்தை விற்பனை செய்த நிறுவனம் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது ஹீரோ மோட்டோ கார்ப்.

ந்தியாவில் உள்ள இருசக்கர வாகனம் தயாரிக்கும் நிறுவனத்தில் அதிகளவு வாகனத்தை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஹீரோ மோட்டோ கார்ப். இந்த நிறுவனத்தின் விற்பனையானது கடந்த செப்டம்பர் மாதத்தைக் காட்டிலும் அதிகளவு வாகனம் விற்பனையாகி  உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது. 

ஹீரோ

கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் இருசக்கர வாகனத் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சி 11.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஹீரோவின் நிறுவனரான பிரிஜ்மோகன் லால் முன்ஜால், அப்போதைய உலகின் நம்பர் 1 மோட்டார் சைக்கிள் நிறுவனமான ஜப்பானின் ஹோண்டாவிடம், கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி, 1983-ம் ஆண்டில் ஒப்பந்தம் கையெழுத்தானது. பிறகு 1984-ம் ஆண்டில்,  `ஹீரோ ஹோண்டா மோட்டார்ஸ்' நிறுவனம் உதயமானது. இந்த நிறுவனத்தின் முதல் தொழிற்சாலை, ஹரியானாவில் உள்ள Dharuhera என்ற இடத்தில் தொடங்கப்பட்டது. ஹீரோ ஹோண்டா முதன்முதலாக 1985-ம் ஆண்டு `சிடி 100' என்ற மாடலில் முதன்முதலாக இந்தியாவில் இரு சக்கர வாகனத்தை அறிமுகம் செய்தது.

தற்போது இந்தியாவின் மிகப் பெரிய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக மாறிய ஹீரோ மோட்டோ கார்ப், கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 7,69,138 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. அதாவது இந்தியா முழுவதும் ஒரு நாளைக்கு 25,000-க்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஹீரோ ஹோண்டா பார்ட்னர் ஷிப்பால் `இந்தியாவின் நம்பர் 1 சைக்கிள் தயாரிப்பாளர்' என்ற இடத்திலிருந்து, `உலகின் நம்பர் 1 மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளர்' என்ற தனித்துவம் வாய்ந்த உச்சத்தை எட்டிப்பிடித்ததுடன், அந்தப் பெருமையை இன்று வரை தக்கவைத்துக்கொண்டிருக்கிறது ஹீரோ மோட்டோகார்ப். 

இதுவரை எந்த ஒரு இருசக்கர வாகன நிறுவனமும் விற்பனை செய்திராத அளவுக்குக் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 7.5 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து உலகிலேயே ஒரே மாதத்தில் அதிக வாகனத்தை விற்பனை செய்த நிறுவனம் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம். கடந்த மாதம் மட்டும் 6.7 சதவிகிதம்  விற்பனை வளர்ச்சியடைந்துள்ளது. இந்த நிறுவனம் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 7,20,729 வாகனங்களை விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது. 

ஹீரோ

இதற்கு அடுத்த இடத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 4,30,939 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து, 17 சதவிகித வளர்ச்சியை அடைந்துள்ளது. இதில் உள்நாட்டில் விற்பனையானவை 2,73,029 வாகனங்கள். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது 1,22,260 வாகனங்கள். இதைத்தொடர்ந்து, டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் (3,50,854) மாதத்தை விட செப்டம்பர் (4,10,696) மாதத்தில் 59,842 வாகனங்களை அதிகம் விற்பனை செய்துள்ளது. மேலும், சுஸுகி மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் விற்பனை இருமடங்கு உயர்ந்து 72,134 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் செப்டம்பரில் 71,662 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இருசக்கர வாகன விற்பனையில் கடந்த ஆண்டை ஒப்பிட்டுப் பார்க்கையில் ஹோண்டா நிறுவனம் மட்டுமே 9 சதவிகிதம் விற்பனையில் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு 2017 செப்டம்பரில் 6,01,998 வாகனங்களை விற்பனை செய்த ஹோண்டா நிறுவனம் 2018 செப்டம்பரில் 5,55,730 மட்டுமே விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க